/tamil-ie/media/media_files/uploads/2021/11/Niro.jpg)
Bigg Boss 5 Tamil Day 38 Review Niroop Iykki Annachi Isaivani
Bigg Boss 5 Tamil Day 38 Review Niroop Iykki Annachi Isaivani : சென்னை வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று இருக்கும்போது, எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டும் நடைபெறுகிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை. என்றாலும், எப்படியோ இருக்கும் க்ளிப்பிங்கை வைத்து மேனேஜ் செய்துகொண்டிருக்கிறார்கள் போல. 'நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை' டாஸ்க் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. முந்தைய நாள் போல நேற்றும் சண்டைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஆனாலும் அபிநய் வாய்ஸ் கொஞ்சம் தூக்கலாகக் கேட்கிறதோ? என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Niv.png)
'மெர்சல் அரசன்..' பாடலோடு ஆரம்பமான நேற்றைய தினம், இசைவாணியை இன்னும் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கவேண்டும் என்கிற பிக் பாஸின் அறிவுரையோடு ஆரம்பமானது. இதையடுத்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் இந்த அறிவிப்பைத் தெரிவிக்க, 'உண்மையில் இப்படி பிக் பாஸ் திட்டிருப்பாரா அல்லது இசைவாணி பில்ட் அப் கொடுக்கிறாரா என்கிற சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பார்த்தனர் மற்ற ஹவுஸ்மேட்ஸ். அதென்னவோ தெரியவில்லை, இசைவாணி எது செய்தாலும் மற்ற ஹவுஸ்மேட்ஸால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவருடைய வயதுதான் இதற்குக் காரணமோ!
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Isai2-1.png)
இதனைத் தொடர்ந்து பொம்மை விளையாட்டு ஆரம்பமானது. பிளான் செய்தது போல இல்லாமல், நிரூப் வேறு விதமாக தன்னுடைய ஆட்டத்தை தொடர, அதில் வந்து மாட்டிக்கொண்டார் அபிநய். இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கும் ஏற்கெனவே வாய்க்கால் தகராறு இருக்க, இப்போது மேலும் முட்டிக்கொண்டது. எப்போதும் முதன்மையாக ஓடி கூடாரத்திற்குள் சென்றுவிட வேண்டும் என்று நினைப்பவர்கள், இம்முறை நான்கு பேர் வெளியேவே நின்றுகொண்டிருந்தனர். இசைவாணி அண்ணாச்சி பொம்மையை வைத்திருப்பதால், அவரை அவுட்டாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தவர் கூடாரத்திற்குள் நுழையவில்லை. இதைப் பார்த்த அண்ணாச்சியும் கூடாரத்திற்குள் செல்லவில்லை. ஆனால், அப்படி உள்ளே போகாமல் இருந்தால் அடிபடுவது என்னவோ ஐக்கிதான். ஆமா, அண்ணாச்சி கையில் இருப்பது ஐக்கி பொம்மை. இதனைப் பார்த்து அவர் ஒரு பக்கம் புலம்பிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அபிநயிக்கும் நிரூப்பிற்கும் சண்டை தொடங்கியது.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Abin.png)
அபினையை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்த நிரூப், தான் பிளான் பண்ணிய ஐக்கி பொம்மையை எடுக்கவில்லை. அதனால்தான் அண்ணாச்சியிடம் ஐக்கி பொம்மை இருந்தது. நிரூப்பின் இந்த வில்லத்தனமான ஸ்மார்ட் ஸ்ட்ராடஜியை கண்டு வியப்பாகத்தான் உள்ளது. ஆனால், இது தெரியாமல் இன்னும் ஐக்கி இப்படி வெள்ளந்தியாக இருக்கிறாரே என்று சக போட்டியாளர்களுமே ஃபீலிங்ஸில் மூழ்கினர். இதையடுத்து, இசைவாணிக்கு அண்ணாச்சியையும், அண்ணாச்சிக்கு இசைவாணியையும் பிடிக்காது என்பது ஊருக்கே தெரியும் என்று ராஜு உடைக்க, இசைவாணியின் சாதுரிய பேச்சால் சண்டை முட்டிக்கொள்ளாமல் போனது.
இந்த டாஸ்க்கிலிருந்து ஒவ்வொரு போட்டியாளர் வெளியேறிய பிறகும், யார் உதவினார்கள், யார் முதுகில் குற்றினார்கள் என்ற கேள்வியை வைத்து, போட்டியாளர்களுக்குள் பற்ற வைக்கலாம் என்று நினைத்த பிக் பாஸுக்கு பெரிய நோஸ் கட்தான் பரிசாகக் கிடைத்தது. 'நீங்க பத்தவெச்சுடுவீங்க.. நாங்கதானே கஷ்ட படனும்' என்பது போல ஒவ்வொரு போட்டியாளர்களும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசினார்கள். உங்க பிளான் இப்படி ஆகிடுச்சே தல!
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Nir4-5.png)
என்றாலும், இந்த வாக்குவாதங்களுக்கு இடையே அபிநய் மற்றும் நிரூப்பிற்கு மீண்டும் வார்த்தை மோதல் ஆரம்பமானது. 'சண்டை என்றாலே பிடிக்காது, ஒதுங்கிவிடுவேன்' என்று கூறிய அபிநய், கடந்த இரண்டு நாள்களாகக் குரலை உயர்த்தி பேசுகிறார். ஒருவேளை இந்த வாரம் இவரைக் காப்பாற்றிவிடுவார்களோ! அப்படி என்றால் மதுமிதாதான் இந்த வாரம் வெளியேறுவாரோ! என்ன ஒரு பிளான் பிக் பாஸ்... நடக்கட்டும். அப்போ நம்ம வோட்டிங் எல்லாம் சும்மாதானா? கொஞ்சம் கூட சரியே இல்லை BB.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us