Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இன்று 3வது எவிக்ஷன் நடைபெற உள்ளது. 4வது வாரத்தின் இறுதியில் பாலாஜி, நித்யா மற்றும் யாஷிகா ஆகிய மூவரில் ஒருவர் இன்று வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடங்கிய 4 வாரத்திற்கு இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். 2வது வாரத்தில் மமதி சாரி மற்றும் 3வது வாரத்தில் அனந்த் வைத்தியநாதன் என இரண்டு பேரும் பிக் பாஸ் 2 வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 4 வது வாரத்தின் இறுதி நாளான இன்று 3வது போட்டியாளர் ஒருவர் வெளியே செல்கிறார்.
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் 4வது வாரத்தின் இறுதியில் நடந்தது, நடக்கப்போவது என்ன?
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்கம் போல கமல் ஹாசன் பிக் பாஸ் தமிழ் 2 போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார். அந்த உரையாடலில், போலீஸ் திருடன் டாஸ்க், வாழ்க்கையில் சென்ராயன் சந்தித்த சவால்கள், ஏழையின் பசி, மகத் – பாலாஜி இடையே நடந்த சண்டை, மற்றும் இந்த வாரத்தின் தலைமை பொறுப்பில் தவறிய கடமைகள் எனப் பல விஷங்கள் குறித்து பேசினார்.
சிந்தியுங்கள்! #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/8mXg3nbg4d
— Vijay Television (@vijaytelevision) 14 July 2018
இறுதியாக நேற்று எவிக்ஷன் குறித்து பேசுகையில் ஒருவர் இன்று காப்பாற்றப்படுவார் எனக் கூறினார். அந்த வகையில் நேற்று எவிக்ஷனில் இருந்து பொன்னம்பலம் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் பாலாஜி, நித்யா மற்றும் யாஷிகா ஆகியோர் இன்று எவிக்ஷன் சுற்றை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்த மூனு பேர்ல eviction ஆகப்போறது யாரா இருக்கும்னு நெனைக்கிறீங்க! ???????? #பிக்பாஸ் – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/y69RQdDHEy
— Vijay Television (@vijaytelevision) 15 July 2018
பிக் பாஸ் தமிழ் 2 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் பாலாஜி இந்த வாரம் காப்பாற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், யாஷிகா அல்லது நித்யா இந்த வாரம் வெளியேற்றப்படலாம். இருவர்களில் யார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.