/tamil-ie/media/media_files/uploads/2021/12/Prt-1.jpg)
Bigg Boss 5 Tamil Ticket to Finale Priyanka Raju Tamil News
Bigg Boss 5 Tamil Ticket to Finale Priyanka Raju Tamil News : நாளுக்கு நாள் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தால், இம்முறை போன்ற மோசமான டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் எதுவுமே இல்லை என்று புலம்புகிற அளவிற்கு இருக்கிறது இந்த வாரத்தின் டாஸ்க். முட்டையை காப்பாற்றவேண்டும், முட்டையை உடைக்கவேண்டும் என்று முட்டையை சுற்றியே அத்தனை டாஸ்க். சுவாரசியமாக இருந்தால்கூட பரவாயில்லை, டாஸ்க்கும் மிகவும் மோசமானதாக இருப்பதனால் பார்க்கவும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
சரி, நம்ம மைண்ட் வாய்ஸ் ஒருபக்கம் இருக்கட்டும்.. நேற்றைய எபிசோடில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை என்றாலும், ராஜு மற்றும் பிரியங்காவை வெளியேற்றவேண்டும் என்பதற்காக டிசைன் செய்ததைப் போலவே இருந்தது. பிக் பாஸின் டார்கெட் பல வேளைகளில் சரியாகவே இருக்கிறது. ஆனாலும், நிரூப்பை வெளியேற்றி இருக்க வேண்டாம். இதுபோன்ற டாஸ்க் தன்னால் விளையாட முடியவில்லை என்று இறுதி வரை மிகவும் ஆதங்கப்பட்டார். என்றாலும், மக்களின் ஆதரவை இப்போது நிரூப் அதிகமாகப் பெற்று வருகிறார்.
முட்டை உடைக்கும் டாஸ்க்கில் ஒருவருக்கொருவர் ஏற்பட்ட மனக்கசப்பை, அவர்களுக்குள்ளேயே பேசி சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டனர். சஞ்சீவ் தாமரையிடம் நின்று நிதானமாகப் பேசி தங்களுடைய கருத்து வேறுபாடுகளைப் பேசி தீர்த்துக்கொண்டனர். பாவனிக்கும் அமீருக்கும் இடையே உண்டாவதை உணர முடிந்தாலும், அமீருக்கு பாவனி மீதுள்ள அன்பு குறையவே இல்லை என்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. வீட்டில் உள்ளவர்கள், இருவரின் விளையாட்டும் பாதிக்கப்படுகிறது என்று கூறிவிட்டுச் சென்றதால் மட்டுமே, அமீர் பாவனியை ஒதுக்குவதைப்போல நடிக்கிறாரே தவிர, பாவனி மீதான விருப்பம் அமீரை விட்டுப் போகவில்லை. கொஞ்சம் பொறுத்துக்கோங்க அமீர்!
எப்படியாவது பிரியங்கா பற்றிய நெகட்டிவ் விஷயங்களைத் தாமரையின் மனதிற்குள் விதைக்க ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டார் நிரூப். அவை ஒருவகையில் நிரூப்பின் ஆதங்கம் என்றாலும் பிரியங்காவைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங்களை விதைப்பது போன்றே தோன்றியது. ஏற்கெனவே அக்ஷரா, வருண் வெளியேறியதில் இருந்து மனவருத்தத்தில் இருக்கும் தாமரை, நிரூப்பும் வெளியேறிவிட்டால் தான் அனாதை போல் ஆகிவிடுவோம் என்கிற பயம் தாமரையின் மனதில் ஒட்டிக்கொண்டது. இதனை வெளிப்படையாகவும் நிரூப்புடன் பகிர்ந்துகொண்டார் தாமரை.
சைடு கேப்பில், எதிர்பார்த்தால்தான் கஷ்டமாக இருக்கும் அதனால் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று தாமரையிடம் கூறிவிட்டுச் சென்றார் சிபி. எல்லோரும் ஒருவகையில் நன்றாகவே கேம் விளையாடுகிறார்கள். இப்படி வெளியே வாக்குவாதங்களும் சமாதானங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்க, பிரியங்கா வழக்கம் போல கிச்சனில் அமர்ந்து சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டே 'இது பிக் பாஸ் வீடா அல்லது சீரியலா' என்றபடி தனியே புலம்பிக்கொண்டிருந்தார்.
இதையடுத்துதான் அந்த அற்புதமான டாஸ்க். பிக் பாஸ் கேள்விகளைக் கேட்க, அதற்கு தகுதியான ஆளின் உருவப்படத்திற்கு முட்டை அபிஷேகம் செய்யவேண்டும் என்று டாஸ்க். அதில் அதிகப்படியாகப் பிரியங்கா மற்றும் ராஜு அடிகளை வாங்க, இருவரும் இந்தப் போட்டியை விட்டு வெளியேறினார்கள். இவர்களின் இந்த ஆட்டத்தில், முதல் நாளே வெளியேறிய நிரூப் தனியே நடனமாடிக்கொண்டிருந்தார். பிரியங்கா தானாகவே விட்டுக்கொடுத்து இந்த போட்டியை விட்டு வெளியேறியது நிரூப்பினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிரியங்கா வெளியேறிவிட்டதால் அல்ல, அந்த வாய்ப்பு தனக்கு வராமல் போய்விட்டதே என்கிற ஆதங்கத்தினால்.
என்னதான் இருந்தாலும், இறுதி சுற்று வரைக்கும் வந்து இப்படி விட்டுக்கொடுப்பதெல்லாம் நல்லாவே இல்லை பிரியங்கா மற்றும் ராஜு! ஒருவழியாக சஞ்சீவ், சிபி மற்றும் அமீர் அடுத்தகட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். எந்த அளவிற்கு மொக்கையான டாஸ்க் வைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.