/indian-express-tamil/media/media_files/2025/10/07/diwa-1-2025-10-07-13-24-04.jpg)
தமிழில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மிகபிரமாண்டமாக நடைபெற்றது. இதில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் உட்பட 20 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்தே தங்களது வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். குறிப்பிட்ட போட்டியாளர்கள் திவாகரை குறிவைத்து பிரச்சனைகளை செய்வதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாட்களிலேயே அந்த வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
திவாகருக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான ப்ரொமோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்தப்படியாக பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரும் பிரளயம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த வாரம் நாமினேசன் புராசெஸ் நடைபெற்றது. இதில், பெரும்பாலான போட்டியாளர்கள் திவாகர் மற்றும் கலையரசனை நாமினேசன் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் திவாகர் வெளியேறிவிடுவாரா என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் வலுத்து வருகிறது.
இந்நிலையில், போட்டியாளர் திவாகர் தனது மன கஷ்டம் குறித்து பிக்பாஸிடம் பேசும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், ”தப்பு செய்தவர்கள் எல்லோரையும் விட்டு விடுகிறார்கள். என் ஒருவரை மட்டும் தான் எல்லோரும் டார்கெட் செய்கிறார்கள் அதை நான் சந்தோஷமாக எடுத்துக் கொள்கிறேன். பிக்பாஸ் மற்று மக்கள் தீர்ப்பே இறுதியானது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. மன்னிப்பு கேட்பது கூட என்னை தான் கேட்க சொல்கிறார்கள்.
முதல் நாளில் இருந்தே ஒரு சிலர் என்னை டார்கெட் பண்ணி சண்டை போடுகிறார்கள். நான் எல்லாத்தையும் கடந்து செல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், அவர்களின் முகம் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக என்னிடம் வந்து சண்டைபோடுகிறார்கள். ஒரு பேச்சு சுதந்திரம் இல்லை. அதுதான் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் ட்ரோல் செய்கிறார்கள். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
Diwagar - Everyone is targeting me intentionally. They want external attention. I am very sad.#BiggBossTamil9#BiggBossTamilpic.twitter.com/Png5gYGXi2
— BB Tamil Videos (@BB_Tamil_Videos) October 7, 2025
என்னுடைய கஷ்டத்தை நான் ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது கூட அங்கு வந்து நின்று கொண்டு நிற்கிறார்கள். நான் கத்தி பேசுவதை தப்பு என்று கூறுபவர்கள் என்னை தள்ளிவிட்டதையும், வெட்டிருவேன் என்று சொல்வதையும் நியாப்படுத்துகிறார்கள். பிரவீன், கம்ருதீன், கெமி எல்லாம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். கண்டண்டிற்காக இப்படி செய்ய வேண்டுமா? கண்டண்டிற்காக நான் இப்படி எல்லாம் செய்ய மாட்டேன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.