/tamil-ie/media/media_files/uploads/2021/12/Pav.jpg)
Bigg Boss 5 Tamil Day 59 Review Amir Pavni Abinai Priyanka Niroop
Bigg Boss 5 Tamil Day 59 Review Amir Pavni Abinai Priyanka Niroop : அமீர் பாவனியுடன் சேர விடக்கூடாது, பாவனி அமீரை தம்பியை போலதான் பார்க்கிறார் என்பதை அமீர் மூளையில் பதியவைக்கவேண்டும் என்பதை முழு மூச்சாக எடுத்துக்கொண்டு அபிநய் செயல்பட்டதுதான் நேற்றைய எபிசோடின் ஹயிலைட். இப்படியெல்லாம் இருந்தால், ராஜு ஏன் அப்படியெல்லாம் கேள்வி கேட்கப் போகிறார்? ஆனாலும், இதை ஒரு ஸ்க்ரிப்ட் என எடுத்து அதற்கு ஏன் ஓர் குழுவாக இவ்வளவு உழைப்பைப் போடவேண்டும் என்பதுதான் கேள்விக்குறி. என்னவோ!
சிபி மற்றும் அக்ஷராவிடம் அமீர் செய்திகளை சேகரித்த விதம் அருமை. தன்னைப்போலத் தான் அக்ஷராவும் செல்லமாக வளர்ந்த குழந்தை என்றும் தான் சீக்கிரமே பெற்றோர்களின் நிழலிருந்து தனியே சென்றதால் இப்போது கொஞ்சம் மெச்சூர்டாக இருப்பதாகவும் அக்ஷரா இப்போதுதான் தனியே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார் என்பதையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்தார் சிபி. செல்ல குழந்தைகளின் சூடான சண்டை எப்போது முடிவுக்கு வருமோ!
பாவனியை மட்டுமே வைத்து ஏராளமான பிரச்சனைகள் வீட்டில் இருக்கும்போது, உதாரணமாகத் தாமரையிடமிருந்து நாணயத்தை எடுத்தாக இருக்கலாம் அல்லது ராஜு உடனான மனக்கசப்பாக இருக்கலாம். இப்படி உண்மையான பிரச்சனைகள் பல இருக்கும்போது, எந்த ஒரு பிரச்சினையும் இல்லாத அமீர் - பாவனி உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் எதற்கு என்பது புரியவேயில்லை.
சுற்றிச் சுற்றி பாவனி அமீரை நிருப்பை பார்ப்பதுபோல ஓர் சகோதரனாகத்தான் அமீரையும் பார்க்கிறார் என்று அபிநய் பலமுறை அமீரிடம் கூற, அவர் என்னுடைய கிறுக்கு நண்பி என்று பதிலளித்து மொக்கை வாங்கினார் அபிநய். இதெல்லாம் தேவையா அபு? மேலும், இரண்டு வாரங்கள் மட்டுமே அமீர் வீட்டினுள் இருப்பார் என்று பாவனி கூறியதாக நன்கு அழுத்திக் கூறினார் வருண். ஏன் வருணும் இப்படி ஜால்ரா அடிக்கிறார் என்பதும் தெரியவில்லை. பாவனியுடன் அபிநய் மட்டும்தான் நெருங்கிப் பழக வேண்டுமா என்ன? இப்படி பாவனியுடன் நெருங்கவிடாமல் செய்யும் வேலைப்பாடுகளில் அபிநய் இருந்தால் நிச்சயம் ராஜுவுக்கு எழுந்த கேள்வி அனைவர்க்கும் எழத்தானே செய்யும்.
என்னதான் அபிநய் இப்படி விழுந்து விழுந்து பாவனியை கவனித்தாலும், தான் தனிமையில்தான் இருக்கிறேன் என்பதைப் பதிவும் செய்தார் பாவனி. ஆம், பிரியங்கா அபிஷேக்கின் இந்த பிரிக்க முடியாத நட்பை பற்றி வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பார்வையைக் கேட்டபோது, அபிஷேக் போன்ற நண்பன் தனக்கு இல்லையே என்று வருந்துவதாக பாவனி கூர், அதான் அபிநய் உங்களைத் தாங்குகிறாரே என்று ராஜு மீண்டும் கேள்வி கேட்க, அதெல்லாம் வேற டிபார்ட்மென்ட் என்று கூறி அந்த அளவிற்கு பாவனி அபிநயின் பாசத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை அபிநயிக்கே பதிவு செய்தார் பாவனி.
வீட்டிலேயே அழகான பெண் யார் என்ற கேள்வியை வருணிடம் முன்வைத்தபோது, அக்ஷராவைதான் சொல்லப்போகிறார் என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, பிரியங்காவைக் கூறி ஸ்மார்ட்டாக எஸ்கேப் ஆகிவிட்டார் வருண். உங்கள் கண்களே போதுமே வருண். இப்படி கலகலவென நகர்ந்துகொண்டிருக்கும் இந்த டாஸ்க்கில், ராஜுவின் வானிலை அறிக்கை மிகவும் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. ஒவ்வொருவரும் வீட்டை விட்டு வெளியேறும்போது எவ்வளவு கண்ணீர் சிந்தினார்கள் என்ற அடிப்படையில் மழை அப்டேட், சண்டை சலசலப்பின்போது எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் வெப்பநிலை அப்டேட் என ராஜுவின் இந்த ஸ்க்ரிப்ட் வேற லெவல். இதற்கு ஸ்பெஷல் பாராட்டுகளைக் கொடுத்து, மதிப்பெண்ணை ஏத்தி இருக்கலாம் சஞ்சீவ்!
இந்த வீட்டில் யாரை நிரூப் கண்மூடித்தனமாக நம்புகிறார் என்ற கேள்வியை முன்வைத்தபோது, அண்ணாச்சியை நிச்சயம் சொல்லுவார் என்று நினைக்கையில் ராஜு மற்றும் பிரியங்கா என்ற நிரூப்பின் பதில் அண்ணாச்சியைக் கலங்க வைத்ததோ இல்லையோ, அபிஷேக் மனமுடைந்தார். அதனை ஏற்றிவிடும் வகையில் பிரியங்கா அபிஷேக்கிடம் தனியாகப் பேசினார். நட்பிற்குள் விரிசலா? இது என்ன வகையான நட்பு என்பதில் நமக்கும் குழப்பம் வராமலில்லை. ரைட்டு! என்னதான் சொல்லுங்க, நிரூப் எப்போதும் என் நண்பன் என்று அபிஷேக் விட்டுக்கொடுக்கவில்லை. எவ்வளவு பெரிய மனசு!
தன்னை கேட்காமல் ஏதேதோ ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிருக்கீங்களே என்று பாவனி ராஜுவிடம் சண்டைபோட, அனைவரிடமும் டிஸ்கஸ் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் இந்த தோல்வி உங்களுக்கான தோல்வி மட்டுமல்ல இந்த குழுவில் இருக்கும் அனைவருக்குமான என்றும் இதனை சரிசெய்ய அனைவருமே செயல்பட்டிருக்க வேண்டும் என்பதையும் ராஜு செய்த தவற்றைப் பொறுமையாகவும் புரியும்படியும் விளக்கமளித்தார் அமீர். பல இடங்களை மிகவும் சென்ஸிபிளாக அமீர் நடந்துகொள்வது நன்றாகத் தெரிகிறது. குட்!
பிக் பாஸ் வீட்டில் நிரூப்பின் ஃபேவரைட் போட்டியாளர் யாஷிகாதான் என்று சொன்னது, இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையே எப்படி பிரியங்காவைக் கட்டிப்பிடித்துக் கொஞ்ச முடிகிறது என்று அக்ஷரா தாமரையிடம் கேட்டது என நேற்றைய எபிசோட் நகைச்சுவையாகவும் பலரின் உணர்களுக்கு மத்தியில் கொளுத்திப்போடும் நாளாகவும் அமைந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.