Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை அந்த வீட்டில் நடந்த பல்வேறு மகிழ்ச்சி மற்றும் சோகம் தரும் விஷயங்களை நாம் பார்த்திருப்போம்.
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் ஆகிவிட்டதாக நேற்று நடந்த எபிசோடில் கமல் ஹாசன் தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை கடந்து வந்த பாதையில் பல பிரச்சனைகள் நிகழ்ந்துள்ளது. போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையே சண்டை போடுவதும், பிறகு சமாதானம் ஆவதும் நமக்கு ஒன்றும் புதிதல்ல.
Bigg Boss Tamil 2 : 50 நாட்களை எட்டிய பிக் பாஸ் தமிழ் 2:
ஆனால், இதுவரை நடந்த சமாதான டிராமாக்களையெல்லாம் மிஞ்சியது நேற்றைய நிகழ்வு. கடந்த வாரம் எலியும் பூனையுமாக இருந்த பாலாஜி - ஐஸ்வர்யா திடீரென நகமும் சதையுமாக மாறிவிட்டனர். ‘நீங்க எப்போ சாப்டாமே இருக்காதிங்கே.. ப்ளீஸ்’ என்று கெஞ்சிய ஐஸ்வர்யா ஒருபுறம்; ‘சரி விடு... கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு... உன் கல்யாணத்துலா நான் தான் வந்து சாம்பார் ஊத்துவேன்’ என்று பாசத்தை பொழுயும் பாலாஜி மறுபுறம் என்று ஒரு பாசமலர் காட்சியே ஓடியது.
இவ்வளவு பாசப் பிணைப்பும் ஒருவேளை எவிக்ட் ஆனால், தன்னை தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக இருவரும் நடத்தியது. ஆனால் நீங்கள் நினைப்பதையெல்லாம் பிக் பாஸ் நிகழ்த்த மாட்டார். அவர் வழி தனி வழி என்பது போல, ஷாரிக் வீட்டில் இருந்து வெளியேறினார். இவரின் வெளியேற்றம் போட்டியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஏமாற்றம் அளித்தது.
ஷாரிக் எவிக்ஷன்
‘சர்வாதிகாரி’ டாஸ்க் வாரத்தில் ஷாரிக் மீது ஐஸ்வர்யா கொண்டிருந்த கோபம் அவர் வெளியேறும்போது அப்படியே கரைந்து கண்ணீராக ஓடியது. அதே நாளில் தான் பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா இருவர் மீதும் இருந்த கோபத்தையெல்லாம் மறந்துவிட்டு பழம் விட்டுக்கொண்டார்கள்.
August 2018
அப்பாடா இனிமேல் சண்டை எதுவும் இருக்காது என்று நினைத்திருந்த சமயத்தில், அசரீரி ஒலிப்பதுபோல ஒரு புரோமோவை ரிலீஸ் செய்தார் பிக் பாஸ்.
August 2018
வீட்டிற்குள் இருக்கும் ஆக்டிவிட்டி ஏரியாவில், நீதிமன்றம் செட்டப் போடப்பட்டுள்ளது. அங்கு இந்த வாரம் தலைவி யாஷிகா நீதிபதியாக அமர்த்தப்படுகிறார். அப்போது, தனது தரப்பு வாதத்தை பாலாஜி முன்வைக்கிறார். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது மகத், திடீரென கோவத்தின் உச்சத்தை அடைந்து அன்னியனாக மாறுகிறார். இந்த சண்டையை பார்த்ததும், சண்டை இனிமேல் இருக்காது என்ற நினைத்த நமக்கு ‘அஸ்கு புஸ்கு’ என்கிறார் பிக் பாஸ்.