Advertisment

ஒருவழியாக அபிநய் வெளியேறிவிட்டார்... ஆனால், அதை மட்டும் கமல் கேட்கவில்லையே!

Bigg Boss 5 Tamil Kamal Hassan Abinai Eviction Pavani Amir controversy சஞ்சீவும், ராஜுவும் இம்முறை தவறாகக் கணித்தனர். என்னவாக இருக்கும்! ரொம்ப எல்லாம் சிந்திக்க வேண்டாம்..

author-image
priya ghana
New Update
Bigg Boss 5 Tamil Kamal Hassan Abinai Eviction Pavani Amir controversy

Bigg Boss 5 Tamil Kamal Hassan Abinai Eviction Pavani Amir controversy

Bigg Boss 5 Tamil Kamal Hassan Abinai Eviction Pavani Amir controversy : அமீர் - பாவனியைப் பற்றி கமல் கேட்பாரா மாட்டாரா என்கிற எதிர்பார்ப்போடுதான் நேற்றைய எபிசோட் ஆரம்பமானது. ஆனால், கடைசிவரை அந்த சம்பவம் மட்டும் நடக்கவேயில்லை. அபிநயின் எலிமினேஷன் மட்டும்தான் கன்டென்ட். சும்மா சொல்லக்கூடாது, அபிநயின் பெயரை டேமேஜ் செய்யாமல் பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்பதில் அந்த டீம் ஒர்க் பாராட்டுக்குரியது. பிக் பாஸ் வாழ்த்து முதல் குறும்படம் எடிட்டிங் வரை அனைத்தும் பாசிட்டிவ்வாகவே அபிநயிக்கு அமைந்தது.

Advertisment

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வரிசைப்படுத்தல் டாஸ்க் பற்றி கேட்டார் கமல். சிபியை வளைத்து வளைத்து டார்கெட் செய்வது போன்று தோன்றினாலும், அத்தனை போரையும் சமாளித்து மற்றவர்களின் வீக்னஸ் பாயின்ட்டுகளை சரியாகத் தெரிந்து வைத்து அதைக் கச்சிதமாகக் கையாண்ட விதத்தைப் பாராட்டினார் கமல். மேலும், மற்ற போட்டியாளர்கள் ஒரு கட்டத்தில் ஏன் சிபியோடு வாதாடுவதை நிறுத்தினார்கள் என்பதையும் கேட்டறிந்துகொண்டார். இவ்வளவும் தான் எவிக்ஷன் ப்ராஸஸிலிருந்து காப்பாற்றப்படுவார் என்பது அறியாமலேயே அவ்வளவு வலுவாக விளையாடிய சிபிக்கு நம்முடைய பாராட்டுகளையும் தெரிவிப்போம்!

சரி, அடுத்து நம் பாவனி - அமீர் மேட்டருக்கு வருவோம். அன்றைய தினத்தில் பாவனி, தான் நிச்சயம் எலிமினேட் ஆகிவிடுவார் என்று அமீருடன் பகிர்ந்துகொள்ள, அப்போது தனக்கு நிச்சயம் பரிசு உண்டு என்று பதிலளித்தார் அமீர். அதற்குக் கொடுக்க முடியாது என்று பதிலளித்தார் பாவனி. சந்தேகமே வேண்டாம், அமீர் கொடுத்ததைத்தான் திரும்ப கேட்டிருப்பார். ஆனால், இறுதியில் எலிமினேட் ஆனது என்னவோ அபிநய். இப்போது அமீருக்கு ஊட்டி போல் குளுகுளுவென இருக்கும். எங்குச் சென்று முடியுமோ இந்த லீலைகள்!

திடீரென 'அன்பறிவு' திரைப்பட ட்ரெய்லர் லாஞ்சுக்காக உள்ளே நுழைந்த ஹிப்-ஹாப் ஆதி உள்ளிட்ட அப்படக்குழுவினர், அவர்களின் படத்தைப் பகிர்ந்ததோடு ட்ரெயிலரையும் வெளியிட்டனர். அப்படியே, பிரியங்கா காப்பாற்றப்பட்டார் என்கிற தகவலையும் ஆதியை சொல்ல வைத்தார் கமல். இவரை அடுத்து, அக்ஷரா உட்பட பெண்கள் அனைவரும் காப்பாற்றப்பட, வருண் அபிநய் இறுதியில் வெளியேற்றப் பட்டியலில் அமர்ந்திருந்தனர்.

இருவரில் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்விக்கு, பெரும்பாலானவர் அபிநய் வெளியேறிவிடுவார் என்று கூற, எப்போதுமே சரியாக கணித்து கருது சொல்லும் சஞ்சீவும், ராஜுவும் இம்முறை தவறாகக் கணித்தனர். என்னவாக இருக்கும்! ரொம்ப எல்லாம் சிந்திக்க வேண்டாம்.. என்னவேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால், ஒருவழியாக வீட்டைவிட்டு வெளியேறினார் அபிநய். 'அவர் மிகவும் நல்ல பையன்' என்றபடி அக்ஷரா மட்டும் கதறிக் கதறி அழுதார்.

பிறகு, வழக்கம்போல பிரியங்கா தன்னுடைய அட்வைஸ்களை வாரிவழங்க, பிரியா மனமின்றி வீட்டை விட்டு வெளியேறும் தருணத்தில், 'வெளியில் உங்கள் வாழ்க்கை நல்லா இருக்க வாழ்த்துகள்' என்றபடி பிக் பாஸ் வாழ்த்தி அனுப்பினார். இதைவிட யாரால் அபினையை கலாய்த்துவிடமுடியும்! எப்போதுமே நாமினேஷனில் வந்து எப்போதோ வெளியேறிவிடுவார் என்று நினைக்க வைத்து, விளிம்பு வரை நின்று 78 நாட்கள் வீட்டிற்குள் இருக்கப் போராடிய அபிநய்க்கு வாழ்த்துகள்!

இறுதியாக, வெளியேறிய அபிநய் வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து ஒவ்வொருத்தருக்காக தன்னுடைய வாழ்த்துகளை வழங்கி வந்தவர், பாவனியை பார்க்கும்போது மட்டும் 5 நொடி அமைதி, கலங்கிய கண்கள் என வீட்டில் யாரை மிஸ் செய்யப்போகிறார் என்பது அப்பட்டமாக வெளிப்பட்ட தருணமாக அது அமைந்தது. என்னவோ போங்க மக்களே! அமீர் செய்யும் லீலைகளை எல்லாம் போட்டுக் காட்டும் பிக் பாஸ், ஏன் அபிநய் செய்த செயல்களில் ஒன்றைக்கூட வெளியிடவில்லை? ஆனாலும், அபினையை ரொம்பவே காப்பாற்றிவிடுகின்றனர் பிக் பாஸ் டீம்.

'இந்த வீட்டில் எல்லோரையும் பிடிக்கும் ஆனால், பாவனியை எக்ஸ்ட்ராவாக பிடிக்கும்' என்றபடி அவர் செய்த விஷயங்கள் தவறாகத் தோன்றியதற்கு மன்னிப்பும் கேட்டார் அபிநய். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாவனி அடித்த பல்ட்டியைதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அபிநய் எந்த விதத்திலும் தன்னை குழப்பவில்லை என்று ஒரே போடாக போட்டது, 'ஆத்தாடி' என்கிற மைண்ட் வாய்ஸ் வராமல் இல்லை. என்னதான் பாவனி நினைக்கிறார் என்பது அவருக்கே தெரியுமா தெரியாதா?

இறுதியாக பாவனியை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ளும்படி அமீரிடம் கூறி, பிரியா மனமின்றி பிரிந்து சென்றார் அபிநய். ஒருவழியாக அபிநய் வீட்டைவிட்டு சென்றுவிட்டார்ப்பா என்கிற பெருமூச்சு விடாத பிக் பாஸ் ரசிகர்கள் இல்லை. ஆனால், அமீர் எப்போது வெளியேற்றப்படுவார் என்கிற கேள்விதான் இப்போது சமூக வலைத்தளங்களில் பற்றிக்கொண்டுள்ள டாபிக். அது எப்படி அனுப்புவாங்க! கன்டென்ட்டே இனி அமீர்தானே!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Bigg Boss Tamil Pavani Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment