/tamil-ie/media/media_files/uploads/2021/12/Aciup.jpg)
Bigg Boss 5 Tamil Review Akshara Ciby Family enters Tamil News
Bigg Boss 5 Tamil Review Akshara Ciby Family enters Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த டாஸ்க்கிற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறதோ இல்லையோ, ஃப்ரீஸ் டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் மட்டுமல்ல பொதுமக்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு உண்டு. அந்த வரிசையில் இந்த சீஸனின் ஃப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் ஆரம்பமானது. போன சீசன்களில் போலில்லாமல் இந்த சீசனில் சர்ச்சைகளை எழுப்பும் எந்த விஷயங்களும் இல்லாததால், அனைவருடைய குடும்பமும் ஓர் குடும்பமாகவே பார்க்கப்படுகிறது. நேற்றைய சென்ட்டிமென்ட் காட்சிகளை அலாசுவோமா...
வழக்கமாக தாங்கள் கடந்து வந்த பாதைகளை ஒவ்வொரு போட்டியாளர்களும் பகிர்ந்துகொள்வது வழக்கம். அந்த வாய்ப்பு ஏனோ வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டிக்கு நடுவில் நுழைந்தவர்களுக்குக் கிடைக்காமலேயே போய்விடுகிறது. ஆனால், இம்முறை அது சஞ்சீவ் மற்றும் அமீருக்குக் கிடைத்திருக்கிறது. என்னதான் சஞ்சீவ் அனைவர்க்கும் தெரிந்த முகமாக இருந்தாலும், தனிப்பட்ட வகையில் அவர் யார் என்பதை நேற்றைய எபிசோடில் பகிர்ந்து கொண்டார்.
தன் வாழ்க்கையில் தன்னுடைய உடன் பிறந்த சகோதரிக்கு நடந்த எதிர்பாராத சம்பவம் பற்றியும் இழப்பு பற்றியும் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார் சஞ்சீவ். என்னதான் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பராக இருந்தாலும், சஞ்சீவ் சிறு சிறு வேலைகளை எல்லாம் செய்து, படிப்படியாகத்தான் முன்னேறியிருக்கிறார் என்பது நேற்றைய எபிசோட் நமக்கு விளக்கியது. அதுமட்டுமின்றி, தன்னுடைய மற்றும் தன் குடும்ப வளர்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் தன்னுடைய மனைவியின் பங்கு பற்றியும் உருக்கமாகக் காதலுடன் பகிர்ந்துகொண்டது பார்ப்பதற்கு கியூட். இவரைத் தொடர்ந்து அமீரின் கதை இருக்குமென எதிர்பார்த்தால், நாளை என்று கூறி எண்டு கார்ட் போட்டுவிட்டனர். அப்புறம் ஏன் ப்ரோமோவில் மட்டும் அவ்வளவு ஹைப் கொடுத்தீங்க பிக் பாஸ். இதெல்லாம் சரியில்ல பாஸு!
இதனை அடுத்து, ப்ரோமோவில் காட்டப்பட்டது போல, பிரியங்கா சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் மிக்ஸ்டு எமோஷனில் தத்தளித்துக்கொண்டிருந்த காட்சி. சொல்லாமலேயே அக்ஷரா புரிந்துகொள்ள, அந்த கணத்திலிருந்து அக்ஷராவின் கண்களில் நீரோட ஆரம்பித்தது. பிறகு அனைவரும் எதிர்பார்த்த டாஸ்க் வந்துவிட்டது என்கிற எதிர்பார்ப்பு அனைவரின் மனத்திலும் எழ, அதனை சோதித்தும் பார்த்தார் பிக் பாஸ்.
மிகவும் தீவிரமாக அக்ஷரா பேசிக்கொண்டிருக்க, 'குகு' என திடீரென ஓர் குரல் ஒலிக்க, திக்குமுக்காடிப்போனார் அக்ஷரா. தன் அம்மாவின் குரல் இது இல்லை என்று கூறிக்கொண்டே எந்த பக்கம் போவது என்று தெரியாமல் அலைந்துகொண்டிருந்தார் அக்ஷரா. இதிலிருந்தே இவர் எவ்வளவு செல்லமாக வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. பிறகு, தன் அம்மா மற்றும் அண்ணன் வீட்டிற்குள் வர, துள்ளிக்குதித்தார் அக்ஷரா. இருவரின் மடியிலும் மாற்றி மாற்றி உட்கார்ந்து, நீண்ட நாள் பிரிந்திருந்த நாட்களை எல்லாம் பேலன்ஸ் செய்யும் முயற்சிகள் அரங்கேறின.
வீட்டில் நடப்பவற்றை மிகவும் சரியாகக் கணித்து அக்ஷராவோடு பகிர்ந்துகொண்டார் அவருடைய அண்ணன். மேலும், எதற்காகவும் அழக்கூடாது என்பதை ஆழமாக வலியுறுத்தினார். இதற்கிடையில், அக்ஷராவிற்காக வாங்கி வந்த சாக்லேட் பாக்ஸை கண்டதும் ஜாலியான பிரியங்கா, 'தனக்குதானே இது' என்று கேள்விகேட்க, 'நீங்க இருக்கீங்கன்னுதான் நிறைய வாங்கினோம்' என்று பதிலளித்தார் அண்ணன். மேலும், சண்டையின்போது நீங்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளவில்லையா என்று சரியான கேள்வியை மிகவும் ஸ்வீட்ட்டாக பிரியங்காவிடம் கேட்டார் அக்ஷராவின் அம்மா. ஆகமொத்தத்தில், பிரியங்காவிற்குப் பெரிய நோஸ் கட் மொமென்ட்டுகள் அரங்கேறின.
மொத்தத்தில், அக்ஷராவின் அம்மாவின் அண்ணனும் வீட்டில் இருக்கும் மற்றவர்களோடும் நன்றாகவே கனெக்ட் ஆகினார்கள். பிறகு பிரிய மனமின்றி அக்ஷராவிற்கு தைரியம் கூறிவிட்டு வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து சிபியின் தந்தை என்ட்ரி. பார்த்ததும் எந்தவித ஆர்ப்பாட்டமும் எக்ஸைட்மென்ட்டும் இல்லாமல், மிகவும் சாதாரணமாகவே தன்னுடைய தந்தையை நலம் விசாரித்தார் சிபி. பிறகு, வீட்டில் இருப்பவர்களோடு சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தனர், சிபியை கன்ஃபெஷன் ரூமிற்கு போகச்சொல்லி அனுப்பினார்.
அங்கு அவருடைய மனைவி காத்திருக்க, அவரையும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி கட்டியணைத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தார். சிபிக்கு வேலை செய்யப் பழகிக்கொடுத்ததற்கு நன்றி என தாமரையிடம் கூறியவர், சிபியைவிட தாமரை வெற்றிபெற்றால் சந்தோஷமாவேன் என்றும் கூறினார் சிபியின் மனைவி. சிபியை பற்றி ஒவ்வொரு விஷயங்களாகக் கூறிக்கொண்டே வர, இப்போதா வீட்டைவிட்டு இவர்கள் வெளியே போவார்கள் என்கிற ரேஞ்சிற்கு சிபியின் ரியாக்ஷன் மாறியது. இதனை வெளிப்படையாக பிரியங்காவும் கூறினார். மொத்தத்தில் சிபியின் குடும்பத்தினர் என்ட்ரி நல்ல பாசிட்டிவ் வைபையே கொடுத்தது.
அமீரின் கசந்த வந்த பாதை மற்றும் இன்றைக்கு யாருடைய குடும்பம் உள்ளே வரும் என்கிற எதிர்பார்ப்போடு இன்றைய எபிசோடுக்கு எல்லோர் போலவும் நாங்களும் வெயிட்டிங்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.