‘ப்ரோமோ காட்சி எங்கேடா?’ – வழக்கம்போல தன் வேலையை காட்டிய பிக் பாஸ்!

Bigg Boss 5 Tamil Day 3 Review Priyanka Surudhi Iman Tamil News யாரவது சாப்பிட்டுக்கொண்டே பிக் பாஸ் பார்க்கலாம் என்று நினைத்தால், ப்ளீஸ் வேண்டாம்.

Bigg Boss 5 Tamil Day 3 Review Priyanka Surudhi Iman Tamil News
Bigg Boss 5 Tamil Day 3 Review Priyanka Surudhi Iman Tamil News

Bigg Boss 5 Tamil Day 3 Review Priyanka Surudhi Iman Tamil News : ஆஹா.. வழக்கமா பண்ணுற வேலையை ஆரம்பித்துவிட்டார் பிக் பாஸ். பரபரப்பான ப்ரோமோவை போட்டுவிட்டு, செம்ம கன்டென்ட் இருக்கும்போல என்று நம்பி டிவி முன்பு அமர்ந்தால், காலியான பாக்கெட்டை காண்பித்து ஏமாற்றிவிடும் பழக்கம் இன்னும் பிக் பாஸை விட்டுப் போகவில்லை. சண்டை ஆரம்பம் என்று பல கட்டுகளை படபடவென்று போட்டுத்தள்ளியவர்கள், மெயின் பிக்ச்சரில் எதையும் காட்டவில்லை. ‘அடப்போங்கப்பா’ என்கிற மனக்குமுறல்தான் மிச்சம். சரி போனாபோகட்டும்… எப்படி இருந்தது மூன்றாம் நாள்? பார்ப்போமா…

எப்போதும் நடனமாடுபவர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த சிபி முதல் முறையாக நேற்று வேற லெவல் குத்தாட்டத்தைப் போட்டார். பின்ன, அவர் உண்மையில் நடித்து நடனமாடிய ‘வாத்தி கமிங்…’ பாடலாச்சே. சும்மா இருப்பாரா? இதனைத் தொடர்ந்து பல் துலக்கும் நேரத்திலும், நம் மக்கள் கன்டென்ட் கொடுக்க தவறுவதில்லை. ‘சின்னப்பொண்ணு நைட்டியை காணோம்’ என்பதுதான் பஞ்சாயத்து. இதற்காக பிக் பாஸிடம் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார் பிரியங்கா. அதுமட்டுமா, 20 பேருக்கு எப்படி இந்த சின்ன குக்கர் மற்றும் மற்ற பாத்திரங்கள் போதுமானதாக இருக்கும் என்கிற நம்முடைய மைண்ட் வாய்ஸ் ப்ரியங்காவிற்கு எட்டிவிட்டதுபோல. அதை அப்படியே பிக் பாஸிடம் குற்றச்சாட்டாக வைத்தார்.

‘நைட்டி இருக்குமா இருக்கு’ என்று கூறி அந்த நைட்டி பிரச்சினையை முடித்துவைக்க, மழையில் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தனர் நம் பட்டாம்பூச்சிகள். பிறகு பாட்டுப்பாடி தங்களின் பொழுதைபோக்கிவிட்டு டாஸ்க் அறைக்கு அனைவரும் சென்றனர். ஆஹா,ப்ரோமோவில் பார்த்த அந்த கன்டென்ட் வரப்போகிறது என்கிற ஆவலிலேயே அண்ணாச்சியின் கதையை ஸ்கிப் செய்தும் சிலர் பார்த்துள்ளனர். ஆனால்,என்ன பயன். தன்னுடைய கடினமான வாழ்க்கை பதிவை நகைச்சுவை உணர்வோடு பகிர்ந்துகொண்டதாலோ என்னவோ, நமிதாவிற்கு சினிமா கதைபோல் தோன்றிற்யிருக்கிறது. நடியாவிற்கோ ஒன்றும் புரியவில்லையாம். கஷ்டத்தை கஷடப்பட்டபடியே சொல்லியிருந்தால் நானும் ஏதாவது இன்ஸ்பைர் ஆகிருப்பேன் என்று அபிநய் கூற, இவர்கள் அனைவரும் அண்ணாச்சிக்கு டிஸ்லைக்ஸ் வழங்கினார். ஆனால், இதுபற்றியெல்லாம் நினைத்து பெரிதாக ஃபீல் பண்ணவில்லை நம்ம அண்ணாச்சி.

‘என்னய்யா நீங்க? அழுதுட்டு சொன்னாலும், போல்டா சொல்லுன்னு சொல்லுறீங்க, நகைச்சுவையா சொன்னா அழுனு சொல்லுறீங்க’ என்கிற மைண்ட் வாய்ஸ்தான் நம்மை தொற்றியது. ஆனாலும், ‘ப்ரோமோவில் போட்டுக்காட்டப்பட்ட அந்த சண்டை எங்கே’ என்று காத்துக்கொண்டிருந்தால், ஒரு சாக்லேட்டுக்கு சண்டைபோட்டுக்கொள்வதுபோல சிபியும் நிரூப்பும் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் தூண்டிவிட்டு, எதுவுமே நடக்காததைப்போல் அமர்ந்திருந்தார் அபிதேக். அட! நம்ம அண்ணாச்சி கதை சொன்னப்போ நிரூப் சிரித்தாரா, அபிஷேக் ‘என்ன கதைடா இது’ என்பதுபோல் உச்சிக்கொட்டினாராம். இதுதான் பஞ்சாயத்து. இவர்களுக்கு இன்னும் பயிற்சி அவசியம்!

வந்த நாளிலிருந்து நீண்டு ஒலித்துக்கொண்டிருந்த ராஜுவின் வாய்ஸ், நேற்று காணாமல் போனது. ஆனால், பிரியங்கா வழக்கம்போல சும்மா கிழி கிழி கிழிதான். முதல்நாள் ஆண் போட்டியாளர்களின் ரிவ்யூ முடிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று பெண் போட்டியாளர்களுக்கான ரிவ்யூ. அதில் முதலில் சிக்கியது ஐக்கி பெரி. அவரைப் பற்றிய ஜோசியம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தாமரை அக்காவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அபி. தாமரை தன் நெற்றியில் இட்டிருக்கும் விபூதி பற்றி, அபிஷேக் சொன்ன கமென்ட் தாமரையை கோவப்படுத்திவிட, அதனை சமூகமாகவே கையாண்டார் அபிஷேக். பயங்கரமான ஆளா இருக்காரேப்பா!

எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசனில் ரெஸ்ட் ரூம் சுத்தம் பற்றிய பேச்சுகள், கேட்பதற்கு சகிக்கவில்லை. யாரவது சாப்பிட்டுக்கொண்டே பிக் பாஸ் பார்க்கலாம் என்று நினைத்தால், ப்ளீஸ் வேண்டாம். அவர்கள் பேசுவதைக் கேட்க முடியவில்லை.

அடுத்ததாக சுருதி கடந்து வந்த பாதையை மிகவும் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். தன் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் ஒரே வயது என்று சுருதி கூறியதன் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் வலிகளை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. அதிலும், தன்னுடைய தந்தை இறந்ததிற்கு மகிழ்ச்சியடைந்ததாகக் கூறியதெல்லாம் வலிகளின் உச்சம். உங்கள் வாழ்க்கையில் சின்ன முடிவெடுத்தாலும், நன்கு சிந்தித்து எடுக்கவேண்டும் என்று சுருதி சொன்னதில் ஆழமான அர்த்தம் உள்ளது. இவருடைய கதையைக் கேட்ட போட்டியாளர்கள் யாரும் டிஸ்லைக் கொடுக்கவில்லை.

அக்ஷரா, தாமரை, அன்னாசி உள்ளிட்டோர் எலிமினேஷன் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அப்படி என்றால் என்ன என்று தாமரை கேட்டதும், முதல் சீசனில் நாமினேஷன் என்றால் என்ன என்று கஞ்சா கருப்பு கேட்டதுதான் நினைவுக்கு வந்தது. வழக்கம்போல அபிஷேக், பிரியங்காவை கலாய்க்க, அவரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். எப்போது பிரியங்கா வெடித்துச் சிதறப்போகிறார் என்பது தெரியவில்லை. இப்போதுதான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறோம், இப்படிதான் கன்டென்ட் கொடுக்கவேண்டும் என்று ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒரு ஃபார்முக்கு வருகின்றனர். ஆனாலும், அந்த ப்ரோமோ கட்டை, கட் செய்திருக்கக்கூடாது எடிட்டரே!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil day 3 review priyanka surudhi iman tamil news

Next Story
‘எங்க அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் ஒரே வயது’ பிக் பாஸ் அரங்கையே அழவைத்த ஸ்ருதி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X