விஜய்க்காக விளம்பரங்களைத் தவிர்க்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி?

‘விஜய் 62’ படத்தில் நடித்துவரும் ஜூலி, விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைத் தவிர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

விஜய் 62’ படத்தில் நடித்துவரும் ஜூலி, படக்குழுவினர் கேட்டுக் கொண்டதற்காக விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைத் தவிர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

‘விஜய் 62’ படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாள ஒளிப்பதிவாளர் க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத், எடிட் செய்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.

‘விஜய் 62’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளை அங்கு படமாக்க இருக்கிறார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சிகளை ராம் – லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வடிவமைத்துப் படமாக்கி வருகின்றனர்.

‘விஜய் 62’ படத்தில், ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் ஜூலி, விமலின் ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

‘உத்தமி’ படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ள ஜூலி, சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அப்பள விளம்பரத்தைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் ஆயில் விளம்பரத்தில் நடித்துள்ள ஜூலி, சமீபமாக தனக்கு வரும் விளம்பர வாய்ப்புகளைத் தவிர்க்கிறார் என்று கூறப்படுகிறது. காரணம், நிறைய விளம்பரங்களில் நடித்தால் ‘விஜய் 62’ படத்தில் கேரக்டரின் தன்மை அடிபட்டுப்போகும் என்பதால், படக்குழுவினர் கேட்டுக் கொண்டதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார் ஜூலி என்கிறார்கள்.

×Close
×Close