பிக் பாஸ் தமிழ் 2: இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கு ஆனால் இல்லை… எப்படி?

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 இன்றைய நிகழ்ச்சியில் 5வது போட்டியாளருக்கான எவிக்‌ஷன் நடைபெறும் நேரத்தில் பெரிய டுவிஸ்ட் வைக்கப்பட்டுள்ளது

By: Updated: July 29, 2018, 11:24:01 AM

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இன்று நடைபெற இருக்கும் எவிக்‌ஷன் சுற்றில் பொதுமக்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு பெரிய டுவிஸ்ட் வைக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த முதல் சீசன் போலவே மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி:

இதுவரை பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று 5வது எவிக்‌ஷன் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்த எவிக்‌ஷனில் தான் ஒரு பெரிய டுவிஸ்ட் காத்திருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனைகள் வருவதற்கு இவர் தான் காரணம் என்று பலராலும் விமர்சிக்கப்படுபவர் வைஷ்ணவி. முதல் வாரத்தில் இருந்தே இவர் மீது இந்த குற்றச்சாட்டுகளை போட்டியாளர்கள் சுமத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் எவிக்‌ஷன் சுற்றுக்கு இதே காரணத்தால் அவர் தேர்வு செய்யப்பட்டார். இவர்களுடன், பொன்னம்பலம், யாஷிகா, மகத், மும்தாஜ் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். இருப்பினும் வழக்கம் போல பொன்னம்பலம் மற்றும் மும்தாஜ் காப்பாற்றப்படுகிறார்கள். இறுதியாக மகத், யாஷிகா மற்றும் வைஷ்ணவி மீதம் இருக்கும்போதே நமக்கு ஓரளவிற்கு ரிசட்ஸ் தெரிகிறது. மகத் அல்லது யாஷிகா வெளியேறினால் பிறகு பிக் பாஸ் எப்படி சூடு பிடிக்கும். அதோடு ‘மகத் கோவக்காரன் ஆனால் நல்லவன்’ என்றும், ‘யாஷிகா ஆர்மி’ என்றும் இரண்டு கும்பல் பொதுமக்கள் இடையே இருக்கும்போது அவர்களின் எவிக்‌ஷன் நம்மால் எதிர்பார்க்க முடியாது.

bigg boss tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 bigg boss tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 இந்த வார எவிக்‌ஷன்

இந்நிலையில், வைஷ்ணவியை பற்றி போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்திருக்கும் எண்ணத்தில் ஒரு ஒற்றுமை இருப்பதால் இன்று அவரே எவிக்ட் ஆகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் எவிக்ட் ஆகும் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரவில்லையாம். பிக் பாஸ் முதல் சீசன் சுஜாவை வைத்த சீக்ரெட் அறை நியாபகம் இருக்கிறதா? அதே ஃப்லேஷ்பேக் தான் இந்த வாரமும் ஓட்டப் போகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

bigg boss tamil 2 - பிக் பாஸ் தமிழ் 2 bigg boss tamil 2 – பிக் பாஸ் தமிழ் 2

வைஷ்ணவியை எவிக்ட் செய்வது போல் செய்து, அவரை சீக்ரெட் அறையில் அடைத்து வைக்கப் போகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த விஷயம் நடந்தால் பொதுமக்கள் நமக்கு தெரியும் ஆனால் போட்டியாளர்களுக்கு தெரியாது. ஒரு வேளை இது நடந்து என்றேனும் ஒரு நாள் மீண்டும் வீட்டிற்குள் வைஷ்ணவி சென்றால் என்ன நடக்கும்? எத்தனையோ எண்ணங்கள் நம் மனதில் அலைப்பாயும். ஆனால் இது தான் நடக்க உள்ளதா என்று இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் உறுதியாக தெரியும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 2 todays eviction

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X