scorecardresearch

பயண வீடியோ, பிடித்தமான பொருள்கள், பிரியங்கா ரீ-என்ட்ரி!

Bigg Boss 5 Tamil Raju Priyanka Pavani Amir Niroop Final day அபிநய் மற்றும் அமீர் உடனான சர்ச்சைகள் மற்றும் ராஜு உடனான சண்டை மற்றும் இறுதியில் சமாதானம் ஆன நிகழ்வுகள் என இந்த இரண்டும்தான் அதிகம் இருந்தன.

Bigg Boss 5 Tamil Raju Priyanka Pavani Amir Niroop Final day
Bigg Boss 5 Tamil Raju Priyanka Pavani Amir Niroop Final day

Bigg Boss 5 Tamil Raju Priyanka Pavani Amir Niroop Final day : 100 நாள்கள் போராட்டத்தின் பிரதிபலனாக நேற்றைய எபிசோட் பல நெகிழ்ச்சியான தருணங்களை ஐந்து ஃபைனலிஸ்ட்களுக்கும் போட்டுக் காண்பித்தார் பிக் பாஸ். உண்மையில் பல நினைவலைகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் என்ன, தாமரை, நமிதா ஆகியோர் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும் என்கிற குறை மட்டும்தான்.

ஒவ்வொரு போட்டியாளர்களையும் கார்டன் ஏரியாவுக்கு அழைத்து, இத்தனை நாள் அவர்கள் வீட்டிலிருந்தபோது அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் முதல் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாணயம் உள்ளிட்ட பிற பொருள்கள் வரை அனைத்தையும் அங்கு வைத்து, அவர்களுக்கு சிறிய காணொளியை ஒளிபரப்பி பிறகு அந்தப் பொருள்களிலிருந்து ஒன்றை எடுத்துக்கொள்ளவும் சொன்னார் பிக் பாஸ். இதில் முதலில் வந்தது நிரூப். இந்த ஆர்டரில் கூட ஏதாவது உள்குத்து இருக்குமா என்பது தெரியவில்லை.  ஏனென்றால்,கடந்த தினங்களில் சுருதி மற்றும் நாடியா மாலை அணிவித்தபோது எந்த ஆர்டரில் அவர்களுக்கு அணிவித்தனரோ, அதே  ஆர்டரில்தான் நேற்று வீட்டில் இருப்பவர்களை அழைத்து அனைத்து நினைவலைகளையும் ஓட விட்டனர்.

இந்த ஆர்டரில்தான் வீட்டைவிட்டு போட்டியாளர்கள் வெளியேறப் போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. பிறகு எதற்கு இந்த வோட்டிங் எல்லாம் என்றுதான் தெரியவில்லை.

நிரூப்பின் காணொளியில் போட்டிக்காக எதையும் செய்யும் போட்டியாளர் என்பது தெளிவாக வெளிப்பட்டது. அதனை அவரும் ஒப்புக்கொண்டது சிறப்பு. ஆனால், இவருக்கு சில போட்டிகளைத் தவிர்க்கும்படியான சூழ்நிலை அமைந்ததுதான் கொஞ்சம் வருத்தம். நிச்சயம் இவர் வெற்றியாளராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருந்தும், நடுவில் குழம்பிப்போய்விட்டார். அந்தத் தடுமாற்றம்தான் நிரூப் வெற்றிவாகையை சூடாமல் போனதற்குக் காரணம்.

அடுத்ததாக அமீர். இவருடைய பயணம் சிறிய காலம் என்றாலும், காதல் முதல் சண்டை வரை அனைத்து எமோஷன்களும் இவருடைய பயணத்தில் நிறைந்திருந்தன. ஆரம்பத்தில் இவருடைய ஃபோக்கஸ் வேறு திசையில் போகிறது என்று பலரும் சொன்னதை அடுத்து, அதனை எப்படி சரி செய்யலாம் என்று ஓரளவிற்கு அதிலிருந்து மீண்டு முதல் ஃபைலிஸ்ட்டாக தேர்வானார். இறுதியாக, தான் இந்த அளவிற்கு வளர்வதற்குக் காரணமாக இருந்த குடும்பத்திற்கு நன்றி சொன்னது அனைவரையும் நெகிழ வைத்தது. என்றாலும், வெளியே எந்த அளவிற்கு அமீத் மற்றும் பாவனியை இணைத்துப் பேசியிருப்பார்கள் என்பதை இந்த காணொளி வெட்டவெளிச்சமாகப் போட்டுக் காட்டியபோது, அமீரின் ரியாக்ஷன் வேற லெவல்!

அடுத்ததாக பாவனி தன்னுடைய பயணத்தைப் பார்த்து ரசித்த விதத்திற்கே இந்நேரம்  பட்டாளம் கூடியிருக்கும். அந்த அளவிற்கு பாவனிக்கு வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் ரசிகர்கள் அதிகம். அவருடைய பயண வீடியோவில், அபிநய் மற்றும் அமீர் உடனான சர்ச்சைகள் மற்றும் ராஜு உடனான சண்டை மற்றும் இறுதியில் சமாதானம் ஆன நிகழ்வுகள் என இந்த இரண்டும்தான் அதிகம் இருந்தன. அவருடைய அழுகையும் காட்டி ரசிகர்களை ஈர்த்தனர்.

அடுத்ததாக ராஜூவிற்கான காணொளியில் அண்ணாச்சி, தாமரை, அக்ஷரா முதல் சிபி, சஞ்சீவ் வரை அனைவருடனான உறவு பாசிட்டிவ் வழியில் பிரதிபலித்தது. இதுவே இவருடைய வெற்றிக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது. தன்னுடைய காணொளி முடிந்ததும், இந்த எடிட்டிங் வேலையை தான் ஒருகாலத்தில் செய்திருந்ததாகவும் இப்போது தனக்காக யாரோ ஒருவர் செய்திருக்கிறார் என்று கூறி ராஜு கலங்கியது, நம்மையும் கலங்க வைத்தது.

முந்தைய நாள் உடல்நிலை குன்றிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா, நேற்று மீண்டும் வீட்டிற்குள் வந்தார். எங்கே காணும், எப்போ வருவார் என்று மற்ற ஹவுஸ்மேட்ஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் வீட்டிற்குள் நுழைந்தது, பார்ப்பதற்கு அழகு. பிறகு, பிரியங்காவிற்கென போடப்பட்ட காணொளியில் பாசிட்டிவிட்டி அதிகமாக இருந்தது. உண்மையில் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இவருடைய இருப்பு வீட்டிலிருந்துள்ளது. இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தாலும், உடல்நிலை காரணத்தினால் இவருடைய பயணம் இறுதியாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil raju priyanka pavani amir niroop final day