/indian-express-tamil/media/media_files/2025/10/11/bigg-2025-10-11-09-06-09.jpg)
விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த 9-வது சீசன் கடந்த 5-ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்கியது. வாட்டர் மெலன் ஸ்டார், வி.ஜே. பார்வதி, கம்ருதீன், கெமி, கலையரசன், அப்சரா சி.ஜே, ஆதிரை, நந்தினி, அரோரா உட்பட 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையும், சண்டையாகவும் தான் இருக்கிறது.
வாட்டலர் மெலன் ஸ்டார் திவாகரும், கலையரசனும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அவர்களை தான் டார்க்கெட் செய்வதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் இன்று (அக்.11) விஜய் சேதுபதி எண்ட்ரிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். பொதுவாக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விஜய் சேதுபதி, பிக்பாஸ் வீட்டி போட்டியாளர்கள் இந்த ஒரு வாரமும் என்ன தப்பு செய்தார்கள் என குறும்படம் போட்டு காண்பிப்பார்.
அந்த வகையில், இந்த வாரம் ரம்யா ஜோ-விற்கு குறும்படம் போட்டு காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற கேள்வியும் வலுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்த நந்தினி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த நந்தினி
பிக்பாஸ் வீட்டில் 17-வது போட்டியாளராக நுழைந்த நந்தினி கோவையைச் சேர்ந்தவர். அப்பாவை இழந்து தனியொருவராக குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், தொடர்ந்து அம்மாவையும் இழந்துள்ளார். தற்போது தனியொருவராக இருந்து குடும்பத்தை நடத்திவருகிறார். உடற்பயிற்சியையும் யோகாவையும் வாழ்வில் மிக முக்கியமாகக் கருதுபவர். நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர். பெற்றோர் இல்லாத நிலையில், தனது தம்பி மற்றும் தனது எதிர்காலத்துக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
#Nandhini exiting the show through the left door in confession room!
— BB Mama (@SriniMama1) October 10, 2025
Pressure inside the house is real unfortunately this is not the ground for everyone!
REAL vs REEL 🤝🤝
Last i remember was #PradeepAntony 💔#BiggBossTamil9#BiggBoss9Tamil
pic.twitter.com/nawar4edc0
பிக்பாஸிலிருந்து வெளியேறிய நந்தினி
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் தனிப்பட்ட முறையில் தன்னை பாதிப்பதாகவும் இதனால் தான் இந்த பொய்யான இடத்தில் இருக்க விரும்பவில்லை என நந்தினி கூறியதைத் தொடர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல பிக்பாஸ் அனுமதி வழங்கியுள்ளார். கன்சஷன் ரூம் வழியாக நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் நந்தினிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவர் சிம்பதிக்காக இப்படி செய்வதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.