scorecardresearch

பாவனியின் குறும்படம் ஓகே.. வந்த நாள் முதல் அபிநயின் படம் எங்கே பிக் பாஸ்? ஒருதலைப்பட்சம்!

Bigg Boss 5 Tamil review Pavani Reddy Abinai Priyanka Kamal Hassan இப்படி அபிநய்யை காப்பாற்றும் நோக்கில் ஒவ்வொரு செயலும் ஆரம்பத்திலிருந்தே செய்துகொண்டிருக்கும் பிக் பாஸ், நமக்கான க்ளாரிட்டியை கொடுக்காமல் போனதும் இந்தப் பிரச்சனைக்கான ஒரு காரணம்.

Bigg Boss 5 Tamil review Pavani Reddy Abinai Priyanka Kamal Hassan
Bigg Boss 5 Tamil review Pavani Reddy Abinai Priyanka Kamal Hassan

Bigg Boss 5 Tamil review Pavani Reddy Abinai Priyanka Kamal Hassan : பாவனி – அபிநய் பற்றிய பேச்சுகள் அவரவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட விஷயம் என்பதையும் தாண்டி, இந்த பிரச்சனை வேறு எங்கெங்கோ கூட்டிச் சென்றது நேற்றைய எபிசோடில். இரண்டு பேரின் மீதும் தவறுகள் இருந்தாலும், அதனை வெளிப்படையாக சுட்டிக்காட்டாமல், கமல் மறைமுகமாகப் பேசி அபிநயை மட்டும் விலகி இருக்கச் சொன்னது, ஒருதலைபட்ச முடிவோ என்கிற சந்தேகத்தை வலுத்தாலும், இனிமேல் இந்தப் பிரச்சினை வீட்டில் இருக்காது என்பதுதான் சந்தோஷமான விஷயம்.

கடந்த வாரம் அரசியல் களமான பிக் பாஸ் வீட்டைப் பற்றிப் பேசாமல் இருப்பாரா கமல். ஏராளமான ஒப்பிடுதலோடு ஆரம்பமே களைகட்டியது. பிறகு நேரடியாக பாவனி மற்றும் அபிநய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பற்றி கேட்டறிய அல்லது இந்த சிக்கலுக்கு ஒரு முடிவு கட்ட குறும்படம் ஒன்றை ஒளிபரப்பினர். இதுவரை நாமும் கண்டிராத ஒரு மினி படம் இது.

அமீருடன் தனியாக அமர்ந்து அபிநய் பற்றி வெளிப்படையாகப் பேசியது முதல் ராஜுவுடன் அபிநய் பற்றிப் பேச முயற்சி செய்தது வரை பாவனியின் முயற்சிகள் அனைத்தும் ரொம்ப லேட். இதனை, தான் பாதுகாப்பற்றதாக உணரும் வேளையிலேயே செய்திருக்கலாமே அல்லது அபிநய்யை தவிர்த்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் போனதுதான் பாவனி மீதான தவறு. என்னதான் அபிநயின் குடும்பத்திற்காக வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும், அதனைக் கையாண்ட விதம் வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறது,

தனக்கு இந்த வீட்டிலேயே பிடிக்காத ஆள் அபிநய்தான் என்று அமீருடன் டிஸ்கஸ் செய்ததை நமக்கு காட்டிய பிக் பாஸ், ஏன் அபினையுடன் உரையாடும் ஒரு காட்சியைக்கூட நமக்குக் காட்டவில்லை? அமீர், பாவனியுடன் பேசும் காட்சிகளை நாம் ஏராளமாகப் பார்த்திருக்கிறோம், அமீருடன் பாவனி பேசும்போது அபிநயின் ரியாக்ஷன் கூட நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருபோதும் அபினயுடன் பாவனி பேசு காட்சிகளை நமக்கு ஒளிபரப்பாதது ஏன்? சொல்லப்போனால், எதற்காக வீட்டில் இருப்பவர்கள் அபிநய் மற்றும் பாவனி பற்றிப் பேசுகிறார்கள் என்பதுகூட நமக்குத் தெரியவில்லை.

இப்படி அபிநய்யை காப்பாற்றும் நோக்கில் ஒவ்வொரு செயலும் ஆரம்பத்திலிருந்தே செய்துகொண்டிருக்கும் பிக் பாஸ், நமக்கான க்ளாரிட்டியை கொடுக்காமல் போனதும் இந்தப் பிரச்சனைக்கான ஒரு காரணம். மேலும், இதில் ராஜு கேட்ட கேள்வி, ராஜூவிற்கான நற்பெயரையும் சந்தேகத்தில் தள்ளியது. எதுவும் இல்லாமல் ஏன் ஒட்டுமொத்த வீடும் இவர்கள் இருவரைப் பற்றிப் பேசவேண்டும்?

அதற்கான விடையே நமக்குக் கிடைக்காத போது, வெறும் பாவனி அமீருடன் பேசுவதை வைத்து மடுட்ம் எப்படி ஓர் முடிவுக்கு வர முடியும்? இப்போதுவரை அபிநய் எப்படி பாவனியோடு பேசி வருகிறார் என்பது தெரியவில்லை? என்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பது ஒளிபரப்பவில்லை. ஆனால், வீட்டிற்குள் இருப்பவர்களுக்குத் தவறாகத் தெரிந்திருக்கிறது. பாவனியின் பக்கத்தை மட்டும் காண்பித்திருக்கிறார். இப்படி அபிநய்யை காப்பாற்றுவதற்கான நோக்கம் என்ன? நிச்சயம் இதற்கான பதில் கிடைக்காது என்பது தெரிந்த விஷயம்தான். சனம் எழுதிய கடிதத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று கடந்த சீசனில் நம்மைத் தலையைப் பிய்த்து வைத்ததுபோல், இந்த சீசனில் அபிநய் விஷயம்.

ஒருவழியாக நேற்று அண்ணாச்சி வீட்டைவிட்டு வெளியேறி விட, வீடே அமைதியாக மாறியது. இறுதியாக அபிநய்யிடம் அமீர் விளக்கம் கொடுக்கும் காட்சிகள். இனிமேலாவது இந்த பிரச்சனை இருக்காது என்று நினைத்தால். எதுவும் முடிந்த மாதிரி தெரியவில்லை. பார்ப்போம் இன்னும் இது எங்குச் சென்று முடியப்போகிறது என்பதை!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil review pavani reddy abinai priyanka kamal hassan