Advertisment

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நிரூப்.. கிச்சனை விட்டுக்கொடுக்காத பிரியங்கா!

Bigg Boss 5 Tamil Day 99 Review Priyanka Raju Niroop அனைவர்க்கும் கதைகள் சொல்லி அமர்ந்த இடம் மற்றும் சாப்பிடும் இடத்திலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ராஜு, படுக்கையைப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிரூப் என ஒவ்வொருவருக்கும் பல சென்டிமென்ட் இடங்கள் இருந்தன.

author-image
priya ghana
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss 5 Tamil Day 99 Review Priyanka Raju Niroop

Bigg Boss 5 Tamil Day 99 Review Priyanka Raju Niroop

Bigg Boss 5 Tamil Day 99 Review Priyanka Raju Niroop : இருக்கப்போகும் இந்த ஒரு வாரத்தை நன்கு என்ஜாய் செய்யுங்கள் என்று பிக் பாஸ் அறிவித்ததும் போதும், ஒரே கொண்டாட்டம்தான். அலங்காரம் முதல் ஜாலியான பேச்சுக்கள் வரை ஃபைனலிஸ்ட்டான ஐந்து சின்ராசுக்களையும் கையிலேயே பிடிக்க முடியவில்லை. ஆனால், பார்ப்பதற்கு மிகவும் பாசிட்டிவ்வாக இருந்தது.

Advertisment

மக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கும் டாஸ்க்கோடு நேற்றைய எபிசோட் ஆரம்பமானது. அனைவரும் அவரவர்களின் நிலை பற்றியும், இதுவரை அவர்கள் பயணித்து வந்த பாதைகள் பற்றியும் தெளிவாக பாகிர்ந்துகொண்டனர். என்னதான் ஸ்ட்ராடஜி உபயோகித்தாலும், பிக் பாஸ் வீட்டிற்குள் அன்பு பாசத்திற்கு இடமே இல்லை என்றாலும் பிரியங்காவை அந்த அளவிற்கு அழ வைத்திருக்கவேண்டாமே நிரூப். அதை மட்டும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனாலும், கில்லாடிதான்.

தான் நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறொன்று என்று எத்தனை முறைதான் சொன்னாலும், பாவனி விஷயத்தில் அமீர் செய்த செயல்களை வேறு விதமாக யோசிக்க முடியவில்லை. இப்படி அவர்களின் பிரச்சாரம் ஒருபக்கம் சூடுபிடிக்க, இறுதி வாரம் என்பதால், அனைவர்க்கும் ஒப்பனை செய்துவிட நிபுணர்களை அனுப்பினார் பிக் பாஸ். முடி திருத்தும் முதல், மெனிகியூர், பெடிகியூர் என எல்லா விதமான சர்வீஸ்களும் செய்யப்படும் என்று கேள்விப்பட்டதும், பிரியங்கா சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார்.

இதையடுத்து, நிரூப்பிற்கான போல்ட் டாஸ்க். தான் வளர்த்திருக்கும் நீண்ட தலைமுடியை வெட்ட முடியுமா என்று நிரூப்பிடம் பிக் பாஸ் கேட்க, புற்றுநோயாளிகளுக்கு தானமாக வைத்திருப்பது அதனை வெட்டி தன்னிடம் கொடுத்தால் நிச்சயம் வெட்டிக்கொள்வதாக நிரூப் பதிலளிக்க, அதற்கு பிக் பாஸ் சரி சொல்ல, இப்படியாக முடியை வெட்டி, மற்ற போட்டியாளர்கள் உண்மையில் வாயைப் பிளந்து பார்க்கும் அளவிற்கு வேற லெவல் சேஞ் ஓவர் ஆனார் நிரூப். ஹாய் ஹாண்ட்ஸம்! ஹாய் ஹாண்ட்ஸம்! என்று இளம் பெண்கள் இனி நிரூப் பின்னால் போகவில்லை என்றால்தான் அதிசயம்.

தங்கள் குடும்பத்தினரின் என்ட்ரியின்போது, ஒவ்வொருவருடைய ரியாக்ஷன் பற்றிக் கலாய்த்துக்கொண்டு, ஆனந்தமாய் தங்களின் பொழுதை கழித்துக்கொண்டவர்களுக்கு, இந்த வீட்டிலேயே தங்களுக்குப் பிடித்த இடத்தில், அவர்களுக்குப் பிடித்த வாசகத்தை எழுதி, அங்கு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்று பிக் பாஸ் கூற. அவரவர்களுக்கு சென்டிமென்ட்டான இடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அமீர் போட்டோ எடுத்துக்கொள்ளும்போது, இடத்தோடு சேர்த்து ராஜு மற்றும் பாவனியுடன் இணைந்து எடுத்துக்கொண்டது, அழகு. அனைவர்க்கும் கதைகள் சொல்லி அமர்ந்த இடம் மற்றும் சாப்பிடும் இடத்திலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ராஜு, படுக்கையைப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிரூப் என ஒவ்வொருவருக்கும் பல சென்டிமென்ட் இடங்கள் இருந்தன.

ஆனாலும், பிரியங்காவின் இடம்தான் ஹயிலைட். சமையலறை. அழுதாலும் சரி, மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் சரி, சண்டைபோட்டுக்கொண்டு வந்தாலும் சரி, எந்த சூழ்நிலையிலும் சாப்பிடுவதை மட்டும் பிரியங்கா தவிர்த்ததே இல்லை. உண்மையில் அவருடைய ஃபீலிங்கை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இப்படி மிகவும் ஜாலியாகதான் இந்த வாரம் நகரும் என்று சொல்லாமல் சொல்லியது நேற்றைய எபிசோட்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vj Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment