தலைப்பிற்குக்கூட கன்டென்ட் இல்லாம போகுதே பிக் பாஸ்!
Bigg Boss 5 Tamil Day 24 Review Pavni Suruthi Thamarai Chinnaponnu இதற்குமேல் பிரியங்காவோடு அபிஷேக் இருந்தால் நிச்சயம் அவருடைய பெயர் டோட்டல் டேமேஜ் என்கிற பதற்றத்தால் அபிஷேக்கை வெளியேற்றி இருப்பார்களோ!
Bigg Boss 5 Tamil Day 24 Review Pavni Suruthi Thamarai Chinnaponnu
Bigg Boss 5 Tamil Day 24 Review Pavni Suruthi Thamarai Chinnaponnu : 'எங்கே தேடுவேன்.. கன்டென்ட்டை எங்கே தேடுவேன்..' என்று குமுறும் பிக் பாஸ் எடிட்டரின் மைண்ட் வாய்ஸ், நேற்றைய ஏபிட்சோடில் சத்தமாகவே கேட்டது. என்னதான் ஆச்சு நம்ம பிக் பாஸுக்கு? ஒரே புகை மண்டலம். அதிலும் நேற்றைய டாஸ்கை எல்லாம் எப்படி யோசித்தார்கள் என்றே தெரியவில்லை. 1 மணிநேரம் வெட்டியாக நகர்த்தியதுதான் மிச்சம்!
Advertisment
ஊரு விட்டு ஊரு வந்து.. என்கிற பாடலோடு அதிரடியாகதான் ஆரம்பமானது 24-ம் நாள். ஆனால், போகப்போக தூக்கத்தைத்தான் வரவழைத்தது. முந்தைய நாள் புலம்பிக்கொண்டிருந்த இசைவாணி எதையாவது செய்து கன்டென்ட் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால், நிரூப் சமைக்கும்போது எண்ணெய்யின் அளவை அளந்து ஊற்றிக்கொண்டிருந்தார். சமையல் பொருள்களை வீணாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்தான் என்றாலும், இந்த கன்டென்ட் எதற்கு பிக் பாஸ்? சமையலறையைச் சுற்றிக்காட்டுவதற்கா?
சரி, இசைவாணி பாடுதான் இப்படி இருக்கிறது, நிச்சயம் பாவனி மற்றும் சுருதி இணைந்து எதையாவது செய்து கன்டென்ட் கொடுப்பார்கள் என்று நினைத்தால், அவர்கள் இருவரும் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்து 'நாங்கள் செய்தது சரியாய் தவறா?' என்று பழைய பஞ்சாங்கத்தையே வைத்துக்கொண்டு பிக் பாஸிடம் மன்றாடிக்கொண்டிருந்தனர். உள்ளே என்ன நடந்தது என்று தெரியாமல், பிக் பாஸிற்கே இந்த விஷயத்தில் முடிவு எடுப்பது சிரமமாக உள்ளது போல. அந்த விடையை மட்டும் சொல்ல என்ன தயக்க பாஸு? என்றாலும், தாமரை இருக்கும் பக்கமே போகக்கூடாது என்று சபதம் எடுத்திருப்பார்கள் போல், இருவரும் வீட்டில் மிக அமைதியாகவே உலா வந்துகொண்டிருந்தனர்.
Advertisment
Advertisement
இவர்களுக்கும் கன்டென்ட் இல்லை. சரி, நம்ம பிரியங்கா ஏதாவது சுவாரசியமா செய்வாங்க என்று எதிர்பார்த்தால். அவருக்கு, கிராமத்து ஸ்நாக்ஸ் வகைகளை பிடிங்கி சாப்பிடுவதற்கே நேரம் சரியாக இருக்கும்போல. அபிஷேக் ராஜ் வெளியேறியதிலிருந்து, ப்ரியங்கா பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார். நிரூப்புடனும் அவ்வளவாகப் பேசுவதாகத் தெரியவில்லை. ராஜுவோடு இணைந்து நடனமாடுவது, சாப்பிடுவது போன்று சில இடங்களில் மட்டுமே பிரியங்காவையும் காண முடிந்தது. நல்ல வேளை, தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டார். ஆனாலும், இந்த மினி கேங் தானாகவே பிளவுபட்டதா அல்லது பிக் பாஸ் செயலா என்பதில் சந்தேகம் எழுகிறது. இதற்குமேல் பிரியங்காவோடு அபிஷேக் இருந்தால் நிச்சயம் அவருடைய பெயர் டோட்டல் டேமேஜ் என்கிற பதற்றத்தால் அபிஷேக்கை வெளியேற்றி இருப்பார்களோ!
பிறகு கிராமத்தினர் அவர்களுடைய கஞ்சி, கூழ் வகைகளை சாப்பிட்டு நகரத்தினரை உசுப்பேற்றுவதும். இதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்பதற்காக நூடுல்ஸ், பாஸ்தா என்று நகரத்தினர் கிராமத்தினரை வெறுப்பேற்றுவதும் என இப்படிதான் இந்த பிக் பாஸ் எபிசோட் நகர்ந்தது. இந்த நிலையில்தான், அக்ஷரா மற்றும் ஐக்கி நகரத்தினரின் பிரெட் பாக்கெட்டை ஒளித்து வைத்துவிட, அதற்காக நிரூப் பொங்கி எழ என ஒரு மாதிரி சுவாரசியமாகவும் கடுப்பேற்றுவது போலவும் கலவையாக நகர்ந்தது. என்னத்த சொல்லுறது!
இதற்கிடையில், தாமரை மற்றும் சின்னபொண்ணுவின் கிராமிய பெர்ஃபாமன்ஸ் உண்மையில் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அவ்வளவு அழகாக இருந்தது.
நகரத்தான், கிராமத்தான் போன்று வேஷம் போட்டதெல்லாம் சரிதான் ஆனால், அவர்களுக்கான டாஸ்க் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதுதான் அந்த கடினமான டாஸ்குகளை அடுக்கினார் பிக் பாஸ், எங்கே இருந்துதான் இப்படிப்பட்ட டாஸ்கை எல்லாம் யோசிக்குறாங்களோ. 1000 ரூபாய்க்குக் கூட செல்லாத பொழுதுபோக்கு விளையாட்டை, டாஸ்க் என்கிற பெயரில் பிக் பாஸ் கொடுத்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். நெருப்பு வாரம் என்பதற்காகத் தீயை வைத்து விளையாடவேண்டும் என்று நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், விளையாட்டுதான் மிஸ்ஸிங். வேறு நல்ல ரூமா போட்டு யோசிச்சுட்டு வாங்க பிபி. இதுபோன்ற விளையாட்டுகளில் சுவாரசியம் சேர்க்கலாமே.
மதுமிதா, வீட்டின் தலைவர் பொறுப்பை மிகவும் அலட்சியமாக எடுத்துக்கொண்டார் என்றுதான் தோன்றுகிறது. பாவனி, சுருஷி மற்றும் தாமரை சண்டையாகட்டும், இசைவாணியின் பிரச்சினையாகட்டும் இப்படி வீட்டில் நடக்கும் எந்த விஷயத்திலும் மது அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை. மேலும், ஆங்கிலத்தில் பேசி அவரே பலமுறை விதிமுறைகளை மீறிவிடுகிறார். இதனால், மிகவும் சோர்வாகவே காணப்பட்டார். இதனைத் தூண்டிவிடும் வகையில், நேற்றைய டாஸ்கில் சுவாரசியமற்றவர்களைத் தேர்வு செய்யும்போது மது பெயர் வந்தது அவருக்கு மேலும், மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது. இதனால், ஒரு கட்டத்தில் மனமுடைந்து அழவும் செய்தார் மது, அவரை தாமரை சமாதானம் செய்துகொண்டிருந்தார்.
இறுதியாக சுவாரஸ்யமில்லாத பெர்ஃபாமர்களை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சமும் யோசிக்காமல் பாவனி மற்றும் மது தேர்வு செய்யப்பட, அவர்களுக்கு இரவு முழுவதும் நெருப்பு பந்தத்தை அணையாமல் இருக்க டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த கொடுமையின் உச்சமாக, நெருப்பு நாணயம் வைத்திருக்கும் ஒரு பாவத்திற்காக இசைவாணியும் இரவு முழுவதும் கண் விழித்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பிக் பாஸின் இந்த அறிவிப்பிற்கு அவ்வளவு நேரம் குலுங்கி குலுங்கி சிரித்தனர் மற்ற ஹவுஸ்மேட்ஸ். இப்படிதான் நம் ஒரு மணிநேரத்தை வீணடித்துவிட்டு ஏனோ தானோ என நகர்ந்து நேற்றைய எபிசோட்! ஆனாலும், இந்த ப்ரோமோ கட்டிற்கு எந்தக் குறைச்சலும் இல்லை!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil