ஹீரோயின் ஆனார் ‘பிக் பாஸ்’ ஜூலி : ஜோடி யார் தெரியுமா?

விமல் தயாரித்து, நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் ஜூலி. இந்நிலையில், ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஜல்லிக்கட்டு மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்துக்கும் வந்தவர் ஜூலி. அடிப்படையில் செவிலியரான இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக அவர் பேசியவை, ஜூலியின் நன்மதிப்பைக் குறைத்துவிட்டது என்கிறார்கள்.

செவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியின் ஆசை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி.

அத்துடன், விமல் தயாரித்து, நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் ஜூலி. இந்நிலையில், ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, கே7 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ ஆகிய படங்களில் நடித்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஜூலிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற விவரத்தை ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close