Bigg Boss 5 Tamil Review Kamal Hassan Priyanka Niroop Abishek Elimination : வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வீட்டில் நடந்த சம்பவங்களை எல்லாம் நேற்று தொகுத்து வழங்கியிருந்தார்கள். கமலின் உடல்நிலை காரணமாக இருக்குமோ! ஆனாலும் வீட்டில் நடந்த சம்பவங்களும் ஒன்னும் அவ்வளவு சுவாரஸ்யமானதாக இல்லை. ஏற்கெனவே அரைத்த அதே மாவைத்தான் அரைத்துக்கொண்டிருந்தனர் நம் போட்டியாளர்கள். நாம் கணித்தது போல அபிஷேக்தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இப்படி சுவாரஸ்யமற்ற எபிசோடாகவே நேற்றை நிகழுவது அமைந்தது. ஆனால், மக்கள் நேரடியாகக் கேள்வி கேட்கும் கான்செப்ட் மற்றும் கொஞ்சம் வித்தியாசமாகவும் கொஞ்சம் சுவாரசியமாகவும் அமைந்தது மனதிற்குக் கொஞ்சம் திருப்தி.
பிரியங்கா சஞ்சீவிடம் வெளியே பார்த்ததற்கு உள் இருந்து பார்ப்பதற்கும் யார் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, தாமரை மட்டுமே வித்தியாசம் என்ற சஞ்சீவின் பதில், மக்களுக்கான விடையாகவே இருந்தது. ஆக, தாமரை தன்னைபோலத்தான் இருக்கிறார், அவர் ஒன்றும் தெரியாத சிறுபிள்ளை என்பது இதிலிருந்து நமக்கு உறுதியாகத் தெரிகிறது. மேலும், பொது மக்களின் ஒருவராகக் கலந்துகொண்டவர், இத்தனை நாள் எல்லோருடனும் பழகி இவ்வளவு தூரம் பயணம் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதனைக் கமலும் குறிப்பிட்டது சிறப்பு!
வெளியே பிரியங்கா கேங் இருபுறம் புறம் பேசிக்கொண்டிருக்க, கிச்சனில் வேறொரு கேங் பேசிக்கொண்டிருந்தனர். இதனை அக்ஷரா இரண்டு அணிகள் என்று ஒப்புக்கொண்டது ஹயிலைட். அதுமட்டுமா, வருண் மற்றும் அக்ஷராவை போல் அமீர் மற்றும் பாவனியின் நட்பும் வீட்டிற்குள் மெதுவாக மலர தொடங்கியிருக்கிறது. என்னதான் அபிநய் விழுந்து விழுந்து பாவனியை தன்னோடு வைத்திருக்க ஆசைப்பட்டாலும், பாவனி என்னவோ அமீரோடுதான் கம்ஃபோர்டேபிளாக இருக்கிறார். இந்த புதிய நட்பைப் பார்ப்பதற்கு கியூட்டாக இருந்தாலும், எவ்வளவு தூரம் இந்த நட்பு பயணிக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
இவர்களின் இந்த பேச்சுவார்த்தையில், பாவனி ஃபீல் பண்ணுவது ராஜூவை நினைத்துதான். கடந்த வார டாஸ்க்காக இருக்கட்டும் அல்லது மற்ற பொது விஷயமாக இருக்கட்டும், பாவனியோடு ராஜு கலந்து பேச மாட்டிங்குறார் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கு அமீராவது முற்றுப்புள்ளி வைப்பாரா?
இவர்களை அடுத்து, நட்பு பிணைப்பில் சிக்கித் தத்தளித்துக்கொண்டிருக்கும் அபிஷேக் மற்றும் பிரியங்காவின் உரையாடல்களை நமக்கு ஒளிபரப்பினார்கள். ‘உனக்கு நான் எனக்கு நீ’ என்று பிரியங்காவும் அபிஷேக்கும் மாற்றி மாற்றி டிசைன் டிசைனாக உரையாடும் காட்சிகளை எடிட்டர் கொஞ்சம் எடிட் செய்து நமக்கு ஒளிபரப்பியிருக்கலாம். நல்ல வேளை, இனி அது போன்ற காட்சிகளும் எமோஷனல் சீன்களும் வராது. அதான், நம்ம அபிஷேக் எலிமினேட் ஆகிவிட்டாரே! பிறகு எதற்கு பயம்!
இப்படி வீட்டிற்குள் சலித்துப்போன விஷயங்களாக பேசிக்கொண்டிருக்க, அகம் டிவி வழியே நுழைந்தார் கமல். வழக்கம்போல ராஜூவை தன்னுடைய கேமை வியாடா சொல்லியும், அமீருக்கு நேரமில்லை அதனால் உடனடியாக களத்தில் குதிப்பது சிறந்தது என்றும் கமல் ஆதிவாசி செய்தபடி நகர்ந்தது நிகழ்ச்சி. இதனை அடுத்து, வெளியே அமர்ந்திருக்கும் மக்கள், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் கேள்விகளை கேட்கலாம் என்கிற ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான், நம் மைண்ட் வாய்ஸை வரிசையாகக் கேட்டனர் நம் மக்கள்.
அக்ஷரா வருணுக்கிடையே இருக்கும் உறவு பற்றி, அண்ணாச்சி ராஜுவுக்கு இடையேயான உறவு பற்றி, பிரியங்காவின் ஸ்ட்ராடஜி என ஏராளமான கேள்விகளை மக்கள் முன்வைத்தனர். உள்ளே மிகவும் மோசமாக விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவாக கன்டென்ட் எதுவும் கிடைக்கவில்லை.அதனால், இந்த கேள்விகளை வைத்துக்கொண்டாவது ஆட்டத்தை விறுவிறுப்பாக்குங்கள் என்பதுபோல இருந்தது இந்த செக்மென்ட். ஆனால், என்னதான் சொல்லுங்க மற்ற சீசன்களில் வந்தது போன்ற பெரியளவிற்கான விமர்சனங்கள் எதுவும் இந்த சீசனில் இல்லை. கமல் உட்படப் பலரும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், நிரூப் போன்று நனறாக விளையாடுபவர்கள் கூட ஒரு கட்டத்தில் சோர்வடைந்து விடுகின்றனர். இந்த மனநிலைக்கு இந்த மக்களின் குரல் செக்மென்ட் ஒரு பூஸ்டராக இருக்கலாம். பார்ப்போம்!
எவ்வளவுதான் சொல்லுங்க, பிரியங்காவிற்கு மட்டும் மற்றவர்களின் பாயின்ட் புரியவே இல்லை. சஞ்சீவ் உட்பட பலரும் அபிஷேக் மீதான பார்வையும் அதனால் பிரியங்காவின் பிம்பம் பற்றியும் சொன்னாலும், தன்னுடைய நிலைப்பாட்டை யாரும் புரிந்துகொள்ள மாட்டிங்குறார்களே என்ற ஆதங்கம்தான் பிரியங்காவிடம் அதிகம் உள்ளது. அதற்காக நிரூப்பிடம் கூட வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் பிரியங்கா. அவருக்கும் உண்மை ஒருநாள் புரியும்!
ஒரு வழியாக மீண்டும் ஒரு முறை அபிஷேக் வீட்டை விட்டு வெளியேற, மீண்டும் பிரியங்கா உடைந்தார். தான் ஒரு எமோஷனல் இடியட் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் பிரியங்கா, அதில் இருக்கும் நெகட்டிவிட்டியை தவிர்த்தால் சிறப்பாக இருக்கும். தன்னை முதுகுக்குப் பின்னால் குத்தியவர்கள் எல்லாம் வீட்டிற்குள் இருக்கும்போது, தன் மீது அன்பு செலுத்தியவரை ஏன் வீட்டை விட்டு அனுப்பினார்கள் என்கிற கேள்வி பிரியங்கா மனதிற்குள் ஆழமாகப் பதிந்தது. அதற்கான விடையை வீட்டில் உள்ள அனைவரும் சொன்னாலும், அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு யார் என்ன செய்ய முடியும்?
இன்று தலைவருக்கான போட்டி, நாமினேஷன் எனப் பல சம்பவங்கள் அரங்கேற உள்ளன. 60 நாள்களைக் கடந்து விட்ட நிலையில், இனி ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பார்ப்போம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil