கமல்ஹாசனுக்கே கன்டென்ட் கொடுத்த அபிஷேக்... ஆனால், இனி பிக் பாஸ் கன்டென்ட்?
Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Priyanka Akshara இரண்டு முறை கமல் எதிரிலே பாவனியைப் பிடிக்கவில்லை என்று கூறினார் அக்ஷரா, ஆனால் அதைப் பற்றி கமல் ஏன் எதுவும் கேட்கவில்லை?
Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Priyanka Akshara இரண்டு முறை கமல் எதிரிலே பாவனியைப் பிடிக்கவில்லை என்று கூறினார் அக்ஷரா, ஆனால் அதைப் பற்றி கமல் ஏன் எதுவும் கேட்கவில்லை?
Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Priyanka Akshara
Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Priyanka Akshara : உண்மையில் நேற்றைய நிகழ்ச்சியை கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினாரா என்கிற அளவிற்கு கவுன்ட்டர்களை அடுக்கிக்கொண்டே சென்றார். இதைத்தானே எதிர்பார்த்தோம் என்று மக்களின் மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே கேட்டது. முதல் சீசன் அளவிற்குக் குறும்படங்களோடு புருவத்தை உயர்த்திய கமல்ஹாசன் இல்லை என்றாலும், நம் மனக்குமுறல்களை எல்லாம், நம் சார்பாகப் போட்டியாளர்களிடம் கேட்டார். அதுவே போதுமே!
Advertisment
உள்ளே எல்லோரும் நடிக்கிறார்கள், என்னவென்று விசாரித்துவிடலாமா? என்றபடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்த்தபடி ஆரம்பமானது நிகழ்ச்சி. 'பைசா நோட்ட..' பாடலோடு ஆரம்பமான நேற்றைய நாள், லக்ஜூரி பட்ஜெட் பொருள்கள் தெருவோடு நகர்ந்தது. பிரியங்காவிற்குச் சாப்பாடு பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அது, லக்ஜூரி டாஸ்க் வரை நீண்டது. தனக்கு பிடித்தமான பொருள்கள் எதுவும் இல்லை என்று மிகவும் வருத்தத்திலிருந்த பிரியங்கா, புலம்பிக்கொண்டே இருந்தார். அவரவருடைய கஷ்டம் அவரவருக்கு. இப்படி நகர்ந்துகொண்டிருந்த நாளில், வீட்டின் தலைவராக இருக்கும் சிபிக்கு 4 பீஸ் ஃபிரைடு சிக்கன் அனுப்பி மகிழ்ந்தது ஸ்பான்சரான ப்ரீத்தி.
பிறகு அகம் டிவி வழியே சென்ற கமல், எடுத்த எடுப்பிலேயே சென்ற வாரத்தின் டாஸ்க் பற்றியும், நாணயங்கள் யாரிடம் இருக்கிறது என்பதைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார். பிறகு, 'உண்மையில் பிக் பாஸ் பார்த்ததே இல்லையா?' என்ற கேள்விக்கு, திக்குமுக்காடிப்போனார் அபிஷேக். 'உண்மையில் நான் பிக் பாஸ் பார்த்ததில்லை' என்று இரவெல்லாம் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்திருப்பார் போல. எந்த வகையில் ட்விஸ்ட் செய்து கேட்டாலும், தான் பிக் பாஸ் பார்த்ததேயில்லை என்கிற ஒற்றை பதில்தான் அபிஷேக்கிடமிருந்து வந்தது. அதற்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்களை வரச்சொல்லிக் கேட்டதெல்லாம் வேற லெவல். இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு!
Advertisment
Advertisements
அபிஷேக் வீட்டில் எல்லோரையும் இன்ஃப்ளுயன்ஸ் செய்கிறாரா என்கிற கேள்விக்கு, 'இல்லை' என்கிற பதில் யாரிடமிருந்தும் வரவில்லை. அதற்கு, மற்றவர்களிடம் பேசி அவர்களை நிலைகுலைய வைப்பதுதான் தன்னுடைய ஸ்ட்ராடஜி என்று கூலாக பதிலளித்தார். பேசுப்பா பேசு.. எவ்வளவு வேணுமோ பேசிக்கோ.. சீக்கிரம் வெளியே வந்துடனும்ல என்பதைத்தாண்டி எதையும் நினைக்க முடியவில்லை. நாடகம் முடியும் வேளை என்பதால்தான் என்னவோ அபிஷேக் ராஜாவை சுற்றியே நேற்றைய எபிசோடு பெரும்பாலும் இருந்தது.ஆனாலும், இனி யார் கன்டென்ட் கொடுப்பார்!
கடந்த வாரத்தில் ராஜு நன்றாக விளையாடினார் என்ற காம்ப்ளிமென்ட்டோடு, வீட்டில் உருவாகியிருக்கும் க்ரூப்பிசம் பற்றி சிறிது நேரம் பேசினார்கள். அதிலும், கமல் சாரிடம்தான் பேசுவேன் என்று வீட்டில யாருடனும் பேசாமல் இருக்கும் சுருதி, பிரியங்கா மற்றும் ராஜு கேங்க் பற்றி விளக்கினார். கமல் சார் நிகழ்ச்சியில் பேசினால்தான் நம்மை கேமரா ஃபோகஸ் செய்யும் இல்லையென்றால் வாய்ப்பே இல்லை என சுருதிக்கே தெரிந்ததால்தான் இப்படி!
பிறகு, இசை மற்றும் தாமரை காப்பாற்றப்பட, சின்னபொண்ணுவை பிரியங்கா சோதனை செய்ததை பற்றிக் கேட்டார் கமல். மேலும், கடிதம் எழுதி கொடுக்கப்பட்டது விதிமீறல்கள் என்றால், காற்றில் எழுதி காட்டுவதும் அதே விதி மீறல்தானே என்றதும், கியூட்டாக செய்த விஷயம் என்று பிரியங்கா சமாளித்ததெல்லாம்.. முடியல.. நாம் செய்யும் விஷயத்தை நாமே கியூட் என்று சொல்வதும், அதனை மற்றவர்கள் செய்தால் ஒர்ஸ்ட் என்று முறைப்பதும், என்ன இது சின்னபுள்ளத்தனமா? ஆனால், வைரவர் பிரியங்காவின் ரசிகர்கள் பட்டாளம் சுருங்கிக்கொண்டே போகிறது. கொஞ்சம் பார்த்து இருங்க பிரியங்கா!
இப்படி அபிஷேக், பிரியங்கா என மாறிமாறி அடிவாங்கிக்கொண்டிருக்க, ஒருகட்டத்தில் அபிஷேக்கை பார்த்து, இது அறிவுரை அல்ல கண்டிப்பு என்கிறார் கமல். ஒருவேளை இப்போதுதான் அபிஷேக்கின் அந்த வைரல் வீடியோவை பார்த்திருப்பாரோ! இறுதியாக அக்ஷரா மற்றும் பாவனி நடுவே இருக்கும் பனிப்போர் பற்றி விசாரித்த கமல், இருவரும் காப்பாற்றப்பட்டனர் என்று மட்டுக்கூறி விடைபெற்றார். ஆனால், ஒருவர் முகத்திற்கு முன்பு அவரை பிடிக்கவில்லை என்று கூறினால், அது எதிரில் உள்ளவர்களுக்கு எவ்வளவு வலிக்கும் என்பது அக்ஷராவுக்கு ஏனோ புரியாமல் போனது. இரண்டு முறை கமல் எதிரிலே பாவனியைப் பிடிக்கவில்லை என்று கூறினார் அக்ஷரா, ஆனால் அதைப் பற்றி கமல் ஏன் எதுவும் கேட்கவில்லை? இது, ஒருவரின் மனதை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை வெளிப்படையாகவே பாவனி நிரூப்புடன் பகிர்ந்துகொண்டார்.
தன்னால் முடிந்த அளவிற்கு, அக்ஷராவிடமும் பேசி பார்த்தார் நிரூப். என்றாலும், என்ன பயன்! பிரச்சனையைவிட்டு விலகி இருப்பது வேறு, ஆனால் எதுவும் இல்லாததை பிரச்சினையாகக் கருதி அதை சரிசெய்யாமல் இருப்பது வேறு. இதில், அக்ஷரா இருப்பது இரண்டாம் நிலை. விரைவில் பாவனியோடு அக்ஷரா இணைந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். அதெல்லாம் இருக்கட்டும்.. இன்றைக்கு வீட்டை விட்டு வெளியேறப்போவது அபிஷேக் என்று அரசல்புரசலாகப் பேசுகின்றனர். அபிஷேக் வெளியேறினால், இனி யார் கன்டென்ட் கொடுப்பார்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil