Advertisment

இந்த கதைதான் நல்லாவே தெரியுமே... பிக் பாஸ் நாமினேஷன் சோதனைகள்!

Bigg Boss 5 Tamil Thamarai Pavani Niroop Priyanka Raju Ciby Ameer யாரைப் பற்றியும் அவர்களுக்குப் பின்னால் சிபி பேசியதே கிடையாது. எதுவாக இருந்தாலும், அவர்களிடம் நேரடியாகப் பேசிவிடுகிறார்.

author-image
priya ghana
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss 5 Tamil Thamarai Pavani Niroop Priyanka Raju Ciby Ameer

Bigg Boss 5 Tamil Thamarai Pavani Niroop Priyanka Raju Ciby Ameer

Bigg Boss 5 Tamil Thamarai Pavani Niroop Priyanka Raju Ciby Ameer : ஓபன் நாமினேஷன் என்கிற பெயரில் வித்தியாசமாக ஏதோ முயற்சி செய்தார் பிக் பாஸ். யாரை நாமினேட் செய்ய விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களை நாமினேட் செய்வதற்கான காரணத்தையும் கூறவேண்டும். இதுபோதாதா பஞ்சாயத்தைக் கூடுவதற்கு? சந்தேகமே இல்லாமல் சிலர் இவர்களைத்தான் நாமினேட் செய்வார்கள் என்று நமக்குத் தெரிந்திருந்தாலும், கன்டென்ட் வேண்டுமே என்பதற்காகவே சில வம்புகளை சேகரித்தது போன்று இருந்தது நேற்றைய எபிசோட்.

Advertisment

நாம் எதிர்பார்த்தது போல ராஜு பாவனியையும், பாவனி ராஜூவையும், நிரூப் சிபியையும், சிபி நிரூப்பையும், அமீர் தாமரையும் நாமினேட் செய்தனர். மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து விளையாடுவது தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி ராஜூவை நாமினேட் செய்த அமீர், அப்படியே தாமரை பக்கம் சென்று அவருக்கும் மாலை அணிவித்தார். அதற்கான காரணமாக, முட்டை உடைக்கும் டாஸ்க்கில் தாமரை ராஜூவை டார்கெட் செய்யவில்லை என்று கம்ப்ளெயின்ட் செய்தார். தன்னை டார்கெட் செய்பவர்களைத்தான் தாமரை எப்போதும் வம்பிற்கு இழுப்பாரே தவிர, அவராக யாருடைய பொறுமையையும் சோதிக்க மாட்டார். தன் வழியில் நிற்பவர்கள் மட்டும்தான் தாமரையின் டார்கெட். இதை சரியாக அமீர் புரிந்துகொள்ளவில்லை. என்றாலும், நேற்றைக்கு இதுதான் மைய கன்டென்ட்.

 அடுத்ததாக நிரூப் சிபி மற்றும் தாமரையை நாமினேட் செய்தார். கடந்த வாரம் சிபி கடைசியாகத்தான் காப்பாற்றப்பட்டார். அதனாலேயே இம்முறை இவரை நாமினேட் செய்தால் நிச்சயம் வெளியேறிவிடுவார் என்று நினைத்து நிரூப் சிபியை நாமினேட் செய்தாரோ என்னவோ, ஆனால் இதுதானே காரணம் என்று சிபி மிகவும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டார். ஆரம்பத்திலிருந்து, சிபியின் விளையாட்டு நேரடி பன்ச்தான். யாரைப் பற்றியும் அவர்களுக்குப் பின்னால் சிபி பேசியதே கிடையாது. எதுவாக இருந்தாலும், அவர்களிடம் நேரடியாகப் பேசிவிடுகிறார். நல்ல பண்பு!

ஆனால், மக்கள் எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள் என்றுகூறி ராஜூவை நாமினேட் செய்யாத நிரூப், அதே காரணத்துக்காகத் தாமரையை நாமினேட் செய்த லாஜிக்தான் புரியவில்லை. என்ன நிரூப்? நீங்களே கன்ஃபியூஸ் ஆகிட்டிங்களா? என்றாலும், தாமரையை ஏன் தான் இப்படிச் சுற்றிச் சுற்றி அடிக்கிறார்களோ! வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் அவர்மீது சுமத்தி, பிறகு அவரையே ரவுண்டு கட்டி அடிக்கின்றனர்.

இதையடுத்து பாவனி மற்றும் ராஜுவிற்கு இடையேயான வாக்குவாதங்கள். ஆரம்பத்தில் இருந்தே பாவனி மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லாத ராஜு, அவரைத்தான் நாமினேட் செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ராஜுவோடு தன்னால் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்கிற தவிப்பினால் ராஜூவை பாவனை நாமினேட் செய்தார். இந்த மொக்கையான காரணங்கள் ராஜூவை கடுப்பேற்ற சண்டை ஆரம்பமானது.

அதேபோல நிரூப் மற்றும் பிரியங்காவிற்கும் அதே சண்டைதான். நண்பனாக நினைத்தவர் இந்த அளவிற்கு வஞ்சகத்தை மனதில் வைத்திருக்கிறாரா என்று பிரியங்காவினால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்றாலும், இவர்களின் சண்டையெல்லாம் இன்னும் ஒரு வாரம்தான். பிறகு கண்ணே மணியே என்றுதான் கொஞ்சிக்கொள்ளப்போகிறார்கள்.

இப்படி ஏற்கெனவே நமக்கு தெரிந்த விஷயங்களை அரைத்து அரைத்து சலித்துக்கொண்டிருந்தனர் நேற்றைய எபிசோடில். எப்போதுதான் புதிய சண்டைகளைப் பார்க்கப்போகிறோமோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vj Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment