/indian-express-tamil/media/media_files/2025/10/19/big-2025-10-19-09-20-51.jpg)
விஜய் டிவி-யில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி 9-வது சீசனை எட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழிகளில் உள்ள திரைப்பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 7-வது சீசன் வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழக்கினார். அதன்பின்னர், கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 8-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆரம்பித்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிறியதாக கூறப்படுகிறது. ஏனெனில் நடிகர் விஜய் சேதுபதி எதார்த்தமாக பேசுவதால் டி.ஆர்.பி அதிகரித்ததாக கூறப்படுகிறது.
தற்போது அக்டோபர் 5-ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதில், போட்டியாளராக கலையரசன், வாட்டலர் மெலன் ஸ்டார் திவாகர், கம்ருதீன், வி.ஜே. பார்வதி, கனி, அரோரா, வினயா, வினோத், விக்ரம், சபரி, துஷார், ரம்யா ஜோ, நந்தினி உட்பட 20 பேர் கலந்து கொண்டனர். இதில் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். அதேபோன்று இயக்குநர் பிரவீன் காந்தி முதல் வார நாமினேஷனில் வெளியேறிவிட்டார்.
தற்போது 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை வெடிக்கிறது. எதற்கெடுத்தாலும் பிரச்சனை என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் இவர்கள் கண்டண்டிற்காகவே சண்டை போடுவதாக தோன்றுகிறது என்று இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இப்படி பிக்பாஸ் வீட்டில் நடக்கும் தேவையற்ற பிரச்சனைகளால் வெறுப்பான ரசிகர்களை தற்போது திவாகர் - வினோத் காம்போ உற்சாகப்படுத்தி வருகிறது. அதாவது, இவர்களும் சண்டைதான் போடுவார்கள் அந்த சண்டை ரசிகர்களால் ரசிக்கும்படியாக உள்ளது. இதனால், திவாகருக்கும் வினோத்திற்கும் ஃபாலோவர்ஸுகள் அதிகரித்து உள்ளனர்.
The Bigg Boss launch on October 5 recorded a TRP of 5.61, marking the second-lowest opening in the show’s history, just above Season 6, which opened with 5.54.
— Priya Gurunathan (@JournoPG) October 17, 2025
The subsequent days saw a steady decline:
October 6 – 4.63,
October 7 – 4.26,
October 8 – 4.13,
October 9 – 3.78,… pic.twitter.com/p9wCimY6TC
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய அக்டோபர் 5-ஆம் தேதி டி.ஆர்.பி 5.61-ல் இருந்து. அதன்பின்னர், இதன் டி.ஆர்.பி தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 6-ஆம் தேதி - 4.63
அக்டோபர் 7-ஆம் தேதி - 4.26
அக்டோபர் 8-ஆம் தேதி - 4.13
அக்டோபர் 9-ஆம் தேதி - 3.78
அக்டோபர் 10-ஆம் தேதி - 3.88 என டி.ஆர்.பி. தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த டி.ஆர்.பி லெவலை அதிகரிக்க பிக்பாஸ் குழு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.