Advertisment

சரத் வருகை, சிபியின் காதல் வலை... களைக்கட்டும் பிக் பாஸ் வீடு!

Bigg Boss 5 Tamil Sarathkumar entry Niroop Priyanka Ameer Ciby Tamil News ஒரு பஞ்சு தலையணை பட்டு, அந்தக் கண்ணாடி விளக்கு சுக்குநூறாக உடைகிறது என்றால், அதுவும் வேறு செட் - அப் தானோ!

author-image
priya ghana
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss 5 Tamil Sarathkumar entry Niroop Priyanka Ameer Ciby Tamil News

Bigg Boss 5 Tamil Sarathkumar entry Niroop Priyanka Ameer Ciby Tamil News

Bigg Boss 5 Tamil Sarathkumar entry Niroop Priyanka Ameer Ciby Tamil News : நேற்றைய எபிசோட் முழுக்க கருது சொல்லும் நாளாக அமைந்தது. ஆம், ஒவ்வொரு போட்டியாளர்களின் செயலும், இந்த உலகத்திற்கு ஏதோ சொல்ல வருவதைப் போன்று இருந்தது. அப்படி என்னவெல்லாம் நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

Advertisment

வீட்டில் இருக்கும் ஆண்கள் எந்த வேலையும் உருப்படியாகச் செய்ய மாட்டுகிறார்கள் என்று தாமரை ஒரு பக்கம் புலம்பிக்கொண்டிருக்க, இப்போ இப்படிப் புலம்புவதற்கு முதல் நாளே சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று பதில் அளித்தது வேற லெவல். ஒரு வகையில் அது சரியும்கூட. அப்பொழுதெல்லாம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தவர் தாமரை. இத்தனை வேலைகளை செய்கிறாரே என்று தாமரைக்காக ஒருமுறை குரல் எழுப்பிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அப்படி இருக்கும்போது, இறுதிக்கட்டத்தில் இப்படி கம்ப்லேயன்ட் செய்யலாமா தாமரை?

அடுத்ததாக திடீரென பாவனிக்கு சிபி காதலை வெளிப்படுத்துவது போன்ற காட்சி. ஒரு நொடி 'என்னடா நடக்குது இங்கே' என்ற மைண்ட் வாய்ஸ் வராமல் இல்லை. அந்த அளவிற்கு ரியாலிஸ்டிக்காக நடித்துக்கொண்டிருந்தனர். இதெல்லாம்தான் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. அதிலும், ராஜுவின் என்ட்ரி பக்கா மாஸ். சிபியின் கவுன்ட்டர்களும் செம்ம டைமிங் காமெடியாக இருந்தது.

ஆனால், இந்த சுவாரசியத்தை திருஷ்டி கழிக்கும் விதமாக, மேலே அப்பாவியாக கட்டிவிடப்பட்ட கண்ணாடி அலங்கார விளக்கை தெரியாத்தனமாக உடைத்தார். ஒரு பஞ்சு தலையணை பட்டு, அந்தக் கண்ணாடி விளக்கு சுக்குநூறாக உடைகிறது என்றால், அதுவும் வேறு செட் - அப் தானோ!

இப்படி ஜாலியாக விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில், யாரோ இந்த வீட்டிற்கு பெட்டியுடன் வர போகிறார் என்று பிரியங்காவை மட்டும் தனியே கூப்பிட்டு பிக் பாஸ் சொல்லியிருப்பார் போல. அப்படியே கணித்துக் கூறினார். அதனால், அனைவரும் பயங்கரமாகத் தயாராகிக்கொண்டிருக்க, சரத்குமாரின் என்ட்ரி. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் தன்னுடைய பார்வையை முன்வைத்து, வெளியே அவர்களின் பெயர் எப்படி இருக்கிறது என்பதற்கான சில பல ஹின்ட்டுகளையும் கூறினார்.

பிறகு அவர்களுக்கு சில பிஸிக்கல் டாஸ்க்குகளை கொடுத்து சோதித்தார். இதன்பிறகுதான், அந்த அழகான பெட்டியை அனைவர்க்கும் இன்ட்ரோ செய்தார். 3 லட்ச ரூபாய் மதிப்பைவிட, அந்த பேட்டியின் அழகில்தான் அனைவரும் மயங்கினர். இதனை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போவதும், அடுத்தடுத்த கட்டத்திற்குப் போட்டியில் நகர்வதும் அவரவர்களின் இஷ்டம். ஆனால், யோசித்து முடிவெடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் சரத்குமார்.

பிறகு என்ன? அந்த பெட்டியைப் பற்றிய டிஸ்கஷனில் தீவிரமாக ஒவ்வொருவரும் பேசிக்கொண்டனர். தான் இருக்கும் வரை நிரூப்பும் இருக்கவேண்டும் என்று தாமரை கேட்டுக்கொண்டிருக்க, 'என்னை விட்டுவிட்டு நீ அந்தப் பெட்டியை எடுத்துவிட்டு போய்டுவியா?' என்று அமீர் பாவனியை வம்பிழுத்துக்கொண்டிருந்தார். ஆனால், மக்கள் தன்னை இவ்வளவு ஓட்டுக்கள் போட்டுக் காப்பாற்றும்போது, எப்படி வெளியே செல்ல முடியும் என்று பதிலளித்தார் பாவனி. பார்ப்போம்! இந்த 3 லட்சம் என்பது வரும் நாட்களில் அதிகமாகும். அப்போதும் இவர்களின் மனம் மாறாமல் இருக்குமா?

இதையடுத்து, ஒவ்வொருவராக கன்ஃபெஷன் அறைக்குச் செல்ல, அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் பிக் பாஸ் கேள்விகளை எழுப்பினார். வெளியே சென்றதும் அவர்கள் செய்யும் முதல் வேலையைப் பற்றிக் கேட்டபோது, தூரத்தில் இருப்பவர்களை கவனித்துக் கொண்ட அளவிற்கு நம் பக்கத்திலேயே இருப்பவர்களை கவனித்துக்கொள்ளவில்லை என்று நிரூப் மற்றும் பிரியங்காவிற்கு உருத்திருக்கும் போல. தன்னுடைய சகோதரனை சந்தித்துக் கட்டியணைத்து, நிறையப் பேசவேண்டும் என்று நிரூப்பும் தன் தாயை இனிமேல் இன்னும் நன்றாக கவனித்துக்கொள்வதாக பிரியங்காவும் கூறி எமோஷனலாகி உடைந்தனர்.

இன்னொரு பிரபு தேவாவாக இல்லாமல், அமீர் போல இருக்கவேண்டும் என்கிற அடையாளத்தைப் பாதிக்கவேண்டும் என்று பாராட்டிய தருணத்தில் மிகவும் உடைந்து அழுதார் அமீர். சிறிசு பெருசு என்று நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருக்கையில் தனக்கு இந்த வீட்டிலிருந்த ஒவ்வொரு நொடியும் மிகவும் பிடித்த நொடிகள் என்று சில பல கதைகளைக் கட்டிவிட்டார். இறுதியாக ராஜு, இந்த வீட்டிற்கு வந்தபிறகு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று சொன்ன விதம் அருமை. எது எப்படியோ, எல்லோருடைய பாசிட்டிவிட்டியை மெருகேற்றும் விதமாகவே நேற்றைய எபிசோட் மிகவும் சாந்தமாக நகர்ந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vj Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment