/tamil-ie/media/media_files/uploads/2022/10/asim.jpg)
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வார இறுதியில் அசீம் தவறை கமல் தட்டி கேட்டவிதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 தற்போது வைரலாகி வரும் ரியாலிட்டி நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ஷோ, பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்த முறை ஆதாம் யார் என்று ஜிபி முத்து பேசியது வைரலானது. மேலும் முற்போக்கான பல கருத்துக்களை இந்த வாக்கியம் மூலம் பலரும் முன்வைத்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அசீம் நடந்துகொள்வது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
குறிப்பாக திருநங்கையாக இருக்கும் சிவின் என்ற போட்டியாளரை, கீழ்த்தனமாக உடல் மொழி செய்து கேலி செய்தார். இதுபோல் அனைவரும் பார்க்கும் ஒரு ஷோவில் திருநங்கையை இப்படி கேலி செய்கிறார் என்று அவரை நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
Those who don't know the meaning of roast.. 👇👌
— 𓊈 𒆜 ®️ 𒆜 𓊉 (@itz_MaddyRaji) October 30, 2022
Only aandavar can do with high level of maturity words..!!
He reprimanded #Azeem but at the same time, he never forgets to deliever strong message to the society.. 👍🙏💪👌❤️#BiggBossTamil#BiggBossTamil6#KamalHaasanpic.twitter.com/84BmZTTZLJ
இந்நிலையில் நடிகர் கமல் அசீமை எப்படி கண்டிக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஷோவின்போது, கமல் மிகவும் முதிர்ச்சியாக நடந்துகொண்டார். ”உங்கள் மகனுக்கு ஒரு தவறான உதாரணமாக மாறிவிடாதீர்கள். உங்களை பார்த்து சமூகம் கற்றுக்கொள்ளும். உங்கள் மீது எனக்கு தனிக் கோவம் இல்லை. இது சமூகத்தின் மீது உள்ள கண்டனம் என்று அவர் கூறினார்.” இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆண்டவர் விமர்சிப்பதில் வல்லவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.