Bigg Boss 5 Tamil Kamal Hassan Priyanka Niroop Thamarai Cook with Comali : கடந்த வாரம் கன்டென்ட் என்பது ஒன்றுமே இல்லையே, கமல் என்ன போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், ஒரே விஷயத்தைச் சொல்லி சொல்லி தனக்கும் போர் அடிக்கிறது என்று அவரே சிவில் ஒப்புக்கொண்டார். காது ஜவ்வு கிழிய சண்டைபோட்டுக்கொள்வதும், பிறகு ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பதும் நல்ல விஷயம் என்றாலும், அதெல்லாம் பிக் பாஸ் ஷோவிற்கு செட் ஆகாதே!
வழக்கம்போல சாப்பாட்டிற்கான டாஸ்க் வைக்கப்பட்டு, அதில் விதவிதமான உணவு வகைகளை சமைத்து காட்டினார்கள். அதிலும் அடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தாமரை செல்வது உறுதியாகி வருகிறது. வீட்டில் இருப்பவர்களுக்கு ருசியான உணவுகளை சமைத்து கொடுத்து, ஏராளமான உதவிகளையும் செய்து வருகிறார். வரும் வாரத்தில் வைக்கப்படும் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு தாமரை போகாமல் இருந்தால், நிச்சயம் அவர் இந்த சீஸனின் டைட்டில் வின்னராவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
அதையடுத்து அவரவர்களின் புது வருடத் தீர்மானங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டனர். இதைப் பற்றி கமென்ட் செய்ய நாம யாரு! சரி அதை அப்படியே விட்டுவிடுவோம். புதிதாக விவாதிக்க அதில் ஒன்றுமில்லை. அடுத்ததாக, ஃபினாலே டாஸ்க் பற்றி பேசத் தொடங்கியதும், நிரூப் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். முதல் நாளிலேயே தன்னை வெளியேற்றிவிட்டதால், தன்னால் பிற டாஸ்க்குகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது என்றும் மற்ற டாஸ்க்குகளில் தன்னால் இன்னும் நன்றாக போட்டியிட்டு இருக்க முடியும் என்றும் கூறினார்.
அதுவும் சரிதானே. நிச்சயம் நிரூப் எல்லா டாஸ்குகளிலும் தன்னுடைய முழு முயற்சியைப் போட்டிருப்பார். அதனால், இந்த ஃபினாலே சுற்றில் நிரூப் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், அதுதான் பிக் பாஸின் ஐடியா இல்லையே. அமீரை எப்படியாவது டிக்கெட்டை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதுதானே பிக் பாஸின் நோக்கமாக இருந்தது. அப்படிதான் நடந்தது. இதைப்பற்றி கமல் கேட்டபோது, வீட்டிற்குள் கேங் உருவாகிவிட்டது என்றும், அதனால் யாரும் விளையாடவில்லை என்றும் கூறினார்.
இது நூறு சதவிகிதம் உண்மை. என்னதான் நடக்கிறது என்று தாமரை மட்டுமல்ல, நாமும் அவ்வப்போது தலையை சொரிந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆம், ‘த்தூ..’ என்று துப்பினாலும், துடைத்துவிட்டு ரெடியாகிவிடுகிறார்கள். அதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.ஆம், ‘த்தூ..’ என்று துப்பினாலும், துடைத்துவிட்டு ரெடியாகிவிடுகிறார்கள். அதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால், நிரூப் ஒருபோதும் மற்றவர்களுக்காக தன்னுடைய ஆட்டத்தை விட்டுக்கொடுத்ததே இல்லை. அது, இந்த வீட்டிலேயே மிகவும் க்ளோஸாக இருக்கும் பிரியங்காவாக இருக்கட்டும் அல்லது அண்ணாச்சியாக இருக்கட்டும். போட்டி என்று வந்துவிட்டால், சீறி பாய்வதில்தான் நிரூப்பின் கவனம் இருக்கும்.
இவரை பிளான் செய்து வெளியேற்றியது மற்ற போட்டியாளர்கள்தான். இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்தான் எத்தனை சட்டசிக்கல்கள் இவர்களுக்குள். எப்படியோ, எல்லா தடைகளையும் மீறி அமீர் வெற்றிபெற்றார். வழக்கமாக இந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை வெற்றிபெறும் போட்டியாளருக்கு மகுடம் சூட கமல் வீட்டிற்குள் செல்வார். ஆனால், கொரோனா பரவுதல் காரணத்தினால் இம்முறை, அமீருக்கு அடுத்து வந்த சிபி மகுடம் சூட்டி மகிழ்ந்தார்.
இறுதியாக ராஜு வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்பட, நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது. நம் கணக்குப்படி பார்த்தால், சந்தேகமே இல்லாமல் சஞ்சீவ் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார். அடுத்த வாரமாவது ஏதாவது தன்னிச்சையாக செயல்படுகிறார்களா என்பதைப் பார்ப்போம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil