வீடுன்னா இப்படி இருக்கணும்.. பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த எட்டாவது அதிசயம்!

Bigg Boss 5 Tamil Review Niroop Priyanka Ameer Pavani இப்படி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து விளையாடியது பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

Bigg Boss 5 Tamil Review Niroop Priyanka Ameer Pavani
Bigg Boss 5 Tamil Review Niroop Priyanka Ameer Pavani

Bigg Boss 5 Tamil Review Niroop Priyanka Ameer Pavani : அடடா! இது உண்மையில் பிக் பாஸ் வீடுதானா? என்று சந்தேகம் எழும் அளவிற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்த தினமாக நேற்றைய எபிசோட் இருந்தது. நிரூப்பிற்காக அமீர், தாமரை ஆகியோர் விட்டுக்கொடுத்த விதம், பிட்சாவிற்காக பிரியங்கா விட்டுக்கொடுத்த அட்ராசிட்டி என வீடே பாசப்போராட்டத்தால் களைகட்டியது. ஆனால், வழக்கம்போல ப்ரோமோவில் காட்டிய பில்ட் அப் சீன் எதையும் ஒளிபரப்பவில்லை. இருந்தாலும், நேற்றைய பகுதி சுவாரசியமாகவும் பாசிட்டிவாகவும் இருந்தது. சிறப்பு!

பாவனிக்கு பாயசம் கொடுக்கவில்லை எனத் தாமரையிடம் சஞ்சீவ் கூறும் காட்சியில் ஆரம்பமானது நேற்றைய எபிசோட். சஞ்சீவ் பக்கத்திலிருந்து பார்த்தால் அவருடைய கேள்வியும் ஆதங்கமும் சரியாகவே உள்ளது. ஆனால், இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று தாமரை அலட்சியமாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. என்னதான் வேண்டாம் என்று கூறினாலும், வீட்டில் மற்ற அனைவர்க்கும் ஓர் உணவைப் பகிரும்போது, ஒரு வார்த்தை கேட்பதில் தவறெதுவும் இல்லை. தாமரை மற்றும் பாவனி அவர்களுக்குள் நிகழும் பிரச்சனைகளை அமர்ந்து சரிசெய்தால் மட்டுமே இந்த பனிப்போர் ஓர் முடிவுக்கு வரும்.

இதற்கிடையில், ராஜு தாமரையிடம் சமாதானமாகப் பேசுவது, இதைப் பார்த்த சஞ்சீவும் அமீரும் ‘ராஜூ சொன்னால் மட்டும் அமைதியாகக் கேட்கிறாரே!’ என்று கிசுகிசுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாம் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த பேருந்து டாஸ்க் வந்தது. சிபியைத் தவிர மற்ற அனைவரும் பேருந்திற்குள் ஏறி, சிறிது நேரம் ஜாலியாக இருக்க பிறகுத் தன் வேலையை ஆரம்பித்தார் பிக் பாஸ்.

விதவிதமான திரவம் கலந்த தண்ணீர், புகை என வகை வகையாக அனுப்பி, போட்டியாளர்களுக்குக் குமட்டலை ஏற்படுத்தினார் பிக் பாஸ். இந்தத் தடங்களைத் தாக்குப் பிடித்து யார் இறுதி வரை இருக்கிறார்கள் என்பதை சோதனை செய்தார். பிறகு, ஒவ்வொரு நிறுத்தத்தில் யாரவது ஒரு நபர் வெளியேறவேண்டும் என்பது டாஸ்க். இதில், மக்கள் தன்னை காப்பாற்றுவார்கள் என்றபடி முதலாவதாக வீட்டை விட்டு வெளியேறினார் ராஜு.

பிறகு, யார் அடுத்தது வெளியேற வேண்டும் என்ற வாதங்கள் போய்க்கொண்டிருக்க, தன்னால் ஆத்திரத்தை அடக்கினாலும் இதை அடக்க முடியவில்லை என்றபடி பேருந்தை விட்டு இறங்கி கழிவறைக்கு ஓடினார் சஞ்சீவ். இவரைத் தொடர்ந்து அக்ஷராவும் இதே காரணத்திற்காகப் பேருந்தை விட்டு வெளியேறினார். திடீரென வெளியில் இருந்து ஒருவர் வந்து பேருந்தின் நீளத்தைச் சுருக்க, அவரைக் கண்டு வீடே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அதிலும், தங்களுடைய சீசன் எப்படி இருக்கிறது?? நல்லா இருக்கா? என்று பிரியங்கா கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே சென்று பாருங்கள் பிரியங்கா, ஹேடஸ்ட் போட்டு உங்கள் சீசனை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு கூச்சல் அதிகமாக இருக்கு!

பிறகு, தன்னால முடியும் என்றாலும் இந்த கேம் முழுமையாக நடைபெற வேண்டும் என்கிற காரணத்திற்காக பாவனி வெளியேறினார். இதற்கு பிறகுதான், பிக் பாஸின் தந்திர வேலையை ஆரம்பித்தார். சாப்பாடு என்றால் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கும் பிரியங்காவை சோதிப்பதற்காகவே, பேருந்தை விட்டு இறங்கியவர்களுக்கு மட்டும் பிட்சா அனுப்பி வைத்தார். அதுவும் பேருந்து பக்கத்தில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும் என்பது டாஸ்க். இதன்படியே ராஜு, அக்ஷரா அனைவரும் வெறுப்பேற்ற, சைவ பிட்சா இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு பேருந்தை விட்டு வெளியேறினார் பிரியங்கா.

பிரியங்காவை தொடர்ந்து வருணும் பீட்ஸாவிற்காக விட்டுக்கொடுத்தார். என்ன ஒரு வில்லத்தனம் பிக் பாஸ். இவர்களுக்காகவே இப்படி ஒரு டாஸ்க். இவர்களை அடுத்து, நிரூப்பிற்காக தாமரை விட்டுக்கொடுத்து இறங்கியது கியூட். வரவர தாமரை வேற லெவல் கேம் விளையாடுகிறார். இறுதி வரை சென்றால் நிச்சயம் இவருக்கு ஜெயிக்கும் வாய்ப்பு அதிகம். அமீர் மற்றும் நிறூய்ப்பிற்காக அபிநய் விட்டுக்கொடுக்க, இறுதியாக தன்னால் முடியும் என்றாலும், நிரூப்பிற்காக தான் இந்த விளையாட்டை விட்டுக்கொடுப்பதாக கூறி அமீர் பேருந்தை விட்டு வெளியேறினார். இப்படி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து விளையாடியது பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

எவ்வளவுதான் நிரூப்பை கோழை, பயப்படுகிறார் என்று பலரும் பலவிதமாகத் தாழ்த்திப் பேசினாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு இவ்வளவு தூரம் போராடுவது சிறப்பு. அதிலும், தான் இந்த வார எவிக்ஷன் ப்ராஸஸிலிருந்து காப்பாற்றப்பட்டார் என்றதும், குழந்தைத்தனமாக மாறியது அவருடைய முகம். நிரூப் காப்பாற்றப்பட்டார் என்றதும் பிரியங்கா முகத்திலும் அவ்வளவும் ஆனந்தம். என்னதான் இருந்தாலும், தன்னுடைய நண்பனை விட்டுக்கொடுக்க முடியவில்லை பிரியங்காவிற்கு. மொத்தத்தில், கத்தி கத்தி காதுகளை டேமேஜ் ஆக்காமல் பாசிட்டிவான எபிசோடாக இருந்தது அருமை! ஆனால் என்ன, நிரூபியைவிட பேருந்தின் உயரம் குறைவாக இருந்தது. இதை மட்டும் கொஞ்சம் பார்த்திருக்கலாம் பிக் பாஸ்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil review niroop priyanka ameer pavani

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com