Advertisment
Presenting Partner
Desktop GIF

தாமரையின் நிலையும் சுருதி, பாவனியின் விளையாடும் - யார் பக்கம் நியாயம்?

Bigg Boss 5 Tamil Day 23 Review Pavni Surudhi Thamarai ஏற்கெனவே அகஷரா மற்றும் ராஜுவுக்கு பாவனியோடு பனிப்போர் நிலவுவதால், இதுதான் சரியான சமயம் என்றபடி தாமரைக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்தனர்.

author-image
priya ghana
New Update
Bigg Boss 5 Tamil Day 23 Review Pavni Surudhi Thamarai

Bigg Boss 5 Tamil Day 23 Review Pavni Surudhi Thamarai

Bigg Boss 5 Tamil Day 23 Review Pavni Surudhi Thamarai : கன்டென்ட் கிங் அபிஷேக் ராஜா வெளியேறியதை அடுத்து, யார் அவருடைய  நிரப்புவார்கள் என்கிற கேள்வி நிலவி வந்த நிலையில், நேற்றைய எபிசோடை ஒரே ஒரு பிரச்சினையை வைத்து ஓட்டினர். இந்த ஒரு நாணயத்துக்கு அக்கப்போரா என்கிற ரேஞ்சில், கன்டென்ட் கிடைக்காமல் ஒரே பிரச்சினையைச் சுற்றிச் சுற்றி காட்சிப்படுத்தியது கடுப்பை கிளம்பினாலும்.. வேறு வழி இல்லை. சரி, அப்படி என்னதான் பிரச்சனை?

Advertisment

நெருப்பின் வாரமான நேற்றைய எபிசோடில், 'நெருப்புடா நெருங்குடா..' பாடலோடு நாள் தொடங்கியது. பாடல் முடிந்த வேகத்தோடு சுருதி மற்றும் பாவனி டிஸ்கஷனைதான் காட்டினார் பிக் பாஸ். கேமராக்கள் இல்லாத பிரைவேட் பகுதியான ட்ரெஸ்ஸிங் ரூமில் தாமரை இருக்க, அவரிடம் இருந்து நாணயத்தை எடுத்துவிடலாம் என்கிற சூப்பரான பிளானை பாவனியிடம் சுருதி பகிர்ந்துகொள்ள, இப்படிக் கேட்டுவிட்டாரே! இவருக்கு உதவி செய்யலாமா வேண்டாமா என்கிற குழப்பத்திலிருந்தார் பாவனி.

publive-image

எப்படியோ ஒரு வழியாகத் தாமரையிடம் இருந்த நாணயத்தை உடை மாற்றும் அறைக்குள் சென்று பாவனி உதவி செய்ய, சுருதி எடுத்துக்கொண்டார். இதனை சுதாரித்துக்கொண்ட தாமரை, அந்த நேரத்தில் அரைநிர்வாணத்தில் இருந்ததால் கத்தமுடியாமல் இருந்ததாகவும், அரக்கப்பரக்க உடையணிந்து வெளியே வந்து சுருதியிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கடுமையான வார்த்தைகள் விட, நமக்கு கன்டென்ட் ரெடியானது.

 ஏற்கெனவே இந்த பிரைவேட் அறைக்குக் கூட்டிச் சென்று நாணயம் இருக்கிறதா என்று சின்னபொண்ணுவை சோதனை செய்ததற்காகப் பிரியங்கா எச்சரிக்கப்பட்டார். சோதனைக்கான அனுமதியோடு கூடவே அக்ஷராவின் இருப்போடும் நடத்தப்பட்ட சோதனையே தவறு என்று கூறும்போது, ஒருவர் உடை மாற்றும் நேரத்தில் நாணயத்தை எடுப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? ஒரு வகையில் இது தந்திரமான 'செக் மேட்' ஸ்ட்ராடஜி என்றாலும், அந்த நாணயம் எடுக்கப்பட்ட முறை தவறு.

publive-image

அதிலும், பாவனி அடித்த அந்தர்பல்டி எல்லாம்  கேம் பிளே. தனிப்பட்ட அறையில் எது நடந்தாலும் அதை நம்மால் காண முடியாது என்பதனால் தங்கள் இஷ்டத்திற்கு கதைகளைக் கட்டிவிடுகின்றனர். நாணயத்தை எடுப்பதைப் பார்த்துவிட்டால், உடனே கத்தி ஜெயிலுக்கு அனுப்பலாம். ஆனால், தாமரை நின்றிருந்த நிலையில் கத்தமுடியாது என்பதால் அதையும் தன்னால் செய்யமுடியவில்லையே என்கிற இயலாமையே தாமரைக்கு மனஅழுத்தத்தை கொடுத்திருக்கும்.

இந்த அழுத்தமே அவரை கடுமையாகப் பேசவும் வைத்திருக்கிறது. ஆனால், இதுபோன்ற ரியாக்ஷனை சற்றும் எதிர்பார்க்காத சுருதி, செய்வதறியாத சிறிது நேரம் ரெஸ்ட் ரூம் ஏரியாவிலேயே அமர்ந்திருந்தார். மேலும், தாமரைக்கு ஆதரவாகத் திரண்ட கூட்டத்தைப் பார்த்து பயந்துபோன பாவனி ஏதேதோ உலர ஆரம்பித்துவிட்டார். இருதரப்பினரும் இந்த விஷயத்தை வெறும் விளையாட்டாகப் பார்த்திருந்தால் இந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. இதே போன்ற சண்டைதான் சென்ற வாரம் நிரூப் மற்றும் பிரியங்கா இடையே நடைபெற்றது. ஆனால், அதனை இருவரும் கையாண்ட விதம் மெச்சூர்டாக இருந்தது.

publive-image

பிரியங்கா நிரூப் இருவருக்குமான சண்டை அவர்களுக்குள்ளேயே தீர்க்கப்ட்டன. அவர்களைத் தாண்டி எங்கேயும் போகவில்லை. ஆனால், தாமரை பக்க நியாயம் இருந்தாலும் இது வெறும் விளையாட்டு மட்டுமே. இதற்காகக் கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் செய்தது கொஞ்சம் ஓவர்தான். சுருதி சொன்னதுபோல, தாமரைக்கான விளையாட்டை எப்போதுதான் ஆரம்பிப்பார் என்பது தெரியவில்லை.

இதை சண்டைக்கு இடையில், தாமரை வீச்சென கத்தியதும் பயந்து போன ராஜூவை பிரியங்கா அரவணைத்துக்கொண்ட விதம் கியூட். என்னதான் ஒரு விஷயத்தை மற்றவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்றாலும், ஒரு பெண்ணிடம், 'நீங்கள் உடையணிந்து இருக்கும்போது நாங்கள் வந்தால் சரியாகுமா' என்று ராஜு வினவிய விதம் தவறுதான். போட்டியில் ஆண், பெண் பேதம் இல்லை என்றாலும், அந்த இடத்தில் ஆணாக இருந்தாலுமே இன்னொரு ஆண் தன்னுடைய தனிப்பட்ட அறையில் இருக்கும்போது அவருடைய அனுமதி இல்லாமல் நுழைவதும் தவறுதான்.

publive-image

இத்தனை களேபரங்களுக்கு இடையில், இந்த வாரத்தின் கேப்டன் மது எங்கே போனார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய நிலைப்பாடு பாவனி மற்றும் சுருதி பக்கம் இருந்தாலும், அதிக கூட்டம் இருக்கும் தாமரையோடுதான் பாதி நேரம் செலவழித்தார். இருப்பினும் அவருடைய குரல் ஒலிக்கவில்லை. என்ன கேப்டன் இதெல்லாம்? இதுபோன்ற சமயங்களில் அபிஷேக் இருந்திருந்தால் நிச்சயம் வேறு லெவலுக்கு இதனைக் கொண்டுபோயிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கெனவே அகஷரா மற்றும் ராஜுவுக்கு பாவனியோடு பனிப்போர் நிலவுவதால், இதுதான் சரியான சமயம் என்றபடி தாமரைக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்தனர். இதையெல்லாம் பார்த்து பயந்துதான் நேற்று பாவனி உளறினாரோ!

publive-image

இதற்கிடையில் நிரூப் பாவனிக்கு சப்பாத்தி சூடு செய்து படுக்கை அறைக்கே கொண்டு வந்து கொடுக்க, அதைப் பார்த்த பிரியங்கா தனக்கும் சர்க்கரை போட்டுக் கொண்டு வந்து கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால், முடியாது என்று கிளம்பினார் நிரூப். என்னதான்யா நடக்குது இங்க? இவர்கள் பஞ்சாயத்து ஒருபுறம் இருக்க, சமையலறையை முழுவதும் தன் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று பொறுப்புகளை இசைவாணியிடம் கொடுத்தால், அவரை யாரும் மதிப்பதே இல்லை என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக தனியே புபுலம்பிக்கொண்டிருந்தார். இனி ஆட்டம் ஓவராக இருக்கும் என்று அண்ணாச்சி சொன்னதாலோ என்னவோ இசைவாணியை யாரும் கண்டுக்கவே இல்லை போல.

publive-image

இறுதியாக இந்த வாரத்தின் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் அறிவிப்பு வந்தது. வழக்கம்போல கிராமமா நகரமா டாஸ்க்தான். ஆனால், இம்முறை சற்று வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதிலும், நகரத்திலேயே வளர்ந்த பலர் கிராமத்து கெட்டப்பில் என்னென்ன அட்ராசிட்டிகள் செய்யப்போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. சரி, தாமரை சுருதி விஷயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Pavani Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment