/tamil-ie/media/media_files/uploads/2017/11/julie.jpg)
கலா மாஸ்டருடன் டான்ஸ் ஆடி ஜூலி அசிங்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பயங்கரமாக பாப்புலரானார். அதுவும் ஓவியாவுக்கு எதிராக இவர் பேசியதால், ‘ஓவியா ஆர்மி’யினர் இவரை வச்சி செய்கின்றனர். ‘பிக் பாஸ்’ முடிந்து 50 நாட்களுக்கு மேல் ஆன பிறகும் இது தொடர்கிறது.
‘விஜேவாக வேண்டும்’ என ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூறியபடியே கலைஞர் தொலைக்காட்சியில் விஜேவாகி விட்டார் ஜூலி. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் நடிகர் கோகுல் இருவரும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், எபிசோடின் முடிவில் அவ்வப்போது கலா மாஸ்டரை டான்ஸ் ஆடச் சொல்லி கேட்பார்கள். அப்படி கடந்த வாரம் ‘சினேகிதியே’ படத்தில் இடம்பெற்ற ‘ராதை மனதில்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடினார் கலா மாஸ்டர். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளினியான ஜூலியும் அவருடன் சேர்ந்து சிறிது நேரம் ஆடினார். கலா மாஸ்டர் தொடர்ந்து ஆட, சில ஸ்டெப்ஸுடன் நின்று கொண்டார் ஜூலி.
இந்த வீடியோவை ஷேர் செய்து, ஜூலி டான்ஸ் ஆடி அசிங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலர் கூறி வருகின்றனர். அதனால், இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், அப்படி அசிங்கப்படும்படி எதுவும் இல்லை என்பதுதான் விஷயம். ஏதாவது சொல்லி ஜூலியைத் திட்ட வேண்டும் என்பது வீடியோவை ஷேர் செய்பவர்களின் நோக்கமாக இருக்கிறது. அதற்காக உப்புசப்பில்லாத காரணங்களைக் கூட கூறிவருகின்றனர். இத்தனைக்கும் ஓரளவு நன்றாகவே அந்த வீடியோவில் ஆடியுள்ளார் ஜூலி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.