Advertisment

Bigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை... பாலாஜி - நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா?

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் நித்யாவும் கலந்துக் கொண்டனர். இவர்களுக்குள் வெங்கயத்திற்கெல்லாம் சண்டை வருமா?

author-image
Vaishnavi Balakumar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

Bigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாய் தொடங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் யாஷிகா, மும்தாஜ், ஜனனி உட்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து சர்ச்சைக்குரிய தம்பதி பாலாஜி மற்றும் நித்யாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.

Advertisment

Bigg Boss Tamil 2: balaji and nithya - பிக் பாஸ் தமிழ் 2: பாலாஜி மற்றும் நித்யா Bigg Boss Tamil 2: balaji and nithya - பிக் பாஸ் தமிழ் 2: பாலாஜி மற்றும் நித்யா

என்னடா இவ்வளவு அமைதியாக இருக்கிறது என நினைத்து முடிப்பதற்குள் வெடித்திருக்கிறது ஒரு சண்டை. என்ன சண்டை? வெங்காயம்.... அட வெங்காயம் பற்றிய சண்டைனு சொன்னேன்.

பிக் பாஸ் 2 தமிழ் வீட்டில், 3வது நாளே தம்பதிக்குள் நடந்த சண்டை:

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில், முதல் நாளிலேயே சமையல், வெஸல் வாஷிங், க்ளீனிங் டீம் என அனைத்திலும் ஆட்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் சமையல் அணியில், மும்தாஜ் மற்றும் மகத்துடன், நித்யாவும் இருக்கிறார். சமையல் அணியில் இருந்தால், அனைவருக்கும் சமைத்து தானே ஆக வேண்டும், அதுவும் அவர் அவர்கள் பிடித்ததையும் ஏற்றுக்கொண்டு சமைத்தாக வேண்டுமே. அப்போ.... பாலாஜி?

Bigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் பற்றிய செய்திக்கு இதைப் பார்க்கவும்

இப்படிதான் நித்யா சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருக்க இது தான் சாக்கு என்று பாலாஜி வெங்காயம் போடு என பேசத் தொடங்குகிறார். நித்யா சமைக்கும் உணவில் வெங்காயம் போடு எனக் கூற, அதனை மறுக்கிறார் நித்யா.

Bigg Boss Tamil 2 Balaji and Nithya : பிக் பாஸ் தமிழ் 2 பாலாஜி நித்யா Bigg Boss Tamil 2 Balaji and Nithya : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் வெங்காயம் போட மாட்டேன் என கூறும் நித்யா

உடனே கடுப்பான பாலாஜி, ‘இதில் வெங்காயம் போடனுமா வேண்டாமா’ என கேட்கிறார். உடனே நித்யாவுக்கு வருகிறது கோபம்.

Bigg Boss Tamil 2 Balaji Nithya பிக் பாஸ் தமிழ் 2 பாலாஜி நித்யா Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் நித்யாவுடன் வாக்கு வாதத்தில் பாலாஜி

இதில் சமையல் வேலை அனைத்தும் தாமதமாக, சக போட்டியாளர்கள் பட்னியுடன் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தில் உள்ள பெண்களில், தாய் போல மதிக்கப்படும் மும்தாஜ் இதனை பார்த்தார்.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் பாலாஜி மற்றும் நித்யா Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் பாலாஜி மற்றும் நித்யாவை கண்டித்த மும்தாஜ்

குடும்பத்தில் உள்ள சக நபர்கள் பட்டினியாக இருப்பதை கண்டு கோபத்தில் பொங்கி எழ, ‘உங்கள் சொந்த பிரச்சனைகளை வேலையுடம் முடிச்சு போடாதீர்கள். இதனால் அடுத்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது நல்லதல்ல.’ என திட்டவட்டமாக கூறுகிறார்.

இப்படி வெங்காயத்துக்காக சண்டை போட்டால், வீடு என்னாவது? இன்றை பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் வெங்காய சண்டையில் பார்க்கும் நம் கண்கள் எரியப்போகிறது. வெங்காயம் சண்டையின் கட்சேரி ஒருபுறம் நடைபெற போகிறது என்றால், காலை உணவு பிரச்சனை ஒன்று புதிதாக எழுகிறது. இதில் மும்தாஜ் மற்றும் நித்யா இடையே மோதல் ஏற்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி இன்று சண்டை எபிசோடாக மாறப்போவது உறுதி. இதற்கு இடையில், ஐஷ்வர்யாவும் யாஷிகாவும் பலத்த பிளேனிங்கில் இறங்கியுள்ளார்கள். கமல் ஹாசன் சொன்னது போலவே வீடு ரணகளம் தான்.

Bigg Boss Tamil Vote
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment