/tamil-ie/media/media_files/uploads/2018/08/vaishnavi-and-senrayan.jpg)
பிக் பாஸ் தமிழ் 2 எவிக்ஷன், bigg boss tamil 2 eviction
பிக் பாஸ் தமிழ் 2 : நிகழ்ச்சி தொடங்கி சுமார் 55 நாட்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் 7வது நபராக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வைஷ்ணவை வெளியேற்றப்பட்டார்.
சூடு பிடிக்கும் பிக் பாஸ் தமிழ் 2 வீடு:
கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி முதல் 50 நாட்கள் ‘ரொம்ப போர்’ என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் இருந்து அதிக சூடு பிடிக்கத் தொடங்கியது. ஒவ்வொருவரின் உண்மை முகமும் வெளியே வரத் தொடங்கியது.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/bigg-boss-tamil-2-1-1.jpg)
மகத் - யாஷிகா இடையே ஏற்பட்ட சண்டை, மோமோ என்று மும்தாஜிடம் ஆசையாக பழகி வந்த ஐஸ்வர்யா திடீரென வில்லியாக மாறியது, கடந்த வாரம் வரை மகத் பக்கம் நியாயம் இருப்பது போல் பேசி வந்த பாலாஜி திடீரென பல்டி அடித்து யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா பக்கம் சாய்ந்தது என அனைத்திலும் பல திருப்பங்கள் ஏற்பட்டது.
#பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?! ????????#BiggBossTamil - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/GIlO27F7KU
— Vijay Television (@vijaytelevision) 19 August 2018
இந்த வாரம் எவிக்ஷன் சுற்றுக்கு தள்ளப்பட்ட போட்டியாளர்களில் ரித்விகா, ஜனனி, டேனியல் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். இறுதியாக மீதம் இருந்தது சென்ராயன் மற்றும் வைஷ்ணவி தான். விக்ஷனுக்கு முன்பு கமல் ஹாசன் இது பற்றி கேட்டப்போது எவிக் ஆவதற்கு விருப்பமில்லை என்று வைஷ்ணவி கூறியிருந்தார்.
பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் நடந்த 7வது எவிக்ஷன்:
கடந்த வாரம் பொன்னம்பலத்தை வீட்டிற்குள் வந்து கமல் ஹாசன் அழைத்துச் சென்றது போலவே இந்த வாரமும் புதிய வடிவத்தில் எவிக்ஷன் செய்யத் திட்டமிருந்தார் பிக் பாஸ். வைஷ்ணவியை கன்ஃபெஷன் ரூமிற்கு செல்லச் சொன்னார், சென்ராயனை ஸ்டோர் ரூமிற்குள் சென்று நிற்கும்படி கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/vaishnavi-and-senrayan.jpg)
இருவரும் பிக் பாஸ் பேச்சை பின்பற்றி அவரவர் அறைக்கு சென்றனர். அப்போது கன்ஃபெஷன் அறைக்குள் இருந்த வைஷ்ணவியிடம் “நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுகிறீர்கள்” என்றார் பிக் பாஸ். இதனை தொடர்ந்து அந்த அறையில் இருந்து நேரடியாக வெளியேறினார் வைஷ்ணவி.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/vaishnavi-evicted.jpg)
பின்னர் யார் எவிக்ட் ஆனார் என்பதை அறிந்துக்கொள்ள போட்டியாளர்களை அறைக்குள் சென்று பார்க்கச்சொன்னார் பிக் பாஸ். அதனை கேட்டு அறைக்குள்ளே சென்று பார்த்தபோது வைஷ்ணவி எவிக்ஷனாகி வெளியேறியதை அனைவரும் தெரிந்துக்கொண்டனர். பின்னர் அனைத்து போட்டியாளர்களையும் கமல் ஹாசனுடன் இணைந்து அஹம் டிவி வழியாக வைஷ்ணவி சந்தித்தார். இறுதியாக இந்த நிகழ்ச்சியை விட்டு விடைப்பெற்று கொண்டார்.
பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் இந்த வாரம் எவிக்ஷன்:
இந்த வாரத்திற்கான எவிக்ஷன் இன்று நடைபெறுகிறது. இதில் வரிசையாக பானைகளை வைத்து அதில் போட்டியாளர்களின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர்கள் ஃபோட்டோ உள்ள பானை முன்பு நின்று யாரை ஏன் எவிக்ட் செய்ய வேண்டும் என்று கூறவேண்டும்.
இந்த வாரத்திற்கான நாமினேசன்! ???????? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/FILRGhkAuh
— Vijay Television (@vijaytelevision) 20 August 2018
இவ்வாறு கூறி பின்னர் அந்த போட்டியாளர் பானையை உடைக்க வேண்டும். எந்த பானை அதிகமாக உடைக்கப்பட்டிருக்கிறதோ, அவரே எவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில் இந்த வாரம் நிச்சயம் மகத் மற்றும் ஐஸ்வர்யா தேர்வாகிறார் என்று தெரிகிறது.
#யாஷிகா காப்பாற்றப்போகும் ஒரு போட்டியாளர் யார்?! ???????? #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/HTAnjra5a8
— Vijay Television (@vijaytelevision) 20 August 2018
மேலும், இப்போதைய வீட்டின் தலைவியான யாஷிகாவை அழைத்து எவிக்ஷனில் இருந்து ஒருவரை காப்பாற்ற வேண்டுமென்று பிக் பாஸ் கூறுகிறார். மகத் - ஐஸ்வர்யா தேர்வாகியிருந்தால் யாரை அவர் காப்பாற்றுகிறார் என்பதை இன்று காத்திருந்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.