Bigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று இரண்டு பிரமோக்கள் வெளியகியுள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பரணி இடத்தில் சென்ராயன் வந்திருக்கிறார் என்று பேச்சுக்காக சொன்னது உண்மையாகவே மாறியுள்ளது.
பிக் பாஸ் 2 தமிழ் நேற்று இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் தொடங்கியது. நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் முதல் சீசன் போலவே பிக் பாஸ் 2 தமிழ் சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இரவு 7 மணி முதல் 11 மணி அளவில் நிறைவடைந்தது. தூக்கத்தைக் கூட பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியின் அனைத்து போட்டியாளர்களையும் அறிய டிவி முன்பு ஆவலோடு காத்திருந்தனர்.
Big boss2 tamil : Kamal Haasan - பிக் பாஸ் 2 தமிழ் கமல் ஹாசன்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். யாஷிகா, பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, சென்ராயன், ரித்விகா, மும்தாஜ், பாலாஜி, மமதி சாரி, நித்யா, சாரிக் ஹாசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா என 16 பேர் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
(Bigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம்! ஜனனி, மும்தாஜ் மற்றும் ஓவியா பங்கேற்பு!!!)
இதோடு முடித்தார்களா? அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், 17வது நபராக ஓவியாவையும் பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குள் களமிறக்கினர் விஜய் தொலைக்காட்சி.
Bigg Boss Tamil 2: Oviya - பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஓவியா
பிக் பாஸ் 2 அரங்கமே அதிரும் வகையில் பிரம்மாண்டமாய் அமைந்திருந்தது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்க விழா. பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதி வரை 100 நாட்கள் தங்கும் போட்டியாளர்கள் 3 பேரில் ஒருவரே வெற்றி பெறுவார்கள். பிக் பாஸ் என்றாலே டாஸ்க், போட்டி, பொறாமை மற்றும் சூழ்ச்சி ஆகியவை கலந்ததுதான். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளைக் காலை தான் டாஸ்க் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடத்தில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வீட்டிற்குள் சென்ற இரவே போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்தார் பிக் பாஸ்.
பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குச் சென்றுள்ள 16 போட்டியாளர்களில், 4 பேரின் பெட்டிகள் உள்ளே அனுப்பி வைக்கப்படாது என்றும், அவர்கள் யார் யார் என்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் உத்தரவு போட்டுள்ளார். அதிர்ந்து போனவர்கள், ஒன்று கூடி பேசி 5 நபர்களைத் தேர்வு செய்கின்றனர். இதில் சென்ராயன் தேர்வாகிறார். இது வெறும் போட்டியா அல்லது முதல் நாளிலேயே சென்ராயனுக்கு எதிராக விரிக்கப்பட்ட சூழ்ச்சி வலையா? என்று காத்திருந்துப் பார்ப்போம். பிக் பாஸ் முதல் சீசன் பரணி போன்று பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சென்ராயனுக்கு காத்திருக்கும் அதிரடி திருப்பங்கள் என்ன?
Bigg Boss Tamil 2: பிக் பாஸ் 2 சென்ராயன்
பிக் பாஸ்... மை லுங்கி அண்ராயர் அண்ட் ஆல் நோ... பிளீஸ் ஹெல்ப் மீ என்று கதறும் சென்ராயன். போட்டியாளர்களின் நிலையைப் பார்த்து ‘உங்களை எல்லாம் பார்த்தா எனக்குப் பாவமா இருக்கு’ குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறார் ஓவியா.
வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் இரவு இந்த டாஸ்க் கொடுத்த பிக் பாஸ், காலை 3 என்வெலப்கள் பெட் ரூமில் இருப்பதாகவும், அதனை விரைவில் தேடி எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அப்போது மீண்டும் மும்தாஜ் மற்றும் சென்ராயன் இடையே கருத்து வேறுபாடு எழுகிறது.
பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் என்னவோ பொதுவாக பெட்ரூமில் இருக்கும் என்வலெப்பை தேடி எடுக்க வேண்டும் என்று தான் கூறுகிறார். ஆனால் பெண்களை ஆடைகளை ஆண்கள் யாரும் தொடக்கூடாது என்று அதிகாரம் செய்கிறார் மும்தாஜ். இது சென்ராயனுக்கு சிறிது மன வருத்தத்தை அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம் முதல் நாளிலேயே சென்ராயன் புறக்கணிக்கப்படுவது தெளிவாக தெரிகிறது.