scorecardresearch

மக்கள் தீர்ப்பா? பிக் பாஸ் முடிவா? என்னதான் நடக்கும்?

Bigg Boss 5 Tamil Review Priyanka Raju Niroop Ameer Pavani Tamil news எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு இருவரும் கலாய்த்துக்கொண்டு, ஜாலியாகப் பேசிக்கொண்டு வீட்டில் பாசிட்டிவிட்டியை பரப்புகின்றனர்.

Bigg Boss 5 Tamil Review Priyanka Raju Niroop Ameer Pavani Tamil news
Bigg Boss 5 Tamil Review Priyanka Raju Niroop Ameer Pavani Tamil news

Bigg Boss 5 Tamil Review Priyanka Raju Niroop Ameer Pavani Tamil news : எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் பிக் பாஸ் இருக்கிறது. ஆம், போட்டியாளர்களின் தேர்வு முதல் சுவாரஸ்யமே இல்லாத டாஸ்க்குகள் வரை அனைத்திலும் வித்தியாசத்தைக் காட்டவேண்டும் என நினைத்த பிக் பாஸ், எந்த அளவிற்கு வெற்றிபெற்றார் என்பது கேள்விக்குறியே. திருநங்கை, டிக் டாக் பிரபலம், யூடியூபர், கிராமத்து நாடகக் கலைஞர் என பல்வேறு துறைகளிலிருந்து போட்டியாளர்களைத் தேர்வு செய்து இருந்தாலும்,ஃ பைனலிஸ்ட்டாக இருப்பவர்கள் அனைவரும் விஜய் டிவி சொத்துக்கள்தான்.

இதனாலேயே என்னவோ இந்த கடைசி வாரம் மிகவும் மகிழ்ச்சியாகவும்  குறைவில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒருநாள் பிக் பாஸ் வாய்ப்பு என போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிது நேரம் பிக் பாஸாக இருக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் பிரியங்கா, ராஜு மற்றும் அமீர் பிக் பாஸாக செயல்பட்டு என்டெர்டெயின் செய்தது மட்டுமில்லாமல், வயிறு வலிக்க சிரிக்கவும் வைத்தனர்.

பிறகு தங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுக்குப் பரிசு கொடுக்கும் நிகழ்வு அரங்கேறியது. அதில் பிரியங்கா ராஜுவிற்கு பரிசளித்தது நெகிழ வைத்தது. என்னதான் இருவரும் ஏற்கெனவே தெரிந்தவர்களாக இருந்தாலும், இவர்கள் இருவருக்குமான உறவு பற்றிக் கடந்த சில காலமாகத்தான் நமக்குத் தெரிய வந்தது. அவ்வளவு கியூட். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு இருவரும் கலாய்த்துக்கொண்டு, ஜாலியாகப் பேசிக்கொண்டு வீட்டில் பாசிட்டிவிட்டியை பரப்புகின்றனர்.

இந்த சீசன் வெற்றியாளராக இவர்கள் இருவரில் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் மைண்ட் வாய்சாக இருக்கிறது. ஆனால், அதே நேரம் நிரூப் மற்றும் அமீரை பிக் பாஸ் காப்பாற்றுகிறாரோ என்கிற சந்தேகமும் ஒருபுறம் உள்ளது. அமீர் மற்றும் நிரூப்பை எப்படியாவது ஃபைனல்ஸ் வரை கொண்டு செல்லவேண்டும் என டாஸ்க்குகளை வைத்தது நமக்கு அப்பட்டமாகவே தெரிந்தது.

மேலும், இம்முறை வெற்றியாளராகத் தாமரைதான் இருப்பார் என்று பொதுமக்கள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரும் ஆசைப்படும் நேரத்தில், திடீரென அவரை வெளியேற்றியது ஏன் என்ற கேள்விக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாற்றுவதற்கு தானோ என்கிற சந்தேக பதில்தான் எழுகிறது. இந்நிலையில், மக்களின் ஃபேவரைட்டான ராஜு, பிரியங்கா வெற்றியாளராக வருவார்களா அல்லது அமீர், நிரூப் இருவரில் ஒருவர் வெற்றிபெறுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil review priyanka raju niroop ameer pavani tamil news