/tamil-ie/media/media_files/uploads/2018/06/bigg-boss-tamil-2.jpg)
bigg boss tamil 2
பிக் பாஸ் 2 இன்னும் கொஞ்சம் நாட்களில் தொடங்க போகுது. சரியாக ஜூன் 17ம் தேதி முதல் தினமும் இரவு 9 மணிக்கு இந்த ஷோ திரையிட முடிவு செய்யப்பட்டிருக்கு. கடந்த வருஷமே பெரிய அளவில் ஹிட் ஆன இந்த ஷோ, எல்லாருடைய கவனத்தையும் கமல் ஹாசன் மேல திருப்பிச்சு. இந்த வருஷமும் அதே போல தான். இந்த ஷோவுக்காக அந்த தனியார் சேனல் கமல் ஹாசனை உபயோகம் செய்ய, கமல் ஹாசன் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு இந்த ஷோவை பயன்படுத்த முடிவு செஞ்சிருக்கார்.
சரி சரி, இந்த ஷோ பற்றி ரொம்ப சீரியஸா தான் அந்த டீம் இருக்கங்கனு தெரியுது. அதுக்காக இப்படியா? கேப் விடாம அடுத்தடுத்து 3 ப்ரமோக்களை ரிலீஸ் செஞ்சிருக்காங்க பிக் பாஸ் 2 டீம். ஆனா இதுல ஒரு ரகசியம். வெரும் 20 வினாடிகள் மட்டுமே கொண்டு ரிலீஸ் ஆகும் இந்த ப்ரமோவில், போட்டியாளர்கள் யாரு, அவங்க எப்படிப்பட்டவங்க என்கிற ரகசியத்தை மறைத்து வச்சிருங்காங்க. ஒரு ப்ரமோவில் இரண்டு பேருடைய குணத்தை பற்றி பேசுறாரு கமல் ஹாசன். இதுவரைக்கும் 20 வினாடிகள் மட்டும் வைத்து 3 பிரமோ ரிலீஸ் செஞ்சிருக்காங்க:
பிரமோ 1:
Promo no. 3 hope you are excited for #BiggBossTamil2#BiggBossTamilpic.twitter.com/jCcY0U28YG
— BiggBossTamil Season 2 (@BiggBossTamil2) 5 June 2018
பிரமோ 2:
Promo no. 5#BiggBossTamil2#BiggBossTamilpic.twitter.com/db0CdSgrc2
— BiggBossTamil Season 2 (@BiggBossTamil2) 6 June 2018
பிரமோ 3:
Here is the 6th promo of #BiggBossTamil2#BiggBossTamilpic.twitter.com/1iAawitqnI
— BiggBossTamil Season 2 (@BiggBossTamil2) 7 June 2018
என்னங்க... பிரமோ எல்லாம் பார்த்தாச்சா? ஒவ்வொரு பிரமோவிலும் இரண்டு பேர் பற்றிய க்ளூ இருக்கு. யோசிச்சு வச்சிக்கோங்க. சீக்கிரம் யாரு எப்படி என தெரிய வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.