சுயநலம் டூ பொதுநலம்.. அன்பு நிறைந்தோடும் பிக் பாஸ் வீடு!

Bigg Boss 5 Tamil Day 95 Review Ciby walks out Niroop Thamarai Tamil News முதல் முறையாகத் தாமரைக்காக மட்டுமே யோசித்ததாக அந்தப் பணத்தை எடுக்கும்போது மனதார உண்மையை ஒப்புக்கொண்டார்.

Bigg Boss 5 Tamil Day 95 Review Ciby walks out Niroop Thamarai Tamil News
Bigg Boss 5 Tamil Day 95 Review Ciby walks out Niroop Thamarai Tamil News

Bigg Boss 5 Tamil Day 95 Review Ciby walks out Niroop Thamarai Tamil News : ஒருவழியாக அவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் சென்றது யார் என்பதற்கான விடை நேற்றைய எபிசோடில் கிடைத்தது. மற்ற சீசன்களை விட இந்த சீசனில் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கின்றன. அதேபோல ஒவ்வொருவரிடம் இருந்து ஏதாவதொரு நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளவும், நம்மை நாம் திருத்திக்கொள்வதற்கும் வழிவகுத்தது. ஆனால் என்ன, எப்போதும் கத்திக்கொண்டே இருப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்தியது.

நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றிருந்தாலும், வைக்கப்பட்டிருக்கும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு தான் வீட்டைவிட்டு வெளியேறப்போவதாக அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றினார் அமீர். என்னடா இது நமக்கு முன்பு அமீர் முந்திவிட்டார், சரி பரவாயில்லை என்பது போல சிபி அமீரை வழியனுப்பி வைக்க தயாராக, அங்கே பாரு கேமரா, சும்மா பிராங்க் எனக்கூறி ஏமாற்றினார் அமீர்.

ஆனால், 12 லட்சம் வரை தொகை அதிகமானதும், தன்னுடைய பிளான் படி அதனை எடுத்துக்கொண்டு வெளியேறினார் சிபி. ஆரம்பத்திலிருந்தே இரட்டை வேடம் போடாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்றும், எல்லா போட்டிகளிலும் தன்னுடைய முழு பங்கைக் கொடுத்தும் விளையாடியவர் சிபி. இதுவரை தன்னை தாண்டி யார் பற்றியும் யோசித்தது கூட இல்லை. முதல் முறையாகத் தாமரைக்காக மட்டுமே யோசித்ததாக அந்தப் பணத்தை எடுக்கும்போது மனதார உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதுவரை சிபி கடந்து வந்த இந்த 95 நாள்களில் மிகவும் நேர்மையான மனிதராகவே இருந்திருக்கிறார். கடந்த சில நாள்களாகத் தாமரையுடன் நன்கு பேசி சிரித்துக்கொண்டு இருந்தவர் சிபி. அதனால் நிச்சயம் இவர் வீட்டைவிட்டு வெளியேறியது நிச்சயம் தாமரைக்கு மனவருத்தத்தைக் கொடுத்திருக்கும். மேலும், இதனை நாள் எதிரும் புதிருமாக சண்டைபோட்டுக்கொண்டிருந்தவர்கள் சிபியும் நிரூப்பும். ஆனால், சிபி வீட்டைவிட்டு வெளியேறியதும், இந்த சீசனில் வெற்றியாளருக்கு அடுத்து மக்களால் அதிகம் கொண்டாடப்படுபவராக நிச்சயம் சிபி இருப்பார் என்று மிகவும் பெருந்தன்மையாகக் கூறினார் நிரூப்.

இதையடுத்து, தங்களிடம் இருக்கும் இரண்டு துணிகளைத் தியாகம் செய்யவேண்டும் என்றதும், அனைவரும் மனமுவந்து தங்களிடம் இருக்கும் புது துணிகளையும், தங்களுக்கு மிகவும் பிடித்த துணிகளையும் டொனேட் செய்தனர் நம் போட்டியாளர்கள். அதுவும் அவ்வளவு சந்தோஷத்துடன் பகிர்ந்தது பார்க்கவே அழகாக இருந்தது.

மொத்தத்தில் இந்த சீசனில் வன்மம் அல்லது பேகேஜ் என்பது யாரிடமும் இல்லை. எவ்வளவுதான் சண்டைபோட்டுக்கொண்டாலும், அதனை அவ்வப்போதே மறந்து, போட்டி ஒருபக்கம் வாழ்க்கை ஒருபக்கம் என்று சந்தோஷமாக இருக்கின்றனர் இந்த சீசன் போட்டியாளர்கள். அதேபோன்று, அனாவசியமாக யாரும் அழவில்லை என்பது இன்னொரு பக்க ஆறுதல். அதற்கான காரணம், அவரவர்கள் தனித்து விளையாடியதுதான். இதை எல்லாம்விட ராஜு பாவனிக்கு ஊட்டியதை, யாரும் எதிர்பார்க்கவில்லை. நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil day 95 review ciby walks out niroop thamarai tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com