Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இன்று 4வது போட்டியாளராக இன்று மேலும் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த திருடன் போலீஸ் விளையாட்டில், பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. பொதுமக்கள், போலீஸ் மற்றும் திருடன் என 3 அணிகளில் போட்டியாளர்கள் பிரிந்து குழுக்களாக விளையாடினர். அந்த விளையாட்டில், போலீஸ் குழுவில் இருந்தவர்கள் பொதுமக்களை பாதுகாக்காமல் திருடர்களுக்கு ஆதரவாகவே இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இரு பிரிவினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அந்த விளையாட்டு நடைபெற்ற வாரத்தில் ரம்யா வீட்டின் தலைவராக இருந்தார். அப்போது ஏற்பட்ட சண்டைகளின் காரணமாக பொதுமக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் விளையாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்தார். இதனால் ரம்யா நேரடியாக எவிக்ஷனுக்கு தேர்வாகினார்.
இந்த வாரம் நடைபெற இருக்கும் எவிக்ஷனில் வீட்டை விட்டு 4வதாக ஒரு போட்டியாளர் வெளியே செல்ல உள்ளார். இந்த வாரம் எவிக்ஷனுக்கு ஐஸ்வர்யா, பொன்னம்பலம், ஜனனி, தாடி பாலாஜி மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வாகியிருந்தனர். இந்நிலையில் ஜனனி, பொன்னம்பலம் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
இறுதியாக மீதம் இருக்கும் பாலாஜி, ஐஸ்வர்யா மற்றும் ரம்யா என 3 பேரில், இந்த வாரம் ரம்யா எவிக்ட் ஆவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆதாரமாக சிலர் போட்டியை விட்டு ரம்யா வெளியேறியதாக அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பதிவு செய்கின்றனர்.
இணையத்தளம் முழுவதும் ரம்யா வெளியேறுவார் என்று கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக யார் வெளியேறுகிறார் என்பதை இன்று இரவு பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.