சிவகாமியின் என்ட்ரி.. சிபிக்கு குறும்படம்.. தடம் மாறும் பிக் பாஸ் வீடு!

Bigg Boss 5 Tamil Kamal Hassan Ramya Krishnan entry Ciby Akshara ‘எங்கே இருந்து இவன் நடுவுல வந்தான், கொஞ்சம் கூட என்னைப் பேசவே விட மாட்டிங்குறான்’ என்று அபிநய் மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்கிற அளவிற்கு பாவனியுடன் பேசி தள்ளிக்கொண்டிருந்தார் அமீர்.

Bigg Boss 5 Tamil Kamal Hassan Ramya Krishnan entry Ciby Akshara
Bigg Boss 5 Tamil Kamal Hassan Ramya Krishnan entry Ciby Akshara

Bigg Boss 5 Tamil Kamal Hassan Ramya Krishnan entry Ciby Akshara : கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்கிற செய்து வெளியானதில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்விதான் பல பிக் பாஸ் ரசிகர்களுக்கு எழுந்த முதல் கேள்வி. இறுதி நாள் வரை யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்கிற சந்தேகத்தில்தான் நகர்ந்துகொண்டிருந்தது. இருவேளை கமல்ஹாசன் அவர்களே வீடியோ அழைப்பு மூலம் தொகுத்து வழங்குவாரோ என்பது வரை தீவிர டிஸ்கஷனில் ரசிகர்கள் இருந்தனர். அதன் விடையாகக் கலக்கலாகக் களத்தில் இறங்கினார் ராஜமாதா.

கமல் ஹாசனுக்கு கொரோனா என்றதுமே, அபிஷேக்கின் ரியாக்ஷன்.. வாய்ப்பே இல்லை. ‘நடிகன்டா நீ. என்பதை மீறி என்ன சொல்வது. அவர் தலையில் அடித்துக்கொண்டது, டிவி ஸ்க்ரீன் உடைகிற அளவிற்கு சத்தம். பிறகு மருத்துவமனையிலிருந்து அனைவர்க்கும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு, இனி தன்னுடைய தோழி தொகுத்து வழங்குவார் என்றதும் போட்டியாளர்களுக்குள் டிஸ்கஷன் தொடங்கியது. ஒருவேளை அவராக இருக்குமோ.. ஒருவேளை இவராக இருக்குமோ என்று தீவிரமாகப் பேசத்தொடங்கினார். அதற்குள், மக்களுடனான கமலின் உரையாடல், பிறகு ராஜமாதா என்று செல்லமாக அழைக்கும் ரம்யா கிருஷ்ணனின் என்ட்ரி, புத்தக பரிந்துரை என நேற்றைய நிகழ்ச்சியை ஆரவாரமாகத் தொடங்கி வைத்து விடைபெற்றார் கமல்.

இதையடுத்து, ரம்யா தொகுத்து வழங்க வீட்டிற்குள் அதாவது அகம் டிவி வழியே வீட்டிற்குள் நுழைந்தார் ரம்யா. ரம்யாவை பார்த்ததும் எல்லோர் முகத்திலும் என்ன ஒரு ஆனந்தம். ஏற்கெனவே நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த ரம்யாவிற்கு இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் எந்த சிரமமும் இல்லை என்றாலும், கமல் அளவிற்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். முதல் நாள் என்பதால் கொஞ்சம் ஜாலியாக பேசினாரோ! போகப்போக சிவகாமியின் ஆட்டம் தெரியும்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகளில், பிரியங்கா பற்றி அண்ணாச்சி மற்றும் ஐக்கி ரகசியமாகப் பேசிக்கொண்டனர். பிரியங்காவிற்கு உண்மையில் பேச தெரியவில்லை என்று அண்ணாச்சி விதவிதமாக அடுக்கிக்கொண்டிருந்தார். அப்படி என்ன நடந்தது என்பதை வழக்கம்போல நமக்குப் போட்டுக் காட்டவில்லை. என்றைக்கும் இல்லாமல், நிரூப் தனியே தனக்குள்ளே இல்லை இல்ல தான் வைத்திருந்த டீ கப்பிடம் பேசினார். இதைப் பார்த்த அக்ஷராவிற்கு செம ஷாக். ‘நல்லா இருந்த பையனுக்கு என்ன ஆச்சோ’ என்கிற பதற்றம் நமக்கு மட்டும் அல்ல முழுமையாக சந்திரமுகியாகவே மாறிவிட்டாரோ என்று ஹவுஸ்மேட்ஸ்க்கும் தோன்றியிருக்கிறது.

வந்த நாள் முதல், காலையில் ஒளிபரப்பாகும் பாடலின் போது மட்டும் நம் கண்களில் படும் அமீர், பிறகு எங்கே செல்லுவார் என்ற கேள்வி இருந்தது. ஆனால், நேற்று அமீர் செய்த சம்பவம் வேற லெவல். பாவனியைத்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பாவனியிடம் சொன்னதும், அதற்கு பாவனி ரியாக்ஷன், சூப்பர். அது மட்டுமா, ‘எங்கே இருந்து இவன் நடுவுல வந்தான், கொஞ்சம் கூட என்னைப் பேசவே விட மாட்டிங்குறான்’ என்று அபிநய் மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்கிற அளவிற்கு பாவனியுடன் பேசி தள்ளிக்கொண்டிருந்தார் அமீர். அப்போது, அபிநய் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தார். இந்த ஃப்ரேம், அட்டகாசம் எடிட்டரே.

‘ட்ரூத் ஆர் டேர்’ விளையாட்டின்போது ராஜு, அபிநய்யிடம் அவர் பாவனியை காதலிக்கிறார் என்று கேள்வி எழுப்பியதை பிக் பாஸ் வீடு மட்டும் சமூக வலைத்தளங்களிலும் சின்சியரான விவாதமாகப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு சம்பந்தப்பட்ட பாவனியே அதனைப் பெரிதாகப் பார்க்காமல், ராஜு வெளிப்படையாகக் கேட்டது நல்லது என்ற மனநிலையிலிருந்தார். இது, நிச்சயம் பாவனிக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், இதே விஷயத்தை இரண்டாவது வாரத்தில் பாவனி மதுமிதாவிடம் புலம்பிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறதா மக்களே? அபிநய் தன் மீது காட்டும் அக்கறை காதலா என்று புரியவில்லை என்று பாவனிக்கே அப்போது சந்தேகம் இருந்தது. அதுமட்டுமில்லாமல், வீட்டில் உள்ள பலரும் பல சமயங்களில் இவர்கள் இருவரையும் இணைத்துப் பேசியிருக்கின்றனர். அதனை வெளிப்படையாக ராஜு கேட்டதில் எந்தத் தவறும் இல்லை.

வீட்டில் உள்ள அனைவரைப் பற்றிய தன்னுடைய பார்வையை முன்வைத்தார் ரம்யா கிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து, கனா காணும் காலங்கள் டாஸ்க்கின் போது சிபி மற்றும் அக்ஷராவிற்கு இடையே ஏற்பட்ட மோதல் பற்றி விவாதித்தனர். தேவையே இல்லாமல் இந்த தருணத்தில் குறும்படம் எதற்கு என்பது புரியவில்லை. குறும்படத்திற்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டதே! அனைவரும் சேர்ந்து, சிபியை டார்கெட் செய்தது மட்டும் தெளிவாகப் புரிந்தது. எதுவுமே இல்லாத விஷயத்திற்கு எதற்கு அக்ஷரா இவ்வளவு ரியாக்ட் செய்தார் என்று அண்ணாச்சி வெளிப்படையாகக் கேட்டதுதான் நிதர்சனம். மொத்தத்தில், குழப்பத்தை ஏற்படுத்தியாச்சு!

கமல் இருக்கும்போது போட்டியாளர்களிடம் இருக்கும் பதற்றமும், பயமும் நேற்று யாரிடமும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், இவர்களுக்கு ராஜமாதாவின் இன்னொரு முகம் பற்றித் தெரியவில்லை. அந்த முகம் எப்போது வெளிப்படும் என்று தெரியவில்லை. இறுதியாக பிரியங்கா மட்டும் எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட, நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது. இந்த சீசனில் இன்னும் சீக்ரெட் அறை பயன்படுத்தாமல் இருக்கிறது. இன்று வெளியேறப்போகும் நபர் சீக்ரெட் அறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அல்லது முழுமையாக வெளியேறிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil kamal hassan ramya krishnan entry ciby akshara

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com