ரஜினிக்கு தனது மகள் ஜூஸ் கொடுத்ததை தற்போது நினைவுகூர்ந்துள்ள நடிகை ரேகா, தனது மகள் ஆசீர்வதிக்கப்பட்டவள் எனவும் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
90’ களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள் ஜெனிபர் டீச்சரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. பின்னர் நிறைய தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கதாநாயகியாக ரேகா நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டிற்கு பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.
பின்னர் விஜய் டிவி புதிதாக அறிமுகப்படுத்திய புதுமையான நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் ரேகா கலந்துக் கொண்டு, பைனல் வரை சென்றார். அதன்பின் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல் மற்றும் ரேகா இருவரும் புன்னகை மன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு சின்னக் குழந்தை நடிகர் ரஜினிக்கு ஜூஸ் கொடுப்பதாக உள்ளது. அந்த குழந்தை நடிகை ரேகாவின் நடிகை ரேகாவின் மகள் அபி ஆவார்.
காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, உண்ணாவிரத்தை முடிக்க ஜூஸ் கொடுக்கும் போது ரஜினிக்கு ரேகாவின் மகள் ஜூஸ் கொடுத்துள்ளார். அதை வாங்கி பருகிய ரஜினி, ஜூஸை மீண்டும் குழந்தையிடம் கொடுத்திருப்பார்.
இந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள ரேகா, புகைப்படமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த சிறப்பான தருணத்தை என்னுடன் பகிர்ந்துக் கொண்டதற்கு ரஜினிபீல்டு 2K கிட்ஸ்க்கு நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில், 2002 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த காவிரி பிரச்சனைக்காக 9 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர எனது மகள் கையில் ஜூஸ் பருகிய, அந்த நினைவுகள் ஞாபகம் வருகிறது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், ஒரு நல்ல காரணத்தின் ஒரு பகுதியாகவும் அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள், எனவும் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil