அண்ணாச்சியின் முயற்சி இப்படி ஆகிடுச்சே.. அபிநய்க்கு கட்டம் சரியில்லையோ!
Bigg Boss 5 Tamil Day 36 Review Priyanka Raju Isaivani Imman பிரியங்காவின் பானையை உடைத்து அபினையை கேப்டனாக்கச் செய்தார் அண்ணாச்சி. இருந்தும் என்ன பயன்? அடுத்த நிமிடமே அந்த வாய்ப்பும் தன்னை விட்டுச் சென்றது.
Bigg Boss 5 Tamil Day 36 Review Priyanka Raju Isaivani Imman பிரியங்காவின் பானையை உடைத்து அபினையை கேப்டனாக்கச் செய்தார் அண்ணாச்சி. இருந்தும் என்ன பயன்? அடுத்த நிமிடமே அந்த வாய்ப்பும் தன்னை விட்டுச் சென்றது.
Bigg Boss 5 Tamil Day 36 Review Priyanka Raju Isaivani Imman
Bigg Boss 5 Tamil Day 36 Review Priyanka Raju Isaivani Imman : எதிர்பாராத சுருதியின் வெளியேற்றத்தை அடுத்து, இந்த வாரத்தின் ஆளுமை, புது கேப்டன் தேர்வு, நாமிநேஷன் என விறுவிறுப்பாக நகர்ந்தது நேற்றைய எபிசோட். சுவாரசியமான சம்பவங்கள் குறைவு என்றாலும் சில ட்விஸ்ட்டுகளை காண முடிந்தது. அப்படி என்னதான் அந்த ட்விஸ்ட்டுகள்?
Advertisment
'முக்கால முக்காபுலா..' பாடலோடு அதிரடியாக ஆரம்பமான 36-ம் நாள், ஆகாயத்தின் ஆளுமையைக் கொண்ட வாரமாக அறிவித்தார் பிக் பாஸ். அதவாது ஆகாயம் நாணயம் வைத்திருக்கும் பாவனியின் ராஜ்ஜியம்தான் இந்த வாரம். நிரூப்பிற்கு சொன்னதுபோல, ஓர் உதவியாளரைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்கிற ஆப்ஷன் தரப்பட்டதை அடுத்து, நிரூப்பின் வழியையே பின்பற்றினார் பாவனி. அக்ஷராவோடு இருந்த மனக்கசப்பை தன்னுடைய உதவியாளராக நியமித்து அதனை சரிசெய்தது போல், தாமரையுடனான வாய்க்கால் தகராற்றைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று பாவனி நினைத்திருப்பார் போல. ஆனால், அக்ஷரா போன்று எதிர்த்து எந்த வார்த்தையும் பேசவில்லை தாமரை. என்றாலும், 'இப்படி வந்து மாட்டிகிட்டேனே!' என்கிற அவருடைய மைண்ட் வாய்ஸ் மட்டும் நமக்கு சத்தமாகவே கேட்டது.
பாவனி கொடுத்த வேலையை தன்னால் முடிந்தவரை சிறப்பாகவே செய்துகொண்டிருந்தார் தாமரை. இதனைத் தொடர்ந்து வீட்டின் தலைவருக்கான தேர்வு அரங்கேறியது. கொஞ்சம் வித்தியாசமாக வைக்கலாம் என்று நினைத்த பிக் பாஸ், சென்ற வாரம் வெற்றிபெற்றவர்களின் புகைப்படத்தை வைத்து சோளக்காட்டு பொம்மைப்போன்று அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்தனர். தாங்கள் ஏன் வீட்டின் தலைவராகவேண்டும் என்று கேப்டன்சி போட்டியில் இருப்பவர்கள் பிரச்சாரம் செய்ய, எதிரணியில் இருந்து ஒவ்வொருவராக வந்து யார் கேப்டனாக வேண்டாமென்று நினைக்கிறார்களோ, அவரின் பானையை 'படார்' என்று உடைக்கவேண்டும். இதில் முதலில் அடிபட்டது அக்ஷரா. கேட்கவே வேண்டாம். 'அதெப்படி இப்படி உடைக்கலாம்?' என்று வழக்கம்போல வருணிடம் புலம்ப ஆரம்பித்தார் அக்ஷரா. ஆனால், அதே நேரத்தில் சிபியின் என்ட்ரியும், வருணின் சைகையும் வேற லெவல்.
Advertisment
Advertisements
நிரூப், அபிநய் ஆகியோர் தங்களை கேப்டனாக்குங்கள் என்று ஒவ்வொருவரிடமும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, பிரியங்கா அனைவரையும் தூக்கி சாப்பிடுவதைப் போன்று தன்னுடைய பிரச்சாரத்தை ஸ்பாட்டிலேயே தொடங்கினார். அங்கேயும் நிரூப்பிற்கும் பிரியங்காவிற்கும் வாக்குவாதங்கள் தொடர், இவர்கள் பிரச்சனையில் மட்டும் தலையிடவே கூடாது என்று கூறிக்கொண்டு ஒதுங்கிய ராஜு, அப்படியே நம்மைப் பிரதிபலிப்பது போன்று இருந்தது.
பிறகு, இசைவாணி வருணின் பானையை உடைக்க, தாமரை மதுமிதாவின் பானையை உடைக்க, ஐக்கி பாவனியின் பானையை உடைக்க, ராஜு நிரூப்பின் பானையை உடைக்க என வரிசையாக 'படார்' சத்தம் கேட்டது. இறுதியாக, பிரிங்காவா அபிநயா என்கிற போட்டி வரும்போது, கடந்த வாரங்கள் முழுவதும் மக்களை சந்தித்து வந்த அபிநய் இம்முறை சந்திக்காமல் இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடு பிரியங்காவின் பானையை உடைத்து அபினையை கேப்டனாக்கச் செய்தார் அண்ணாச்சி. இருந்தும் என்ன பயன்? அடுத்த நிமிடமே அந்த வாய்ப்பும் தன்னை விட்டுச் சென்றது. கட்டம் சரியில்லையா!
ஆம், தங்களிடம் இருக்கும் நாணயத்தை உபயோகிக்க யாருக்காவது விருப்பமா என்று பிக் பாஸ் கேட்க, 'நான் ரெடி' என்று ஆஜரானார் இசைவாணி. இறுதியாகவே காப்பாற்றப்படுகிறாரே, அவரை காப்பாற்றிவிடலாம் என்று நினைத்து அண்ணாச்சி அபினையை தேர்ந்தெடுத்தது கேப்டனாக்கினார் அண்ணாச்சி. ஆனால், இந்த நேரத்தில் அவருக்கு ஆப்பு வைப்பதுபோல வருகிறாரே என்று நினைத்த அண்ணாச்சி, அந்த நாணயத்தை இசைவாணி உபயோகிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தார். இந்த சிறிய வாக்குவாதத்தை மீறி, நாணயத்தைப் பயன்படுத்தி வீட்டின் கேப்டனானார் இசைவாணி. 'போச்சா' என்றபடி அபிநய்யின் முகம் வாடிப்போனது. அப்படி என்றால் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது..?
அடுத்ததாக நாமினேஷன் டாஸ்க். இம்முறை மூன்று பேரை நாமினேட் செய்யவேண்டும் என்று கூற, ராஜு, அக்ஷரா, அண்ணாச்சி, சிபி, அபிநய், பாவனி மற்றும் மதுமிதா தேர்வாகினர். ஒவ்வொருவருடைய பார்வையும் காரணங்களும் வேறுபட்டாலும், என்றோ ஒரு வாரத்தில் நடைபெற்ற டாஸ்க்கில், கட்டிப்பிடிப்பது பற்றி ஐக்கி பேசிய விஷயத்தை இன்றும் வைத்துக்கொண்டு அவரை நாமினேட் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதுவும், அது வாக்குவாதத்திற்கான பாயின்ட் மட்டுமே என்று ஐக்கி பலமுறை கூறியும், இதனை ஒரு காரணமாக பாவனி சொல்லுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இறுதியாக அபிநய் மற்றும் இசைவாணியின் சமரசப் பேச்சுவார்த்தையோடு நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது. ஏற்கெனவே டேஞ்சர் ஜோனில் இருக்கும் அபிநய்யின் நிலை, இந்த வாரம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil