/tamil-ie/media/media_files/uploads/2021/10/Untitled-design-9-1.jpg)
Bigg Boss 5 Tamil Day 9 review Akshara Priyanka Raju Niroop Tamil News
Bigg Boss 5 Tamil Day 9 review Akshara Priyanka Raju Niroop Tamil News : இதுவரை இந்த சீசனில் யாருமே க்ரூப் க்ரூப்பாக இல்லையே! அவ்வளவு நல்லவர்களா? இல்லை எல்லோரும் தெளிவாக தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு வந்துவிட்டார்களா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், கவலையே வேண்டாம். அனைவரும் தங்களின் ஆட்டத்தை ஆடத்தொடங்கிவிட்டனர். எஸ்.. பிக் பாஸ் வீட்டிற்குள் பல க்ரூப்புகள் உருவாக ஆரம்பித்துவிட்டது. ஆனால், அனைவர்க்கும் அக்ஷரா மீது ஏன் கடுப்பு? அலாசுவோம்...
/tamil-ie/media/media_files/uploads/2021/10/bba2.png)
'ஒரு சின்ன தாமரை..' பாடல் ஒலிக்க, வீட்டிலிருந்த அனைவருமே பாதி தூக்கத்துடன் ஆடத்தொடங்கினர். பிறகு, இந்தப் பாடல் வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் தாமரைக்காகவே பிக் பாஸ் ஒளிபரப்பியிருக்கிறார் என்று பல் துலக்கிக்கொண்டே சில ஹவுஸ்மேட்ஸ் சீரியஸாக டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, நம் வீடுகளில் நம் அம்மா எப்போதும் கரித்துக்கொண்டிருக்கும் டாப்பிக்குகளில் ஒன்றான 'காலையில் எழுந்ததும் பெட்ஷீட் மடிக்கும்' டாஸ்க் பற்றி தாமரை ராஜுவிடம் கூறிக்கொண்டிருந்தார். இங்க வந்தும் இதையே கேட்கவேண்டியதா இருக்கே என்கிற ராஜுவின் மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே கேட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Raju.png)
மூன்றாம் சீஸனின் சாண்டி மாஸ்டரை நினைவுபடுத்தியது நேற்று ராஜு பாடிய பாடல். இதனைத் தொடர்ந்து நேரடியாக கதை சொல்லும் டாஸ்க் அரங்கேறியது. அதில் முதலில் சிக்கியது அக்ஷரா. சிறிய வயது முதல் எல்லா விதமான வசதிகளையும் அனுபவித்தவரின் வாழ்க்கையில், விரைவில் தானும் தன் சகோதரரும் அனாதையாகப் போகிறோம் என்கிற ஒற்றை வரி போதும் அவருடைய முழுமையான மனதைப் புரிந்துகொள்ள. எவ்வளவுதான் பணம் இருந்தாலும், உணர்வுகள் என்பது மனிதராகப் பிறந்த அனைவருக்குமே ஒன்றுதான். நினைத்ததையெல்லாம் வாங்கும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் இருப்பதனால், அவரை மோசமானவர் என்றும் சுயநலவாதி மற்றும் அதிகப்படியான ஆட்டிடியூட் உடையவர் என்று காட்சிப்படுத்துவது சரியல்ல. இதைத்தான் வீட்டில் இருக்கும் பலரும் தங்கள் முக பாவனைகள் மூலமும், அக்ஷரா இல்லா நேரத்திலும் கிசுகிசுத்துக்கொண்டிருந்தனர்.
மற்றவர்கள் இன்ஸ்பையர் ஆகவேண்டும் என்பதற்காக தாங்கள் கடந்து வந்த பாதையில் எக்ஸ்ட்ரா பிட்டெல்லாமா போடமுடியுமா? நிதி அளவில் எந்தவித கஷ்டத்தையும் அனுபவிக்காமல் இருந்தாலும், மனதாலும் அக்ஷராவும் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். மிகவும் நேர்மையாக அவர் கடந்து வந்த விஷயங்களைப் போட்டியாளர்களோடும், மக்களோடும் பகிர்ந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல், மற்ற போட்டியாளர்களின் அனுதாபத்தைப் பெறவேண்டும் என்பதற்காக நம்ம அபிஷேக் ராஜ போன்று எல்லோர் முன்பும் அழுது ஆறுதலைத் தேடிக்கொள்ளவில்லை. தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளுவதுபோன்று, தனிமையில் மட்டுமே கரைந்து அழுதார் அக்ஷரா. நிச்சயம் இது பலரும், முக்கியமாகப் பெண்கள் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கம். என்றைக்குமே நம்முடைய வீக்னஸ் மற்றும் கண்ணீரை உடனடியாக யாரிடமும் பகிர்ந்துகொள்வது பல நேரங்களில் ஆபத்தே!
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Pri5.png)
பிரியங்கா உட்படப் பலரும் அக்ஷரா பற்றி நெகட்டிவ்வாக டிஸ்கஸ் செய்துகொண்டிருக்க, அண்ணாச்சி மட்டுமே அக்ஷரா கூறிய கதையில் உள்ள தவறுகளை அவரிடமே நேரடியாகச் சுட்டிக்காட்டினார். சின்னப்பொண்ணு முதல் வீட்டில் பலரின் கதைகளுக்கு டிஸ்லைக் கொடுத்த ராஜு, அக்ஷராவிற்கு லைக் கொடுத்தது பலருக்கும் பிடிக்கவில்லை. இது மற்ற போட்டியாளர்களின் கடுப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. என்றாலும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய நிலைப்பாட்டில் வலுவாகவும் தெளிவாகவும் இருந்தார் ராஜு. ஆனால், இதனைத் தொடர்ந்துதான் ராஜு அடுத்தகட்ட பொந்துக்குள் சிக்கிக்கொண்டார்.
அடுத்தது பிரியங்காவின் கதை. பெரும்பாலானவர்களுக்கு அவர் பற்றியும், அவர் கடந்து வந்த பாதைகள் பற்றித் தெரிந்தாலும், தன்னுடைய தந்தை பற்றியும், ஆபத்து நேரங்களில் பொதுமக்கள் எந்த அளவிற்கு உதவி செய்கிறார்கள் என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டது பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும். ஆனாலும், வீட்டில் உள்ள மற்றவர்கள் லைக் கொடுக்க வருண் முதலாவதாக டிஸ்லைக் கொடுத்தார். இறுதியாக ராஜு என்ன கொடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் அனைவரும் இருந்தபோது, அந்த அளவிற்கு இன்ஸ்பையர் ஆகவில்லை என்றும் வாழ்க்கையில் எந்தவிதமான இலக்கு இல்லை என்று சொன்னது தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக்கூறி டிஸ்லைக் கொடுத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Ni.png)
இதனைத் தொடர்ந்து அதே காரணத்திற்காக, நிரூப், ஐக்கி ஆகியோர் கொடுத்த லைக்கை டிஸ்லைக்காக மாற்றினார்கள். இது பிரியங்காவை அதிகமாகக் காயப்படுத்தியது. ஒருகட்டத்தில் கண்கலங்கவும் செய்தார். என்றாலும், ராஜு கொடுத்த டிஸ்லைக் மற்றும் அதற்கான காரணத்தைத்தான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைவிட அக்ஷராவிற்கு லைக் கொடுத்ததுதான் பிரியங்காவிற்கு இன்னும் கடுப்பு. இப்படியே போனால், அர்ச்சனாவின் நிலைமைதான் இவருக்கும் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Abis.png)
பிறகு சிபி தன்னுடைய கதையை சொல்லி முடிக்க, பொறாமையின் அடிப்படையில் டிஸ்லைக் கொடுப்பதாக அபி கூறினார். வழக்கம்போல ப்ரோமோவில் வந்த கன்டென்ட் மெயின் பிக்ச்சரில் இல்லை. எப்போதுமே ஓர் விமர்சகராகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அபிஷேக், இசைவாணி பற்றிப் பேசியது கொஞ்சம் ஓவர். எந்தவித வசதியும் அவ்வளவாக அனுபவிக்காதவர்களின் வாழ்வில், தங்களின் கண் முன்பு அத்தனை வசதிகளையும் குவித்தால் நிச்சயம் அவர்களுடைய நிலைப்பாடு வேறு விதமாகத்தான் இருக்கும். அவருடைய ஏக்கம் எந்த விதத்திலும் மற்ற போட்டியாளர்களுக்குப் புரியாது. என்றாலும், தாமரையோடு அக்ஷரா அமர்ந்து பேசி உரையாடிய விதம் ஆஸம்!
கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பைக் கூட்டிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் மேலுக்கும் சுவாரசியத்தை எதிர்பார்க்கலாம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.