Advertisment

நெருப்பாக மாறிய நிரூப்.. எப்போதும் விட்டுக்கொடுக்கும் அமீர்.. கடும் போட்டியில் பிக் பாஸ் வீடு!

Bigg Boss 5 Tamil Review Niroop Priyanka fights Ameer Pavani அவ்வளவு பெரிய காமெடி இல்லையே என்று ஒரு பக்கம் தோன்றினாலும் அபிநயின் நிலையை நினைத்து பரிதாபமாகவும் இருந்தது.

author-image
priya ghana
New Update
Bigg Boss 5 Tamil Review Niroop Priyanka fights Ameer Pavani

Bigg Boss 5 Tamil Review Niroop Priyanka fights Ameer Pavani

Bigg Boss 5 Tamil Review Niroop Priyanka fights Ameer Pavani : இரண்டு நாள் பிக் பாஸ் வீடு அமைதியாக இருந்தால் வீட்டில் இருக்கு போட்டியாளர்களுக்கே பொறுக்காது போல. அதிலும் இந்த சீசன் மிகவும் மோசம். கத்துவதே 24 மணிநேர டாஸ்க்காக நினைத்து தங்களை அர்ப்பணித்துள்ளனர். அதில் டாப் இடத்தில இருப்பவர்கள் இணை பிரியா நண்பர்களான நிரூப் மற்றும் பிரியங்காதான். இவர்கள் ஏன் சண்டை போடுகிறார்கள், எதற்காக வார்த்தைகளால் தாக்கிக்கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது ஆனால், வாக்குவாதங்கள் மட்டும் கரெக்ட்டா வந்துவிடும். என்னதான் நடக்குது உள்ளே!

Advertisment

ஆரம்பமே இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்குடன் தொடங்கியது. கையில் பிடித்திருக்கும் கயிற்றை யார் இறுதி வரை விடாமல் அப்படியே பற்றுக்கொண்டிருக்கிறார்களோ அவரே இந்த வாரத்தின் தலைவர் என்று கூறியதும், அனைவரும் மும்முரமாக இந்த டாஸ்க்கில் பங்குபெற்றனர். எல்லோருக்கும் ஒரு கவலை என்றால், சிபிக்கு வேறொரு கவலை. நம்மைப் போல அபிநய் வீட்டிற்குச் சென்றதும் உறங்கியிருப்பாரா அல்லது அடி வாங்கியிருப்பாரா என்கிற சந்தேகம்தான் அவருக்கும். இதனை கேட்டு ஏன் பாவனி, பிரியங்கா அப்படி சிரிக்கின்றனர்! அவ்வளவு பெரிய காமெடி இல்லையே என்று ஒரு பக்கம் தோன்றினாலும் அபிநயின் நிலையை நினைத்து பரிதாபமாகவும் இருந்தது. எது எப்படியோ.. அபிநயின் நேர்காணலுக்காக மக்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த கயிறு டாஸ்க்கில் மற்ற வேலைகளை ஒன்றாகப் பகிர்ந்து கொண்டாலும், கழிப்பறையை எப்படி உபயோகிக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. அப்போது தாமரை கழிவறையைப் பயன்படுத்தவேண்டும் என்று கூறியபோது, 'உள்ளே சென்று கயிறை விடமாட்டீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது' என நிரூப் எழுப்பிய கேள்வி நியாயம் என்றாலும், 'அப்போது நீங்கள் புகைபிடிக்கும் போது எப்படி நம்பியிருப்போம்' என அக்ஷராவின் பதிலடி வேற லெவல். ஆனால், கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்கிற காரணத்தினாலேயே சஞ்சீவ், அக்ஷரா ஆகியோர் போட்டியை விட்டு வெளியேறினர்.


ஆரம்பத்திலிருந்து டாஸ்க் என்றால் நெருப்பாக மாறுபவர் நிரூப். இந்த டாஸ்க்கிலும் அப்படிதான் செயல்பட முயற்சி செய்தார். அந்த வரிசையில் மற்றவர்களை வலுவிழக்க வைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் களத்தில் இறங்கியவர், முதலில் டார்கெட் செய்தது தன்னுடைய நெருங்கிய தோழி பிரியங்காதான். ஆனால், அதுவே இருவருக்குமிடையே கடும் மோதலை தூண்டியது. என்னதான் சண்டைகள் வந்தாலும், இவர்கள் இருவரும் பயன்படுத்தும் வார்த்தைகள் கடுமையாகவே இருக்கிறது. அதிலும், மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிரியங்கா, சிறுபிள்ளைத்தனமாக 'து' எனக் கூறுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருடைய தரம் மற்றும் இடம் அறிந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

 இருவருக்கும் முந்தைய நாள் இரவு ஆரம்பித்த வாக்குவாதம் அடுத்த நாள் வரை நீண்டது. கத்துவது மட்டுமே காதில் பளார் பளார் என்று விழுந்தது. இதனால் பார்ப்பவர்களுக்கு எப்போதுதான் இந்த சண்டை முடியும், கேப்டன்சி டாஸ்க் என்ன ஆச்சு என்கிற கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டனர். அந்த அளவிற்கு நிகழ்ச்சியின் கன்டென்ட்டில் பெரும்பாலான நேரம் இந்த சண்டையில் பயணித்தது. ஏற்கெனவே, தூக்கத்தில் பாவனி, வருண் ஆகியோர் தங்களின் கைகளை கயிற்றிலிருந்து எடுத்துவிட, நிரூப்பும் கைகளை விட்டு சண்டையில் மும்முரமாக இறங்க, இறுதியாக அமீர் மற்றும் தாமரைக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது.

தாமரையின் வாதத்தில் மனமிறங்கி அமீர் இந்தப் போட்டியிலிருந்து விலகினார். இதனால், தாமரை இந்த வாரத்தின் தலைவரானார். என்னதான் சொல்லுங்க, சென்ற வாரத்தின் பஸ் டாஸ்கின்போதும் அமீர் இறுதி வரை தாக்குப்பிடித்து நின்று நிரூப்பிற்கு விட்டுக்கொடுத்தார். இந்த வாரமும் இறுதிவரை இருந்து தாமரைக்கு விட்டுக்கொடுத்தார். தன்னால் நிச்சயம் முடியும் என்றாலும், மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து ஹவுஸ்மேட்ஸ் இடையே நல்ல போட்டியாளர் என்கிற பெயரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் அமீர்.

அமீர் என்றாலே பாவனியை முத்தமிட்டதுதான் நினைவுக்கு வருகிறது. ஆனால், நேற்றைய எபிஸோடிலும் இன்னொரு முத்தக் காட்சியை ஒளிபரப்பினார் பிக் பாஸ். ஆனால், அது இருவருக்கும் மியூச்சுவலாக இருந்ததால் அதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆம், அக்ஷரா போட்டியை விட்டு வெளியேறும்போது, வருணுக்கு 'பப்பி' கிஸ் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

இறுதிவரை தனிப்பெண்ணாக நின்று போராடி வெற்றிபெற்ற தாமரையைப் பற்றிச் சொல்லாமல் எப்படி? உண்மையில் வரவர தாமரை எல்லோருக்கும் மிகவும் டஃப் கொடுத்து விளையாடுகிறார். பெண்களில் சிறந்த விளையாட்டு வீரர் தாமரை என்று சொன்னாலும் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அணைத்து டாஸ்க்கிலும் தன்னால் முடிந்த உழைப்பைக் கொடுக்கிறார். அதேபோல, சென்ற வார டாஸ்க்கில் அமீர் மட்டும் வெற்றிபெறவே கூடாது என்று குறியோடு விளையாடிய தாமரை, இந்த வாரம் தனக்காக விட்டுக்கொடுத்ததும், மனம் மாறி அமீரை அணைத்துக்கொண்டார். பலே தாமரை!

இறுதியாக நாமினேஷன். வழக்கம்போல, தங்களுக்குப் பிடிக்காதவர்களின் லிஸ்ட்டை எடுத்துவிட்டனர் போட்டியாளர்கள். ஆனால், அதில் ஹயிலைட்டாக இருந்தது பாவனியை அக்ஷரா நாமினேட் செய்யும்போது அவர் கூறிய காரணம்தான். அபினையை அடிமை போல் பயன்படுத்திக்கொண்டு, வீட்டிலேயே பிடிக்காத நபர் என்று கூறினார். இப்போது அமீர் எனும் அடிமை வந்தபிறகு அபினையை விரட்டிவிட்டார் என்று கூறி பாவனையை நாமினேட் செய்தார். தனக்கு ஏராளமான அடிமை நண்பர்கள் உள்ளனர் என்பதை ஒருமுறை அக்ஷராவே ஒத்துக்கொண்டிருந்த க்ளிப்பிங்தான் நினைவுக்கு வந்தது. இந்த சீசனில் அனைவரும் தங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி ரேஞ்சில்தான் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். சிறப்பு!

இறுதியாக, முதல் முறையாக நாமினேஷனுக்கு வீட்டிலேயே அதிக வாக்குகளைப் பெற்றார் பிரியங்கா. இவரைத் தொடர்ந்து சிபி, பாவனி, நிரூப், அக்ஷரா, வருண் ஆகியோர் நாமினேஷனில் வந்தனர். அநேகமாக வந்தான் இந்த வாரம் வீட்டை விட்டுச் செல்வாரோ! பொறுத்திருந்து பார்ப்போம்!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vj Priyanka Pavani Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment