அப்போ அப்படி சொன்னது எல்லாம் நடிப்பா? – சண்டையில் சிக்கிய நிரூப்!

Bigg Boss 5 Tamil Review Niroop Varun Akshara Ciby இதில் இவ்வளவு இறுக்கமாகப் பிடித்தால், அக்ஷராவுக்கு கோவம் வரத்தானே செய்யும்.

Bigg Boss 5 Tamil Review Niroop Varun Akshara Ciby
Bigg Boss 5 Tamil Review Niroop Varun Akshara Ciby

Bigg Boss 5 Tamil Review Niroop Varun Akshara Ciby : ‘ஒத்த சொல்லால..’ என்று நேற்று ஒலித்த இந்த பாடலுக்கு ஏற்றபடிதான் பிக் பாஸ் வீடும் பயணித்தது. ஆம், ஒரேயொரு சொல், டோட்டல் டேமேஜ் என்பதுபோல, நிரூப், வருண், அக்ஷரா, சிபி என அனைவரும் ஒவ்வொரு கடுமையான சொற்களால் சண்டைபோட்டுக் கொண்டனர். என்னதான் நடந்தது பிக் பாஸ் வீட்டில்?

காலை பாடல் முடிந்தவுடன் இந்த வாரத்தின் கேப்டனாக இருக்கும் இசைவாணி, மற்ற ஹவுஸ்மேட்ஸ் உண்ணும் தட்டு, டம்ளர் ஆகியவற்றை அகற்றும் பணி இசைவாணிக்கு கொடுக்கப்பட்டது. இதனை எல்லோரிடமும் தெரிவித்துக்கொண்டிருந்தார். பிறகு நேரடியாக லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க். ‘நீயும் பொம்மை நானும் பொம்மை, தெரியும் உண்மை’ என்ற இந்த டாஸ்க்கில் மற்றவரைக் காப்பாற்றுவதற்காக விளையாடவேண்டும். எவ்வளவு வில்லங்கமா யோசிச்சிருக்காரு பிக் பாஸ்.

வீட்டில் இருப்பவர்களின் பெயர் போட்ட பொம்மைகள் வரிசையாக இருக்க, அதனை பஸர் சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு சற்று தொலைவில் இருக்கும் கூடாரத்துக்குள் செல்ல வேண்டும். யார் இறுதியாக செல்கிறார்களோ அவர் கையில் இருக்கும் பொம்மையில் யாருடைய பெயர் இருக்கிறதோ அவர்தான் ‘அவுட்’. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க! ஆனால், இதில் ட்விஸ்ட் என்னவென்றால், யாரும் தங்களுடைய பெயர் இருக்கும் பொம்மையை எடுக்கக்கூடாது. ஆனால், முதல் சுற்றிலேயே ராஜுவின் பொம்மையை யாரும் எடுக்காமல் போக, அதனை வேறு வழி இன்றி ராஜூவே எடுத்துச் சென்றார். இதனால், அந்த சுற்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பிறகுதான் வீட்டின் நிலைமை வேறு விதமாக மாறியது.

அடுத்தபடியாக தாமரை, ப்ரியங்காவின் பொம்மையை தூக்கிக்கொண்டு கடைசியாகக் கூடாரத்திற்குள் நுழைந்ததால், பிரியங்கா போட்டியை விட்டு வெளியேறினார். இதற்கான காரணமாக, தாமரைக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது என்றும், நிரூப் பொம்மையை மாற்றி வைத்ததால் தாமரை குழப்பமடைந்துவிட்டார் என்றும் கூறினார் பிரியங்கா. இவ்வளவு வெகுளியா இருக்கீங்களே பிரியங்கா!

அண்ணாச்சி மற்றும் ராஜுவிற்கு இடையே பாசப் பிணைப்பு போராட்டமே நடைபெற்றது. யார் இறுதியாக செல்லவேண்டும் என்று ஒருபக்கம் அடித்துக்கொண்டிருக்கையில், சிபியின் பொம்மையை வைத்திருக்கும் அண்ணாச்சியை இறுதியாக வரச்சொல்லி சிபியே சொல்ல, அண்ணாச்சி பொம்மையை வைத்திருக்கும் ராஜுவை அண்ணாச்சியே தடுத்த நிறுத்த என்று இவர்களின் கெமிஸ்ட்ரி, வேற லெவல்.

இதனைத் தொடர்ந்து, பொம்மையைத் தூக்கி ஓடிக்கொண்டிருந்த அக்ஷராவை மடக்கி இருக்கமாகப் பிடித்து, அவரை ஓடவிடாமல் தடுத்த நிரூப்பை வைத்துத்தான் அடுத்த பஞ்சாயத்து. என்னதான் இருந்தாலும், அவ்வளவு பெரிய உருவம் ஒருவரை சாதாரணமாகப் பிடித்தாலே அவரிடமிருந்து தப்பிப்பது சிரமம். இதில் இவ்வளவு இறுக்கமாகப் பிடித்தால், அக்ஷராவுக்கு கோவம் வரத்தானே செய்யும்.

இதன் தொடர்ச்சியாக நிரூப் வருணின் ஆட்டத்தைத் தரைமட்டமாக்க நினைத்து அவரோடு போட்டியிட்டார். சும்மா விடுவாரா வருண்! ஏற்கெனவே அக்ஷராவை மடக்கிப் பிடித்ததில் கடுப்பான வருண், இப்போது தன்னையும் டார்கெட் செய்யவே, கடும் கோபத்திற்கு சென்றார். வார்த்தைகள் தாறுமாறாக இருவருடமிருந்தும் வந்தது. அதிலும், ‘பொம்பளை கிட்டக் கொடுத்து வைக்கிற’ என்று நிரூப் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதே நிரூப்தான், தனக்கு இந்த பிக் பாஸ் வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் தன்னுடைய முன்னாள் காதலி யாஷிகா என்றும் பெண்ணால் முன்னுக்கு வந்தால் என்ன தவறு என்றும் கேட்டவர். அவரவர்களுக்கு வந்தால் மட்டும்தான் ரத்தம் போல.. என்ன நிரூப் இதெல்லாம்?

இந்த சண்டை மேலும் முற்றிப்போக, அக்ஷரா மற்றும் சிபியும் களத்தில் இறங்கினர். ஏற்கெனவே நடைபெற்ற டாஸ்க்கில் அக்ஷராவும் ஒரு கட்டத்தில் தடுத்து நிறுத்த முயற்சி செய்ததை ஒப்பிட்டுக் காட்டினார் சிபி. ஆனால், அதுவும் இதுவும் ஒன்றல்ல என்று வாதாடிய அக்ஷரா தன் நிதானத்தை இழந்தார். ஒருகட்டத்தில், சிபி கேட்ட வார்த்தை உபயோகிக்க அதற்கு ஈடுசெய்வது போல அக்ஷராவும் கேட்ட வார்த்தையைப் பயன்படுத்தினார். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் மிகவும் வெளிப்படையாக அடித்துக்கொள்கின்றனர். அதுசரி, அவர்கள் உண்மையில் அவர்களாகவே இருக்கின்றனர் என்பது தெளிவாகிறது பிக் பாஸ்!

என்னதான் சிபியின் வாக்குவாதம் சரியாக இருந்தாலும், கேட்ட வார்த்தை பயன்படுத்தியிருக்க வேண்டாம். எந்த டாஸ்க்கிலும் மிகவும் கூலாக விளையாடுபவர் ராஜு மட்டுமே. வெற்றிபெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி தன்னுடைய நகைச்சுவை உணர்வால் மேலும் மேலும் ரசிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். அப்படிதான் இந்த டாஸ்க்கில் வெளியேறியபிறகும் ரசிக்க வைக்கும்படி இருந்தது அவருடைய நடவடிக்கை. இந்த விவகாரமான டாஸ்க் இன்றைக்கு என்னவெல்லாம் சர்ச்சைகளைக் கொண்டு வருமோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil review niroop varun akshara ciby

Next Story
பிரியங்கா – நிரூப் , அக்ஷரா – சிபி …. மோதலின் உச்சத்தில் பிக்பாஸ் வீடுbiggboss Tamil News: fight between cibi and akshara in biggboss house
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express