பிக் பாஸ் 2 வீட்டிற்குள் விஷ பாட்டிலாக மாறிய நடிகர் கார்த்தி... செம்ம கடுப்பில் மும்தாஜ்

bigg boss tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்கு கடைக்குட்டி சிங்கம் குழுவினர் வருகை. இன்று வரும் நடிகர் கார்த்தி போட்டியாளர்களை மன்னிக்க...

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வீட்டிற்குள் சென்கின்றனர் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர். பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதாநாயகன் கார்த்தி, காமெடியன் சூரி மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் ஆகியோர் வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்குள் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினர்:

கடைக்குட்டி சிங்கம் படத்தின் புரோமோஷனுக்காக இன்று பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்கு இவர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் பிக் பாஸ் தமிழ் 2 குடும்பத்தினர் அமோக வரவேற்கின்றனர்.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெளியீட்டை அனைவரும் இணைந்து சிறப்பாக கொண்டாடும் வேளையில், நாரதர் வேலை ஒன்றைச் செய்தார் நடிகர் கார்த்தி. வீட்டை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்று அவர் கேட்க, பதிலுக்கு ‘வீடு க்ளீனா இல்லை மன்னிசிருங்க’ என்று மும்தாஜ் கூறுகிறார். அதற்கு, ‘அதெல்லாம் மன்னிக்க முடியாது… ஊரே பாக்குது’ என்று கூறிவிட்டார். இதனால் மும்தாஜ் நிச்சயம் கோவமடைவார் என்று எதிர்பார்க்கலாம். சும்மாவே க்ளீன் ஹைஜீன் என்று பேசும் மும்தாஜ், வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் அமைதியாகவா இருப்பார்.

சரி கொளுத்திப் போட்டதும் போதும் என்று இத்துடன் நிறுத்தாமல், அடுத்த இடியை இறக்கினார். பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் இருப்பவர்களின் பட்டப்பெயர்களை கூறும்படி டேனியலிடம் கேட்டார் இயக்குநர் பாண்டியராஜ். சற்றும் யோசிக்காமல் அனைவரின் பெயர்களையும் கூறும்போது, வைஷ்ணவியை “நாராயணா நாராயணா” என்று வைஷ்ணவியை கேலி செய்கிறார்கள்.

பட்டப்பெயர்களைக் கூறும்போது சபையில் சிரித்து சகஜமாக இருப்பது போல் இருந்தாலும், மனதளவில் காயப்பட்டுள்ளார் வைஷ்ணவி. இது குறித்து ஜனனி மற்றும் ரம்யாவிடம் பேசுகிறார். இதன் பிரமோவும் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் முழுவதும் திருடன் போலீஸ் டாஸ்கில் ஏற்பட்ட மோதல்கள் அனைத்தும் நீங்கி, பிரபலங்களின் வருகையால் மகிழ்ச்சி நிறையுமா அல்லது பிரச்சனைகள் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

×Close
×Close