/tamil-ie/media/media_files/uploads/2018/09/bigg-boss-tamil-2-eviction.jpg)
bigg boss tamil 2 eviction, டேனியல்
பிக் பாஸ் 2 இல்லத்தில் இருந்து இந்த வாரம் டேனியல் வெளியேற்றப்படுகிறார். எப்போதும்போல ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தப்பித்துக்கொள்ள, நியாயமாக நடந்துக்கொண்டவர்கள் சிக்கிக் கொண்டனர்.
வீட்டை விட்டு வெளியேறும் டேனியல்:
கடந்த வாரம் நடைபெற்ற உத்தமர்கள் டாஸ்கில், சரியாக விளையாடாத போட்டியாளர்கள் பட்டியலில், பாலாஜி, ரித்விகா, ஜனனி மற்றும் டேனியல் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில் அவர்கள் அனைவரும் நேரடியாக டேன்ஜர் சோனுக்கு தள்ளப்பட்டனர். இதில் போட்டியாளர்கள் பற்றி சரியாக புரிந்து வைத்த காரணத்திற்காக ரித்விகா காப்பாற்றப்படுகிறார். அந்த வகையில், மீதம் 3 பேர் எவிக்ஷனுக்கு தேர்வாகினர்.
இதையடுத்து இந்த வாரம் நடைபெற வேண்டிய நாமினேஷன் தேர்வு சுற்றை பிக் பாஸ் நடத்தவில்லை. இதனால் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை அவர்கள் செய்யும் தவறுகளை மீறி பிக் பாஸ் காப்பாற்றி வருவதாக போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்று நடக்கும் எவிக்ஷன் குறித்த புரொமோ வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள 3 பேரில், மக்களிடம் மிகவும் குறைந்த ஆதரவு வாக்குகள் பெற்று இன்று பிக் பாஸ் 2 வீட்டை விட்டு வெளியே செல்கிறார் டேனி. இவரின் இந்த வெளியேற்றம் அவரின் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகத் வெளியேறியது பற்றி படிக்க:
எல்லா வாரமும் ஏதோ ஒரு காரணத்தை காட்டி டி.ஆர்.பி.க்காக ஐஸ்வர்யாவை நிகழ்ச்சியின் குழு எவிக்ஷனில் இருந்து காப்பாற்றுகிறதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.