scorecardresearch

விஜய் டிவி சீரியலில் முன்னணி தொகுப்பாளினி… என்ன ரோல் தெரியுமா?

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்களின் மகா சங்கமம் எபிசோடில் பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா இணைந்துள்ளார். இந்த சீரியலிலும் அவர் தொகுப்பாளினியாகவே நடித்துள்ளார்.

anchor archana joins in bharathi kannamma raja rani, அர்ச்சனா, பாரதி கண்ணம்மா சீரியலில் அர்ச்சனா, ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா, vijay tv, bharathi kannamma, raja rani, விஜய் டிவி, பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா, bigg boss celebrity archana acting in bharathi kannamma serial, vijay tv, raja rani serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்களின் மகா சங்கமம் எபிசோடில் முன்னணி தொகுப்பாளினியும் பிக் பாஸ் பிரபலமுமான அர்ச்சனா இணைந்துள்ளார். சீரியலிலும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நடித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்த அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய இயல்பு காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதே நேரத்தில், நண்பர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று பாராட்டுதல்களும் வந்தன.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலேயே தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜய் டிவியிலேயே தொகுப்பாளினியாக தொடர்ந்தார்.

இந்த நிலையில், விஜய் டிவியில் முன்னணி சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலும் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்றாக இணைந்து நடிக்கும் மகா சங்கமம் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. இதில், சிறந்த மருமகள் மாமியாருக்கான போட்டியில் கண்ணம்மாவுக்கும் அவருடைய மாமியார் சௌந்தர்யாவுக்கும் மன ஒற்றுமை குறித்த போட்டியை அர்ச்சனா கேள்வி கேட்டு தொகுத்து வழங்குகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணாம்மாவும் மாமியார் சௌந்தர்யாவும் ஒரே மாதிரி பதிலளிக்கும்போது அர்ச்சனா அவருடைய வழக்கமான சிரிப்புடனும் உற்சாகத்துடனும் தொகுத்து வழங்கி அவர்களைப் பாராட்டுகிறார்.

இதன் மூலம் முன்னணி தொகுப்பாளினியும் பிக் பாஸ் பிரபலமுமான அர்ச்சனா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, ராஜா ராண் 2 சீரியல்களின் மகா சங்கமத்தில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியல் இயக்குனர் பிரவீன் பெனட் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss celebrity anchor archana acting in bharathi kannamma raja rani serial

Best of Express