Advertisment

படாரென்று போட்டுடைத்த நிரூப்.. சுக்குநூறாக நொறுங்கிய அபினய்!

Bigg Boss 5 Tamil Review 45 Priyanka Abinai Niroop பிம்பமாக இருந்தபோது அபிநய் தன்னுடைய முடியை வெட்டினார். இதை அப்படியே செய்த நிரூப், தான் புற்றுநோய் நோயாளிக்காக வளர்க்கும் முடியை வெட்டவைத்ததாகப் பொங்கினார்.

author-image
priya ghana
Nov 17, 2021 12:50 IST
New Update
Bigg Boss 5 Tamil Review 45 Priyanka Abinai Niroop

Bigg Boss 5 Tamil Review 45 Priyanka Abinai Niroop

Bigg Boss 5 Tamil Review 45 Priyanka Abinai Niroop : இந்த பிக் பாஸ் சீசனில் முதல் முறையாக சுவாரசியமான டாஸ்க்கை கொடுத்து, நம்மை என்டெர்டெயின் செய்தது நேற்றைய எபிசோட். ஆகவே ஆகாத இருவரைத் தேர்வு செய்து, கண்ணாடி போன்று பிரதிபலிக்க வேண்டும் என்கிற வேற லெவல் ஐடியாவை புகுத்தி, இந்த டாஸ்க் பிரச்சினையை சரிசெய்வதற்கா அல்லது மேலும் கொளுத்தி போடுவதற்கான என்கிற ரேஞ்சில் நகர்ந்தது. அப்படி என்ன டாஸ்க்  அது? யாரெல்லாம் இதனை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டனர்? யாருக்கெல்லாம் ஆப்பாக மாறியது? பார்ப்போம்..

Advertisment

ஆரம்பமே ஐக்கி கண்ணாடி முன்பு புலம்புவதைக் காண்பித்தனர். இப்படி இவர் புலம்புவதை பார்த்துத்தான் பிக் பாஸிற்கு இந்த டாஸ்க் ஐடியா வந்திருக்கும் போல. தன்னைத்தானே ஊக்கப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார் ஐக்கி. டேஞ்சர் ஜோனில் வேறு இருக்கிறார். இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறிடுவாரோ! இப்படி கடினமான ஃபீலிங்ஸ் ஒருபுறம் இருக்க, குழந்தை போலப் பேசி விளையாடாத தொடங்கினார்கள் ராஜு மற்றும் பிரியங்கா. இவர்கள்தான் இப்படி என்றால், வீடே குழந்தைகள் நிறைந்த விடுதியாகக் காட்சியளித்தது. பிரியங்கா கேப்டன்சியாச்சே.. இப்படித்தானே இருக்கும்!

வருணின் ஆளுமையைப் பற்றி நிச்சயம் சொல்லியே ஆகவேனும். விதவிதமான என்டெர்டெயினிங் டாஸ்க்குகளை கொடுத்து, யாரும் 'முடியாது' என்று சொல்லாத வகையில் மிகவும் கூலாக நகர்த்திக்கொண்டிருக்கிறார். அதிலும், குழந்தைகள் போலப் பேச வைப்பது, நடிக்கச் சொல்வது என சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. ஆனால் என்ன, வழக்கம்போல நாணயம் வைத்திருக்கும் கண்ணாடி பெட்டியை  இம்முறை உடைத்துவிட்டார். இந்த சீசனில் பொருள்களை இஷ்டத்திற்கு டேமேஜ் செய்யும் வழக்கம் அதிகமாகவே உள்ளது.

வருணின் இந்த டாஸ்க் வரிசையில் ராஜு மாட்டிக்கொள்ள, அவரை கார்டன் ஏரியாவில் குளிக்க உத்தரவிட்டார் வருண். சும்மா விடுவார்களா மற்ற ஹவுஸ்மேட்ஸ்? இதுதான் சான்ஸ் என்று, ராஜூவை பிரியங்கா தண்ணீர் ஊற்றி வம்பிழுக்க, பிறகு இந்த விளையாட்டு வீட்டில் உள்ள அனைவரின் மீதும் நீரை ஊற்றி விளையாடுவது வரை நீண்டது. சிறப்பான சம்பவம்தான்!

பிறகு கண்ணாடி டாஸ்க்கில், சிபி - அக்ஷரா, நிரூப் - அபிநய், இசைவாணி - அண்ணாச்சி, ஐக்கி - வருண், பாவனி - ராஜு, பிரியங்கா - தாமரை என ஜோடிகள் பிரிக்கப்பட்டு, ஒருவர் அசலாகவும் மற்றொருவர் அவரின் பிம்பமாகவும் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வளவு நாள் சண்டைக்கோழிகளாக இருந்தவர்கள் இந்த டாஸ்க்கை எப்படி செய்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகமானது.

வழக்கம்போல, அக்ஷரா முரண்டு பிடிக்கத் தொடங்கினார். ஏற்கெனவே சிபியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்ட அக்ஷராவுக்கு இந்த டாஸ்க்கில் சிபி தன்னுடைய ஜோடியாக வந்ததில் துளியும் விருப்பமில்லை. டாஸ்க் பண்ணமுடியாது என்று அடம்பிடித்தார். பிறகு வருண் மற்றும் அபிநய் அவரை சமாதானம் செய்து அனுப்ப, ஓரளவிற்கு டாஸ்க்கை சிறப்பாகவே செய்தனர்.

சும்மா சொல்லக்கூடாது, பிரியங்கா மற்றும் தாமரையின் காம்போ தரமாக இருந்தது. மிகவும் ரசிக்க வைக்கும்படியாக இருந்தது இவர்கள் இவருடைய கூட்டணி. அதேபோல ராஜு மற்றும் பாவனியின் கூட்டணியும் ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால், அண்ணாச்சி மற்றும் இசையின் காம்போ இருக்கும் இடம் தெரியாமலேயே இருந்தது.

இதையடுத்து, பிம்பமாக செயல்பட்டவர்கள் உண்மையான உருவத்தை அதாவது தங்களின் ஜோடி பற்றி உள்ளதை உள்ளபடியே சொல்லவேண்டும் என்கிற ட்விஸ்டில், நிரூப், அபிநய் பற்றி தன் மனதிலிருந்ததை எல்லாம் கொட்டித்தீர்த்தார். ஒரு ஃப்ளோவில் இரண்டு மூன்று முறை அபிநய் ஃபேக்காக இருக்கிறார் என்று நிரூப் கூற, அதைத் தாங்கமுடியாமல் மனமுடைந்து அழுதார் அபி. இதற்கெல்லாம் காரணம் முடிதான். ஆம், பிம்பமாக இருந்தபோது அபிநய் தன்னுடைய முடியை வெட்டினார். இதை அப்படியே செய்த நிரூப், தான் புற்றுநோய் நோயாளிக்காக வளர்க்கும் முடியை வெட்டவைத்ததாகப் பொங்கினார்.

அதுதான் உண்மையான நோக்கம் என்றால், அதைவிட டாஸ்க் முக்கியமில்லை என்று செய்யாமல் கூட நிரூப் இருந்திருக்கலாமே. இது அபிநய்யின் ஸ்மார்ட் மூவ். ஆனால், நிரூபினால் இதனை சிறிதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பல இடங்களில், தன் தோழி என்றும் பாராமல் இதேபோன்ற ஸ்ட்ராடஜியை நிரூப் பயன்படுத்தியிருக்கிறார். பாவனி கொடுத்த டாஸ்க்கை செய்யாமல் புறக்கணித்து இருக்கிறார். அதேபோல இதுவும் என்று நிரூபினால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மீண்டும், தக்காளி சட்னியைதான் எடுத்துக்காட்டாக சொல்லவேண்டியிருக்கு!

அபிநயிக்கு ஆதரவாகப் பிரியங்கா உட்பட மற்ற போட்டியாளர்களும் இணைந்து நிரூப்பிடம் பேசினார்கள். ஆனால், எதுவும் வேளைக்கு ஆகல. இறுதியாக, நிரூப் நினைவாக அபிநய் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை நிரூப்பிடமே கொடுத்துவிட்டு அவர்களின் ரிலேஷன்ஷிப்பை பிரேக் செய்துவிட்டு கிளம்பினார்கள். இதேபோன்று அக்ஷ்ரா பற்றி சிபியும், அண்ணாச்சி பற்றி இசைவாணியும் பகிர்ந்துகொண்டனர். அதில், இசைவாணியின் சில பாயிட்ன்டுகளை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

8 கோடி மக்களுக்கு இசைவாணியை தெரியும்போது, அண்ணாச்சிக்குத் தெரியவில்லை என்று சொன்னதை அடிக்கோடிட்டு இசைவாணி சொன்னது சிறுபிள்ளைத்தனம் என்றே சொல்லலாம். அனைவர்க்கும் அனைவரைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என அவசியமில்லை. 'தெரியாதே' என்று வெளிப்படையாகச் சொல்லுவதில் தவறெதுவும் இல்லை. ஆனால், அதனை இன்று வரை வைத்துக்கொண்டு மனதிற்குள் வன்மத்தை வளர்த்துக்கொள்வதை இசைவாணி மாற்றிக்கொண்டால் சிறப்பு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bigg Boss Tamil #Vj Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment