மிரள வைத்த ‘புலிகேசி’ மதுமிதா, மிரட்டிய ரத்தக்கண்ணீர் ராதா..

Bigg Boss 5 Tamil Day 31 Review Raju Priyanka Madhu கழிவறையை உபயோகிப்பதும்கூட ஸ்லோ மோஷனில் பயன்படுத்தினால், மற்றவர்களுக்கு அது வேதனைதானே!

Bigg Boss 5 Tamil Day 31 Review Raju Priyanka Madhu
Bigg Boss 5 Tamil Day 31 Review Raju Priyanka Madhu

Bigg Boss 5 Tamil Day 31 Review Raju Priyanka Madhu : பேசுவதற்குப் பெரிதாக எதுவுமில்லை என்றாலும் வீட்டில் சிலரின் நடனம் மற்றும் நடிப்பு ரசிக்க வைக்கும் வகையில் இருந்தது. அதிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மதுமிதாவின் அதிரடி பெர்ஃபாமன்ஸ் உண்மையில் ஷாக்கிங்தான். ராஜுவின் நடனம் அனைவரையும் நடனமாட வைத்தாலும், அவருடைய ஷோ டைம்தான் உண்மையில் டாப் டக்கர்.

‘ஒரு குச்சி ஒரு குல்ஃபி..’ பாடலோடு ஆரம்பமானது 31-ம் நாள். காலையிலேயே ஸ்பெஷலான காலை உணவைத் தயாரித்து வைத்திருந்த அபிநய், நிரூப் எழுந்ததுமே அவரிடம் சென்று கொடுத்தார். பிறகு, மற்ற போட்டியாளர்களுக்கு என்ன டாஸ்க் கொடுக்கலாம் என்று தீவிரமாக ப்ரியங்காவோடு டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தார் நிரூப். ஆனால், அந்த டாஸ்குகளை செய்து காட்டுவது போன்ற எந்த ஒரு காட்சியும் ஒளிபரப்பாகவில்லை.

இதனைத் தொடர்ந்து நேரடியாக நடனம்தான். முதலாவதாக ‘தெய்வத்திருமகள்’ விகாரம் போல் உடையணிந்த அபிநய் நடனம். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்தது அவருடைய உடல் அசைவுகள் மற்றும் முகபாவனைகள். இவரைத் தொடர்ந்து அக்ஷராவின் நடனம். ‘மின்சார கண்ணா..’ பாடலுக்கு நீலாம்பரி போன்று நடனம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சற்று ஏமாற்றமே. பரதநாட்டியம் என்பதாலோ என்னவோ இது தடுமாற்றம். வெஸ்டர்ன் நடனம் ஆடுவதுபோன்ற  கொடுத்திருக்கலாமோ!

தெய்வத்திருமகள் பாடலை கேட்டதுமே, தன்னுடைய மகளின் நினைவு வந்து அக்ஷராவிடம் கண்கலங்கினார் அபிநய். இதனை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே கதாபாத்திரத்தில் அதே உடல் மொழியோடு சிவாஜியாக அண்ணாச்சியும் எம்.ஆர்.ராதாவாக ராஜுவும் டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து சுருதியின் ஷோ டைம். அவர் என்ன கதாபாத்திரம் என்பதிலேயே பலருக்கும் பல குழப்பம் உள்ள நிலையில், இப்போதாவது அந்த கதாபாத்திரத்தைப்போன்று நடித்துக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே. யாருதான்மா நீ? என்கிற மைண்ட் வாய்ஸ் இன்னும் மக்கள் மனதில் உள்ளது. அவருடைய பாடலுக்கான பெர்ஃபாமன்ஸுக்கு அனைவரும் வெயிட்டிங்.

அடுத்தது முழுமையான புலிகேசியாகவே மாறிய மதுமிதாவின் நடனம். உண்மையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்தது அவருடைய நடனம். அதிலும் தாமரையுடன் ஜோடி சேர்ந்து ஆடுகையில், வேற லெவல். இவரைத் தொடர்ந்து வருணின் ஷோ டைம். யாரையும் சிரிக்க வைக்க முடியாமல் போனதனால், இனி எல்லா வேலைகளையும் ஸ்லோ மோஷனில் செய்யவேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அதனை மற்றவர்களுக்காகத் தண்டனையாகவே மாற்றிவிட்டார் வருண். கழிவறையை உபயோகிப்பதும்கூட ஸ்லோ மோஷனில் பயன்படுத்தினால், மற்றவர்களுக்கு அது வேதனைதானே!

பிறகு, வடிவேலுடைய நேசமணி வேடமிட்ட பிரியங்காவின் நடனம். அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கையில், அவருடைய பெர்ஃபாமன்ஸ் கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்தது எனலாம். என்றாலும், வீட்டில் உள்ள அனைவரையும் ஆடவைத்தது அந்தப் பாடல். அடுத்தது, ஐக்கியின் ஷோ டைம். அவருடைய எத்துப்பலைப் பார்த்தாலே நமக்கு சிரிப்பு வந்துவிடும். அதிலும் யாரை எல்லாம் சுலபமாக சிரிக்க வைக்க முடியும் என்பதைத் தேர்ந்தெடுத்து, பக்காவாக ஸ்லெட்ச் போட்டு தன்னுடைய ஷோ டைமை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், ஐக்கிக்கு ஏன் ஆச்சி வேடத்தைக் கொடுத்தார்கள் என்பதுதான் புரியவில்லை. ஒருவேலை, அந்த ஹேர் கலரிங் காரணமாக இருக்குமோ!

அடுத்தது எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ராஜுவின் நடனம். திரும்பத்திரும்ப ஒரே ஸ்டெப்பை போட்டாலும், வீட்டில் உள்ள அனைவரையுமே ஆடவைத்தார். எல்லோருடனும் தாமரையின் காம்போ பக்காவாக மேட்ச் ஆனது. இவருடைய இந்த கலக்கல் நடனத்தைத் தொடர்ந்து, அவருடைய ஷோ டைமும் ஆரம்பமானது. எடுத்த எடுப்பிலேயே தாமரை, இசைவாணியை சுலபமாக சிரித்துவைத்துவிட, மற்றவர்களையும் சிரிக்க வைப்பதில் வெற்றிபெற்றார். வீட்டிலேயே அதிக நபர்களை சிரிக்கவைத்த ஒரே போட்டியாளராக ராஜு விளங்கினார்.

இறுதியாக மது மற்றும் ராஜு இந்த வாரத்தின் சிறந்த பெர்ஃபாமர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தைப் பற்றியும் அண்ணாச்சி கமென்ட் அடிக்க, அதில் அக்ஷராவை மட்டும் இன்னும் நல்ல செய்திருக்கலாம் என்று கொஞ்சம் நெகட்டிவ்வாக சொல்ல, அவ்வளவுதான்.. வழக்கம்போல மனமுடைந்து அழ தொடங்கினார். பிறகு அதற்கான தெளிவான விளக்கத்தை இருவரும் அமர்ந்து பேசினார்கள். பிறகு, நாம் ப்ரோமோவில் பார்த்ததைப்போல பாவனி மற்றும் நிரூப்பின் சண்டை அரங்கேறியது. ஆனால், தன்னுடைய வழக்கமான பாணியில் பிரச்சினையைச் சரிசெய்தார் நிரூப். இதுக்குதான் இத்தனை அக்கப்போரா என்பதுபோல் இருந்தது நேற்றைய எபிசோட்.

என்னடா ஸ்பான்சர் டாஸ்க் குறைவாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், வசந்த் & கோ டாஸ்க் நடைபெற்றது. இத்துடன் நேற்றைய தினம், ஒருசில நல்ல நடனம் மற்றும் நாடகத்தோடு நிறைவடைந்தது. இவ்வேளையில் அபிஷேக் இல்லாமல் போய்விட்டதே!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil day 31 review raju priyanka madhu

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express