அடிவாங்கும் அபிஷேக், பாவமில்லை பயங்கரமான பாவனி.. களைகட்டும் பிக் பாஸ் வீடு

Bigg Boss 5 Tamil Day 18 Review Abishek Priyanka Raju விளையாட்டுக்கு நடுவே யாரும் விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்கவில்லை என்றும் பொருள்களை சேதப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் பிக் பாஸ் சொன்னாரே.. என்னவாக இருக்கும்

Bigg Boss 5 Tamil Day 18 Review Abishek Priyanka Raju
Bigg Boss 5 Tamil Day 18 Review Abishek Priyanka Raju

Bigg Boss 5 Tamil Day 18 Review Abishek Priyanka Raju : பிரியங்கா Vs ராஜு என்கிற அளவிற்குப் பனிப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே போகிறது நம் பிக் பாஸ் வீட்டில். அதுமட்டுமா! இவ்வளவு நாள் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த அபிஷேக்கிற்கு எல்லா பக்கத்திலிருந்தும் நோஸ் கட் செய்யப்பட்டு, இப்போது எந்தப் பக்கம் செல்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். இடைவெளிக்கு முன்பு ‘பாவம் பாவனி’ என்று நினைக்க வைத்தவர், இடைவெளிக்குப் பிறகு ‘பயங்கரமான பாவனி’ என மிரள வைத்தார். அக்ஷராதான் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்கிற மைண்ட்செட்டில் செய்வதறியாது இருக்கிறார். இத்தனை மாற்றங்களும் ஒரே எபிசோடில். வாங்க விரிவாகப் பார்ப்போம்..

பிரியங்கா கொடுக்கிற அழுத்தம் காரணமாக ஏற்கெனவே மனமுடைந்து அழுதுகொண்டிருந்த அக்ஷராவை சமாதானம் செய்ய பிக் பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்துப் பேசினார். சின்ன குழந்தைபோல வீட்டிற்குப் போகவேண்டும் என்று அடம் பிடித்த அக்ஷராவை தேற்றி, ‘நீங்கள் நீங்களாகவே இருங்க. நல்லா விளையாடிட்டு இருக்கீங்க’ என்று தன்னம்பிக்கை கொடுத்தார் பிக் பாஸ். என்றாலும், தன்னுடைய கடந்த காலத்தை மாற்ற முடியாது என்றும் வேறு அம்மா, அண்ணா கிடைக்க மாட்டாங்க என்றும் கூறியது வலிகளின் வெளிப்பாடாகவே இருந்தது. இதனை ஏனோ பிரியங்கா புரிந்துகொள்ளவில்லை. தன் கையில் எதுவுமில்லாத கடந்த காலத்தைக் காரணமாக வைத்து அக்ஷராவை பிரியங்கா டார்கெட் செய்வது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. புரிந்துகொண்டால் சிறப்பு.

ஆனால், உள்ளே இப்படி அக்ஷரா அழுது புலம்பிக்கொண்டிருக்க வெளியே பிரியங்கா நேர்மையாகவும் கண்ணியமாகவும் இந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்று தன்னுடைய கேங்கிடம் பேசிக்கொண்டிருந்தது, பரிதாபத்தையே வரவைத்தது.

இத்தனை நாள் என்ன விளையாட்டு இது, யாருகிட்ட என்ன நாணயங்கள் உள்ளது, எதையாவது சொல்லுங்க அல்லது எங்களுக்காவது காட்டுங்க பிக் பாஸ் என்று விவாதித்துக்கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு நேற்று விடை கிடைத்திருக்கும். பிரேக்கிற்கு முன்பு, மிகவும் பாவமான முகத்தை வைத்துக்கொண்டு சிபியிடம் ‘தனக்கும் ஒரு நாணயம் எடுத்துக் கொடுக்கலாமே. அது என்ன இசைவாணிக்கும், தாமரைக்கும் மட்டும் உதவி செய்றீங்க’ என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், பிரேக்கை தொடர்ந்து யாரிடம் என்ன நாணயம் இருக்கிறது என்பதை சொல்லுங்கள் என்று பிக் பாஸ் அறிவிப்பு வந்ததும், பாவனி சென்றார் பாருங்க! அவ்வளவுதான்… இம்புட்டு நேரம் இந்த பெண்ணுக்காக ஃபீல் பண்ணோம். இப்படி ஆகிடுச்சே! என்று குமுறாதவர்கள் யாருமில்லை. ஆனால், நல்லா விளையாடுறீங்க பாவனி.

இவ்வளவு நாள் கேள்விக்கு விடையாக, தாமரை, இசைவாணி, வருண், நிரூப் மற்றும் பாவனி ஆகியோர்களிடம்தான் நாணயங்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு ஏரியாவிற்கும் தலைவர் பொறுப்புகள் பிரித்துத் தரப்பட, மீண்டும் நாணயத்தைப் பாதுகாக்க வேண்டும், இடத்தை கைப்பற்றலாம் என விளையாட்டு ஆரம்பமானது. விளையாட்டு தொடங்கியதோ இல்லையோ அபிஷேக்கின் ஆட்டம் ஆரம்பமானது. எல்லா தலைவரிடமும் சென்று நாணயத்தை எடுத்துக்கொள்கிறேன் என்று பேரம் பேசிக்கொண்டிருந்தார்.

இத்தனை நாள்கள் பொறுத்துக்கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸ் நேற்று பொங்கி எழுந்துவிட்டனர். ஆம், நம் அபிஷேக்கிடம்தான். பிரியங்காவை ஏத்தி விடாதே என்று நிரூப் முதல் ஏன் நாணயம் உனக்குக் கொடுக்கவேண்டும் என்று எதிர்த்துப் பேசிய சுருதி வரை பணிந்து பேசியவர்கள் யாவரும் எதிர்த்துப் பேசியதும், அடங்கிப்போவது தெரியாத அளவிற்கு அப்படியே விலகினார் அபிஷேக். வேற லெவல் ஆட்டமா இருக்கே!

அடுத்ததாக ஒவ்வொரு ஏரியாவையும் கைப்பற்றிய அந்தந்த தலைவர்கள், இதுதான் மற்றவர்களை வெச்சு செய்யவேண்டிய நேரம் என மற்றவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால், நிரூப் மற்றும் அபிஷேக் தங்களின் படுக்கை அறையில் சின்னப்பொண்ணு மற்றும் அண்ணாச்சிக்கு சலுகைகள் அளித்து எந்த நேரம் வேண்டுமானாலும் வந்துகொள்ளலாம் என்று தெரிவித்தனர். அவ்வளவு நல்லவங்களா நீங்க? ஹ்ம்ம்…

இறுதியாக ஐம்பூதங்களில் தங்களை எதனுடன் சாப்பிடுகிறீர்கள், குறைகளாக யாரை எதனுடன் சாப்பிடுகிறீர்கள் என்ற டாஸ்கில், பிரியங்கா அக்ஷராவை சொல்லாமல் ராஜூவை கூறினார். அதிலும் அவருடைய விளக்கம் கொஞ்சம் மோசமானதாகவே இருந்தது. அதற்கு பதிலடியாக ராஜு பிரியங்காவிற்கு நெகடிவ் பாயின்ட்ஸ்களை அடுக்கினார். விஜய் டிவி செல்ல பிள்ளைகள் இப்படி அடித்துக்கொள்கின்றனர் என்றுதான் தோன்றியது. அதெல்லாம் இருக்கட்டும், விளையாட்டுக்கு நடுவே யாரும் விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்கவில்லை என்றும் பொருள்களை சேதப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் பிக் பாஸ் சொன்னாரே.. என்னவாக இருக்கும்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil day 18 review abishek priyanka raju

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com