Bigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டில் செய்தியாளரின் ஒருநாள் அனுபவம்

ஒருபுறம் கம்பீரமான ’விருமாண்டி’ கமலும் இன்னொரு புறம் கூலான ’பேட்ட’ ரஜினியும் இருந்தார்கள்.

Bigg Boss Tamil 3 House Visit: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் நேற்று தொடங்கியது. அதற்கு முன்பாக, ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் அழைக்கப்பட்டு, ஒருநாள் முழுவதும் அங்கு இருக்க வைக்கப்பட்டார்கள்.

முதல் சீசனில் அந்த வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். ஆனால் அந்த அனுபவம் எனக்கு இனிமையானதாக இல்லை. காரணம் ஓரிருவரைத் தவிர மற்றவர்களிடன் என்னால் சகஜமாகப் பழக முடியவில்லை. அதனால் நானே முதலில் ‘எவிக்ட்’ ஆனேன். ஆனால் இந்த முறை எல்லாவற்றிற்கும் தயாராக உள்ளே சென்று, ஜாலியாக என்ஜாய் செய்தேன்.

24 மணி நேரம் அங்கு செலவிட்டது ஒரு ‘டீடாக்ஸ்’ நிகழ்ச்சி போலிருந்தது. ஃபோன், புத்தகம், செய்தித்தாள், கடிகாரம், இண்டெர்நெட் என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் இல்லாமல் இருந்தது ஒரு வித்தியாச அனுபவமாக இருந்தது. பொதுவாக தூக்கம் வராத எனக்கு, அன்று நல்ல தூக்கம் வந்தது. புறம் பேசுவதற்கும், வஞ்சகம் பழகுவதற்கும் பிக்பாஸ் வீடு மிகச்சிறந்த இடம். நமது உண்மை ‘முகத்தை’ வெளியே கொண்டு வருவதே இதன் அடிப்படை.

bigg-boss-tamil-3-bedroom-759

நாங்கள் காலை 7 மணிக்கு பிக்பாஸ் செட்டை அடைந்தோம்.  எங்களுக்கு இட்லி-சட்னி, பொங்கல்-சாம்பார், பூரி-மசாலா, ஃபில்டர் காஃபி காலை உணவாக வழங்கப்பட்டது. நன்றாக தெரிந்தவர்களும், பார்த்த முகத்தினரும் அங்கு இருந்தார்கள். ’ஹாய் ஹெலோ’வை பரிமாறிக் கொண்டோம். நாங்கள் இரண்டு பேர் வீதம் கண்களைக் கட்டி வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டோம். தோள்பட்டையில், மைக் இருக்கும் பையை அணியுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, கறிப்பறைக்கு செல்லும் போதும், தூங்கும் போதும் இதனை கழட்டிக் கொள்ளலாம்.

அங்கு பிக் பாஸின் கண்களில் இருந்து தப்பிக்கவே முடியாது. எல்லாவற்றையும் ஒரு குழு நேரலையில் பதிவு செய்து கண்காணிக்கிறது. எங்கள் செய்கைகள் பார்த்தும், நாங்கள் பேசுவது கேட்டும் கண்காணிக்கப்பட்டது. நாங்கள் சாப்பிடும் போது கூட கேமரா எங்களை சுற்றி வந்து, எங்களது ‘முக பாவனைகளை’ நோட்டம் விடுகிறது.

வீட்டிலிருந்து சிறை தனியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நாங்கள் முதலில் கவனித்தோம். அழகான இருக்கைகளுடன் கார்டன் ஏரியா, சுவரில் சிக்கலான வடிவமைப்பு, பாய்லர் தோற்றத்தில் ஸ்மோக் ரூம், நீச்சல் குளம், பெயிண்ட் அடிக்கப்பட்ட ஃபர்னிச்சர்கள், சிவப்பு நிற டிராக்டர் என அனைத்தும் இருந்தது. வீடு பூட்டப்பட்டிருந்ததால் நாங்கள் அனைவரும் அந்த செயற்கை புல்வெளியில் காத்திருந்தோம். அனைவரும் வந்தப் பிறகு கதவு திறக்கப்பட்டது. டாஸ்க் செய்த பிறகு எங்களில் ஒருவர் ஜெயிலுக்குள் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. முதலில் யாருமே முன்வரவில்லை. கல்-காதிதம்-கத்தரிக்கோல் ரவுண்ட் முடிந்த பிறகு எங்கள் 15 பேரில் ஒருவர் ஜெயிலுக்குள் சென்றார். ஆனால் இரக்க குணம் கொண்ட பிக்பாஸ் அவரின் தைரியத்தை பாராட்டி சில நிமிடங்களிலேயே வெளியில் விட்டு விட்டார்.

நாங்கள் விசாலமான அறைக்குள் நுழைந்தோம். மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் அங்கு அதிகமாக இருந்தது. மீசையுடன் கையில் அறுவாள் வைத்திருந்த ஒருவர் எங்களை வாழ்த்தினார். எங்களுக்கு இடது புறம் மிதிவண்டி இருந்தது. நாங்கள் சற்று முன்னோக்கி செல்கையில் ஒருபுறம் கம்பீரமான ’விருமாண்டி’ கமலும் இன்னொரு புறம் கூலான ’பேட்ட’ ரஜினியும் இருந்தார்கள். பரதநாட்டியம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் மற்றும் நாட்டுப்புற கதைகளின் புராண வடிவங்கள் என தமிழகத்தின் பாரம்பரிய கலைப்படைப்புகளால் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கிரீடம் வைத்த அரக்கனின் வாய் வடிவில் கன்ஃபெஷன் ரூம் இருந்தது. பின்னார் 10 தலை ராவணன், கமல் ஹவுஸ் மேட்ஸுடன் உரையாடும் அகம் டிவி ஆகியவைகளும் அங்கிருந்தன.

ஒரு பெரிய டைனிங் டேபிளுடன், ஹவுஸ் மேட்ஸ் சமைக்கும் இடம் ட்ரக் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. ஸ்டோர் ரூம் பஸர் ஒலித்தவுடன் எங்களுக்கு மதிய உணவு, இரவு உணவு, தேநீர் / காபி மற்றும் பிஸ்கட் ஆகியவைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் போட்டியாளர்கள் அவர்கள் தான் சமைத்துக் கொள்ள வேண்டும். படுக்கை அறையைப் பொறுத்தவரை, இரண்டு பக்கமும் தலா 8 படுக்கைகள் இருந்தன.

bigg-boss-tamil-3-washroom-759

போட்டியாளர்களைப் போலவே எங்களுக்கும் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன. பிறகு 2 பேரை எலிமினேட் செய்ய நாமினேட் பண்ண சொன்னார் பிக்பாஸ். நாங்கள் அது கன்ஃபெஷன் ரூமில் இருக்கும் என எதிர்பார்த்தால், திறந்த வெளியிலேயே பண்ன சொல்லிவிட்டார். இரவு 11 மணியளவில் விளக்குகள் அணைக்கப்பட்டன.

கேட்ஜெட்டுகள் இல்லாமல் நாங்கள் அனைவரும் ஆழமான உரையாடலைக் கொண்டிருந்தோம். காலையில் எனெர்ஜியான ‘மரண மாஸ்’ பாடல் 2 முறை ஒலித்து எங்களை எழுப்பி விட்டது. பெரும்பாலானவர்கள் குளித்து ரெடியாகி, காஃபி-க்கு காத்திருந்தார்கள். சிலர் தூக்கத்திலிருந்து மீளவில்லை.

வெளியில் கிளம்பும் நேரம் வந்தது. நாங்கள் ஆடி பாடி மகிழ்ந்தோம். எங்களது பொருட்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முக்கியமாக காலை உணவு வழங்கப்பட்டது. ஆனால் இங்கு கேமரா இல்லை.

நாங்கள் 1 நாள் இருந்துவிட்டோம். அவர்கள் 100 நாட்கள் இருப்பார்களா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close