ப்ரோமோவை பார்த்ததிலிருந்து, இன்று அக்ஷராவுக்கு நிரூப்பிற்கும் செம்ம சண்டை இருக்கும்போல என்று எதிர்பார்த்தால், வழக்கம்போல புஸ்வானமாக மாறியது. 'என்னடா நடக்குது இங்க' என்பதுபோல பல விஷயங்கள் முரணாக நேற்று நடைபெற்றது. அப்படி என்னென்ன கம்பி கட்டுற கதைகள் எல்லாம் நடைபெற்றன?
டார்லிங் டம்பக்கு பாடலோடு ஆரம்பமான நேற்றைய தினம், இந்த வாரம் நிலத்தின் ஆளுமை என்ற அறிவிப்போடு தொடர்ந்தது. சென்ற வாரத்தைவிட ஆளுமைக்கான ஏராளமான விதிமுறைகளை முன்வைத்தார் பிக் பாஸ். நிலத்திற்கான நாணயத்தை வைத்திருக்கும் நிரூப்பிற்கு வேற லெவல் அதிகாரங்கள் வஹ்ஸ்ங்கப்பட்டன. சும்மாவே நம்ம நிரூப் தந்திரமாக விளையாடுபவர். அதிலும் இப்படி ஆளுமை கொடுத்தால் சும்மா விடுவாரா என்ன?
தனக்கு உதவியாளராக ஒரு பெண்ணை தேர்வு செய்யவேண்டும் என்று கூறியதும், அக்ஷராவை தேர்வு செய்தார் நிரூப். ஏற்கெனவே அக்ஷராவிற்கும் நிரூப்பிற்கும் வாய்க்கால் தகராறு உள்ளது. அதனை சரிசெய்ய இதுதான் சரியான நேரம். அந்த வீட்டிலேயே தன்னோடு ஒற்றுப்போகாத நபர் அக்ஷராதான். அவருக்கும் தன்னை பிடிக்க வைத்துவிட்டால், பாதுகாப்பாக இருக்கலாம் என்று நிரூப் நினைத்திருப்பார் போல. அதனால் அக்ஷராவை அடுத்த வேறு யாரையும் தேர்வு செய்யவில்லை. இந்த வீட்டை விட்டுக்கூடச் செல்ல தயார் ஆனால், நிரூப்புடன் இணைந்து பணிபுரிய முடியாது என்கிற முடிவில் அக்ஷரா இருக்க, அதெல்லாம் முடியாது என்று பிக் பாஸ் கூற, வேறு வழியின்றி இந்த ஆஃபரை அக்ஷரா ஏற்றுக்கொண்டார்.
படுக்கை அறை முழுவதும் இப்போது நிரூப் கண்ட்ரோலில் இருக்க, அதனைப் பொருட்படுத்தாமல் அண்ணாச்சி உள்ளே சென்றதைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் புகார் செய்தனர். இதனை விசாரித்த நிரூப் நிச்சயம் அண்ணாச்சிக்கு தண்டனை உண்டு என்று அறிவித்தார். ஆனால், இந்த சம்பவம் பிரியங்கா மற்றும் அண்ணாச்சிக்கு இடையே பெரும் வாக்குவாதத்தில் கொண்டு சென்றது. அண்ணாச்சிக்கு யாருக்குக் கீழும் பணிந்து போவதில் விருப்பம் இல்லை என்றும் அதனால்தான் வேண்டுமென்றே அந்த அறைக்குச் சென்றதாகப் பிரியங்கா கூற, அதை மறுத்துப் பேசினார் அண்ணாச்சி. இப்படியே இந்த வாக்குவாதம் நீண்டது. ஆனால், ஒரு முடிவுக்கு மட்டும் வரவில்லை. இப்போவே கண்ணைக் கட்டுதே!
பிறகு, வருண் மற்றும் அக்ஷரா வீட்டில் இருக்கும் மற்ற நாணயங்களை எப்படிக் களவாடலாம் என்று தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இதில் இருவரும் தங்களுக்கென கோட் லேங்குவேஜ் உருவாக்கிக்கொண்டிருந்தனர். ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருவருக்குமிடையே இருக்கதான் செய்கிறது. நடக்கட்டும் நடக்கட்டும். இதனைத் தொடர்ந்து, ஒரு வழியாக அக்ஷராவை தன்னுடைய உதவியாளராக நிரூப் தேர்ந்தெடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றும் வேலையில் இறங்கினார். அக்ஷராவிடம் ஏற்பட்ட அந்த வாய்க்கால் தகராற்றைப் பேசி சரிசெய்ய முரசை செய்தார். ஓரளவு வெற்றியும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கேப்டன்சி டாஸ்க். ஏற்கெனவே சென்ற வாரத்தின் சிறந்த போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட ராஜு மற்றும் சிபிக்கு இடையேதான் போட்டி நடைபெற்றது. இறுதியில் சிபி வெற்றிபெற, இரண்டாம் முறையாக சிபி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நாணயத்தை வைத்து யாரவது கேப்டன் பதவிக்கு சவால் விடுகிறீர்களா என்று பிக் பாஸ் கேட்டதும், வருண் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார். கழிப்பறையைத் தனி ஆளாக சுத்தம் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்றுக்கொண்டால், தாராளமாக கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூற, அதற்கு சம்மதித்து வீட்டின் இந்த வார தலைவரானார் வருண்.
பிறகு அனைவரும் எதிர்பார்த்த நாமினேஷன் டாஸ்க். ஆனால், இம்முறை யாரைக் காப்பாற்ற ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வியை ட்விஸ்ட் செய்துவிட, இங்குதான் சில அதிர்ச்சியான விஷயங்கள் அரங்கேறின. வந்த நாளிலிருந்து அபிநய் தன்னிடம் தவறாகப் பேசுகிறார் என்று புகார் அளித்த வந்த பாவனி, அவர் காப்பாற்றப்படவேண்டும் என்று சொன்னது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான ட்விஸ்ட்டாக இருந்தது. அதற்கும் மேலாக, சென்ற வாரத்தின் கன்டென்ட்டாக இருந்த சுருதி, தாமரை பிரச்சினையை அடுத்து, தாமரையைக் காப்பாற்ற நினைப்பதாக சுருதி கூறியது உலக மகா பெரிய உருட்டாக இருந்தது. இதற்கு ஏன் தாமரை பற்றி அவ்வளவு கத்தி, கூப்பாடு போடவேண்டும் சுருதி?
இப்படி ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி காப்பாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்ட பிறகு, சிபி, இசைவாணி, மது, ஐக்கி, சுருதி, நிரூப், அக்ஷரா, அபிநய் மற்றும் பாவனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள நாணயம் வைத்திருப்பவர்கள் அதனைப் பயன்படுத்திக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமா என்று பிக் பாஸ் கேட்டார். வழக்கம் போல யாரும் அந்த நாணயத்தைப் பயன்படுத்தவில்லை.
விதிமீறும் ஒவ்வொருவருக்கும் நிரூப் கொடுக்கும் தண்டனைகள் சுவாரஸ்யமாகவே இருந்தது. நிரூப்பின் ஸ்ட்ராட்டஜி அனைத்தும் பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது. தனக்குக் கொடுக்கப்பட்ட ஆளுமையை நல்ல விதமாகப் பயன்படுத்துவார் அதே சமயம் மக்களை என்டெர்டெயின் செய்ய வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தினமும் இரவில் ஐந்து பேர் படுக்கை அறையில் தூங்க கூடாது என்பது நிரூப்பின் ஆளுமைகளில் ஒன்று. அதன்படி அண்ணாச்சி, அபிநய், மதுமிதா, பாவனி மற்றும் இசைவாணி வெளியே தூங்க வேண்டும் என்று நிரூப் கட்டளையிட்டார். இறுதியாக, படுக்கை அறையை சுத்தம் செய்ததைக் கண்டு மகிழ்ந்த நிரூப், அதனை அவ்வளவு அழகாக செய்த தாமரையைப் பாராட்டவும் மறக்கவில்லை. எல்லா விதத்திலும் நிரூப்பின் செயல்பாடு முதிர்ச்சியான உள்ளது. இப்படியே சென்றால், நிச்சயம் இறுதிவரை பயணிக்க வாய்ப்பு உண்டு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.