என்னடா நடக்குது இங்க? அக்ஷராவுக்கு மட்டும் எக்ஸ்கியூஸா!

Bigg Boss 5 Tamil Review Kamal Hassan Akshara Pavani Reddy Ameer இதை எல்லாம் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், அமீரையும் சஞ்சீவையும் பாராட்டி அதற்கு மக்கள் எழுந்து கைதட்டிய நாடகம் எதற்கு என்று இன்றுவரை விளங்கவில்லை.

Bigg Boss 5 Tamil Review Kamal Hassan Akshara Pavani Reddy Ameer
Bigg Boss 5 Tamil Review Kamal Hassan Akshara Pavani Reddy Ameer

Bigg Boss 5 Tamil Review Kamal Hassan Akshara Pavani Reddy Ameer : நாளுக்கு நாள் விறுவிறுப்பைக் கூட்டுவதற்கு பிக் பாஸ் ஏதாவது டாஸ்க் வைப்பார் நினைத்தால், அமீர் ஷாக்தான் நமக்கு கொடுக்கிறார். முதல் சீஸனின் மருத்துவ முத்தம், இந்த சீசன் வரை நீண்டுகொண்டு போகிறது. அதிலும், அந்தக் காட்சிகளை நமக்கு டெலிகாஸ்ட் செய்தது இன்னும் ஆச்சரியம்! அப்படி என்னதான் நடந்தது பிக் பாஸ் வீட்டில்? கமல் என்ன சொல்லப்போகிறார்?

நேற்றைய எபிசோட் கமல் ஸ்பெஷல் என்பதால், கடந்த வாரம் நடந்த டாஸ்க்குகளை பற்றி விரிவாகக் கேட்பார் என்றெல்லாம் தயாராகி அமர்ந்தால், வெள்ளிக்கிழமை எபிசோடை பார்த்துவிட்டு வாங்க என்றபடி அகம் டிவி வழியே நுழைந்த நமக்கு அதிர்ச்சி தான் காத்துக்கொண்டிருந்தது. பாவனி படுக்கைக்கு அருகிலேயே குடியேறிய அமீர், ரகசியம் சொல்வது போன்று முத்தம் கொடுத்தது, ஆடியன்ஸான நமக்கு அதிர்ச்சியே! இருந்தாலும், இவ்வளவு வேகம் ஆகாது அமீர். அதுமட்டுமின்றி, விருப்பமில்லாதவருக்கு இப்படி முத்தம் கொடுத்து ஏமாற்றுவது மிகவும் தவறான செயல்.

அதுமட்டுமா, பாவனியை சூட்கேஸிற்குள் அடைத்து வீட்டைச் சுற்றி வந்ததெல்லாம் ஓவர், ஓவர். சரி, இதை பற்றியெல்லாம் கமல் கேட்பாரா என்று நினைத்தால், நேற்றைய எபிசோடில் கேட்கவில்லை. இன்று கேட்பாரா என்கிற ஆர்வம் மக்களிடத்தில் அதிகரித்துள்ளது. வருண் சொன்னதைப்போல, பாவனி ‘நோ’ சொல்ல கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த சம்பவத்தை அடுத்து, கமல் ஹாசனின் ஷோ ஆரம்பமானது. ஆனால், அது ஒன்னும் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. எப்போதுமே பட்டென கோபப்படும் அக்ஷராவை மட்டும் கமல்ஹாசனாகட்டும், ரம்யா கிருஷ்ணன் ஆகட்டும், அவரை தட்டிக்கேட்டதில்லை. சிபியுடன் பிரச்சனை ஆனபோது, சிபியைதான் குறை சொன்னார்களே தவிர, அக்ஷராவை ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. அதேபோலத்தான், சென்ற வாரம் பிரியங்காவிற்கும் அக்ஷராவிற்கும் முட்டிய மோதலில், பிரியங்காவிற்கு அட்வைசும் அக்ஷராவிற்கு பாராட்டுகளும் கிடைத்தன. என்ன மாயமோ!

பிறகு, ராஜுவிற்கு கோபமே வராதா? என்று மௌனம் காத்திருந்தவர்கள் அவர் இரண்டு முறை கோபப்பட்டிருக்கிறார் என்கிற தகவலை வெளியிட்டனர். இதை எல்லாம் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், அமீரையும் சஞ்சீவையும் பாராட்டி அதற்கு மக்கள் எழுந்து கைதட்டிய நாடகம் எதற்கு என்று இன்றுவரை விளங்கவில்லை.

இதற்கு பிறகு, வீட்டில் இருப்பவர்களில் யார் தொடைநடுங்கி மற்றும் துணிச்சல் ஆனவர்கள் என்கிற கேள்விக்கு, கலவையான பதில்கள் வந்தாலும், தொடைநடுங்கி என அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பாவனி முதல் இடத்தில இருக்கிறார். இதனை நாமும் ஒத்துக்கலாம். அதேபோன்று, துணிச்சலானவர் என்கிற கேட்டகிரியில், மற்றவர்களின் வெறுப்புகளைச் சம்பாதிக்கக்கூடும் என்று தெரிந்தும் துணிச்சலாக முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட சிபிக்கு முன்னுரிமை கொடுக்கலாம். வழக்கம்போல இறுதியாக ராஜு முதலாவதாக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட, கமல் மீண்டும் சந்திப்போம் என்று எண்டு கார்ட் போட்டு முடித்தார். இன்றைக்காவது அந்த முத்தம் மேட்டர் பேசுவாரா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil review kamal hassan akshara pavani reddy ameer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com