பிக் பாஸ் 2 : இதற்கு தானே ஆசைப்பட்டாய் நெட்டிசன்களா? ???? பெட்டியை பேக் செய்யும் ஐஸ்!

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் பொதுமக்கள் வெகுநாட்களாக ஆர்வமாக காத்திருந்த ஐஸ்வர்யா எவிக்‌ஷன் பிராசஸ் இந்த வாரம் நெருங்குகிறது.

ஐஸ்வர்யா வெளியேற்றமா?

பிக் பாஸ் 2 சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் அனைவரும் குழந்தை போல கொஞ்சும் அளவிற்கு வெகுளியாக இருந்த ஐஸ்வர்யாவின் உண்மை குணம் அடுத்த வாரமே வெளிவந்தது.

இரண்டாவது வாரத்தில் இருந்தே யாஷிகாவுடன் இணைந்து யாரை எப்படி தோற்கடிப்பது. எந்த உத்தியை பயன்படுத்தி அடுத்தவர்களை கவிழ்ப்பது என்று திட்டம் தீட்டினார். பின்பு, ஷாரிக்குடன் இணைந்து அவர் நிகழ்த்திய காதல் காட்சிகள் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

நேற்று நடந்த எவிக்‌ஷன் பற்றி அறிந்துக்கொள்ள:

இரண்டு வாரங்களுக்கு முன்பு, யாஷிகா மற்றும் மகத் இடையே இருக்கும் உறவால் அவர்கள் நடந்துக்கொண்ட விதத்திற்கும் மகத்தின் கோவத்திற்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். அவர் ரெட் கார்டு கொடுத்து எவிக்ட் ஆனார்.

மகத் எவிக்‌ஷன் குறித்து படிக்க:

அந்த வகையில், இந்த வாரம் அதே போன்ற ஆப்பு ஒன்று ஐஸ்வர்யாவிற்கு காத்திருக்கிறது. ஹிட்லர் டாஸ்கில் தொடங்கி இன்று வரை அவர் நடந்துக்கொள்ளும் விதம், பொதுமக்களிடையே எரிச்சல் மூட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெகுநாட்களாக இவரின் எவிக்‌ஷனுக்கு காத்திருக்கின்றனர்.

அந்த எவிக்‌ஷன் பிராசஸ் இந்த வாரம் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து ஐஸ்வர்யாவை தேர்வு செய்கின்றனர். இதன் புரொமோ இன்று வெளியாகியுள்ளது.

மேலும், இவருடன் மும்தாஜ் மற்றும் சென்ராயன் எவிக்‌ஷனுக்கு தேர்வாகின்றனர். எனவே இதனை அடிப்படையாக கொண்டு மற்றொரு டாஸ்க் நடக்கிறது. அதில், தேர்வான மூன்று பேரிடம் போட்டியாளர் பேசுகின்றனர். அப்போது விஜயலட்சுமி பேசுகிறார்.

அதில், உங்களுக்கு தமிழ் மக்கள் பற்றி தெரியுமா என்று தெரியவில்லை. அவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால், தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதுவே தவறு செய்தால் கடினம். தமிழ் மக்கள் முட்டாள் இல்லை என்று சரவெடியாய் வெடிக்கிறார். இதனை கேட்ட பிறகு வழக்கம் போல ஐஸ்வர்யா அழுகிறார், யாஷிகா சமாதானம் செய்கிறார்.

இதை தொடர்ந்து 3வது புரொமோவில், ரித்விகா சும்மா நறுக்குனு ஒரு கேள்வி கேட்கிறார். அதில், “எவிக்‌ஷனுக்கு நீங்கள் பயப்படுவது ஏன்? ஒரு முறை மக்களுடன் விளையாடி பார்ப்போமா?” என்கிறார்.

எது எப்படியோ. இந்த எவிக்‌ஷனுக்காக காத்திருந்த அனைத்து பார்வையாளர்களும் தற்போது குஷியில் உள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close